நமது தின்பண்டங்கள் முக்காவாசி "வறுக்கப்படும் " "அதிகப்படியான எண்ணெய்" வகையை சார்ந்தது என்பது போல ஒரு பின்பம் இருக்கிறது. ஆனால் நம்மிடம் நல்ல ஆரோக்கியமான , சத்தான திண்பண்டங்கள் இருப்பதை கவனிக்க வேண்டும்.

வறுத்த கொண்டைக்கடலை

இதில் "புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது" என்பதினால் நமக்கு நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும். இதை பல விதங்களில் சாப்பிடேலாம் ஆனால் பெரும்பாலோர் வீடுகளில் இதை சிறிது காரப்பொடி போட்டு நன்கு கலந்து சாப்பிடுவார்கள்.

மக்கானா

அது தாமிரை விதைகள் என்று. இதில் குறைந்த calorie என்பதினால் எவ்வளவு சாப்பிட்டாலும் கலோரி ஏறாது என்பது ஒரு பேச்சுவழக்கம் .ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

சூப்

இது மிகவும் சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் (vitamin) மற்றும் கனிமங்கள் (minerals) நிறைந்தவை. அதனால் இதை பல வகையில் செய்து சாப்பிட்டலாம்.

முளைகள் சாலட் (Sprouts Salad)

இதில் "புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது" என்பதினால் இதை எவ்ளவு வேண்டுமானலும் சாப்பிடேலாம். இதை நாம் சாப்பிடும் உணவோடும் சேர்த்து சாப்பிடேலாம்.

சுட்ட அப்பளம்.

அப்பளம் என்றாலே எண்ணையில் பொறிப்பது அது என்ன சுட்ட அப்பளம் என்றால், அதே அப்பளத்தை தீயில் சுட்டு சப்புவது. இப்படி சாப்புடுவதினால் இருக்கும் நன்மை " எண்ணையில்லாமல் சாப்பிடுவதே". இதை பலர் சூடான வத்தக்கொழம்பு சாதமுடன் சேர்த்து சாப்புடுவது வழக்கம்.

புரத சத்து நிறைந்த உணவுகள்

இது உடல் எடையை குறைக்கும் பொழுது சதை வலுமையை இது பாதுகாக்க உதவும். வறுத்த கொண்டைக்கடலை, வேகவைத்த முட்டை, பாலாடைக்கட்டி அல்லது பனீர், மற்றும் இனிக்காத கிரேக்க தயிர். போன்றவை எல்லாம் புரத சத்து நிறைந்த தின்பண்டங்கள்.