Bandha Sarvangasana (Bridge Pose)

இந்த ஆசனம் செய்யும்பொழுது நம் உடம்பில் உள்ள தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்து, நமது வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை சரியாக வேலை செய்ய வைக்கும். இதனால் PCOS கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இந்த யோகாசனத்தை தினமும் இரண்டு நிமிடம் செய்ய வேண்டும்.

Bhujangasana (Cobra Pose)

Bhujangasana செய்யும்பொழுது நமது உடம்பு Stretch ஆகி மேலும் நன்றாக வளைவதால் நம் உடம்பில் உள்ள அனைத்து மன அழுத்தமும் நீங்கும். PCOD ஐ நீக்க நம் உடம்பின் மன அழுத்தம் கண்டிப்பாக குறைய வேண்டும். மேலும் இந்த ஆசனம் செய்யும் பொழுது நம் கர்ப்பப்பையில் இருக்கும் OVARIES ஐ ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த போஸ் செய்யும் பொழுது 15லிருந்து 30 வினாடிகள் வரை அப்படியே இருக்கும் முயற்சி செய்யுங்கள்.

Dhanurasana (Bow Pose)

நம் தலை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது. மேலும் reproductive system ஐ ஆரோக்கியமாக வைத்து அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் இது உதவுகிறது. PCOD ஐ கட்டுக்குள் வைக்க இந்த ஆசனத்தை தினமும் இரண்டு நிமிடம் வரை வைத்திருக்க முயலுங்கள்.

Naukasana (Boat Pose)

அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகளை மேம்படுத்த மற்றும் அதன் தசைகளை உறுதிப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவியாக இருக்கிறது. இது மன அழுத்தத்தை போக்கி ovary function ஐ சீராக வைத்திருக்க உதவுகிறது. 15லிருந்து 30 வினாடிகள் தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்கள்.

Supta Baddha Konasana (Butterfly Pose)

நாம் சாதாரணமாக செய்யும் butterfly pose ஐ சற்று மாற்றி செய்யும் ஆசனம் தான் இந்த சுப்தபத்த கோண ஆசனம். நம் உடல், பொருள், ஆவி, இவை அனைத்தையும் ஒருநிலைப்படுத்தவும் மற்றும் இடுப்பு பகுதியை சீராக வைத்திருக்கவும் இந்த ஆசனமானது மிகவும் உதவியாக இருக்கிறது. இதை தினமும் ஐந்து நிமிடத்திற்கு செய்யலாம்.

Balasana (Child Pose)

PCOD க்கு சிறந்த ஆசனம் இந்த பாலாசனம். இது நம் உடம்பை நன்றாக நீட்டி stretch செய்ய ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது. நம் இடுப்பை வலுவூட்ட இந்த ஆசனம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதனை தினமும் ஐந்து முறை செய்து வருவதால் PCOD ஐ விரட்ட முடியும். இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் செய்யுங்கள்.

Pranayama (Breathing Exercise)

உங்கள் உடம்பின் மன அழுத்தத்தை போக்குவதற்கும் உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதற்கும் இந்த முறை மிகவும் முக்கியமானதாகும். இதனை சரியாக செய்தால் நம் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்க முடியும். ஆகையால் தான் இந்த உடற்பயிற்சி முறையானது PCOD உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் 15 நிமிடம் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி பிராணயாமா செய்யுங்கள். மேலும் வெறும் வயிற்றில் இதை செய்யாதீர்கள்.