கை கால்களை நன்றாக stretch செய்யுங்கள்!

நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி உங்களின் தசைகளுக்கு ஏற்ற stretch ஐ தருவது அவசியமாகும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து சற்று நடமாடுங்கள்.

உணவின் அளவை நிர்ணயங்கள்!

ஒரு நாளைக்கு உடலுக்கு எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகிறது அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதைத் தாண்டி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு கலோரிகளும் உங்கள் உடம்பில் கெட்ட சத்தாக சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவும் கூட முதுகு வலிக்கு ஒரு காரணமாக இருக்கும்.

Change your Pose:

சில சமயம் நாம் உட்காரும் விதம் மற்றும் வாகனம் ஊற்றும் விதத்தால் கூட முதுகு வலி மற்றும் கழுத்து வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் நேராக உட்கார்ந்து பழகவில்லை என்றால் அந்த அழுத்தமானது முதுகு எலும்பில் தான் சேரும். எனவே சரியான posture என்பது அவசியம்.

Calcium மற்றும் Vitamin D உணவுகள்:

சில சமயம் எலும்புகளின் வலுவின்மை காரணமாக முதுகு வலி ஏற்படலாம். பொதுவாக பெண்களுக்கு இந்த சத்துக்கள் குறைபாட்டால் எலும்பு பலவீனம் ஆகிவிடும். எனவே பால், கீரை, தயிர், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.