அன்னாசி பழச்சாறு

இந்த சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள்(minerals) மற்றும் antioxidants நிரப்பப்பட்டு இருக்கிறது மற்றும் பல உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வாக செயல்படுகிறது. அன்னாசி பழச்சாறு மாதவிடாய் வலியை போக்க உதவும் மாதவிடாய் காலத்தில் அன்னாசி பழச்சாறு குடிப்பது இரத்த சோகையை தவிர்க்க உதவும்.

பீட்ரூட் சாறு

பீட்ரூட்சாற்றில் உள்ள நைட்ரேடுகள் இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் இரத்த போக்கை குறைக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டில் மெக்னீசியம்{magnesium) மற்றும் பொட்டாசியம்(potassium) நிறைந்துள்ளது. இது பெண்களின் ஓட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தர்பூசணி சாறு

தர்பூசணி சாறு சருமத்திற்கு நல்லது செய்வது மட்டுயில்லாமல் உங்கள் உடலை நீரேற்றமாக(hydration) வைத்திருக்கும் மற்றும் மாதவிடாய் வலியை குறைக்கும். தர்பூசணி சாற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது தசைகளை தளர்த்தவும், தசைப் பிடிப்பை(cramps) குறைக்கவும் உதவுகிறது.

கேரட் சாறு

இது வைட்டமின் Aயின் நல்ல மூலமாகும். இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், மாதவிடாய் வலியை குறைக்கவும் உதவும். கேரட் சாறு periods cravingsயை கட்டுப்படுத்த உதவுகிறது. சாதாரணமாகவே கேரட்டில் இனிப்பு சுவை இருப்பதால், அது உங்கள் periods cravingsயை பூர்த்தி செய்வது போல் உணர வைக்கலாம்.