வெளிப்படையான (முட்டையின் வெள்ளை கரு போல)

முட்டையின் வெள்ளை கருவை போன்று ஒட்டும் தன்மை கொண்டதாக இருக்கும். இது கிரீம் அல்லது வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கூட இருக்கலாம். இது ஒரு சாதாரண வெளியேற்றம் தான்.

சிவப்பு

வழக்கமாக, வெளியேற்றம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது உங்கள் மாதவிடாய் சுழற்சி நெருங்கி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் உங்கள் மாதவிடாய் சுழற்சி வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் போது சிவப்பு நிற வெளியேற்றம் வந்தால் அது இயல்பானது அல்ல. எனவே, நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பழுப்பு (Brown)

மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன்பும், முடிந்த பிறகு பழுப்பு நிறத்தில் வெளியேற்றம் வந்தால் அது சாதாரணமானது தான். உங்கள் வெஜைனாவில் அமில சூழல் இருப்பதால் அது சில சமயம் இரத்தத்தை பழுப்பு நிறமாக மாற்றும். இதைத் தவிர்த்து மற்ற நாட்களில் பழுப்பு நிற வெளியேற்றம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிவப்பு அல்லது மஞ்சள்

பச்சை, மஞ்சள் மற்றும் நில நிறத்தில் வெளியேற்றம் இருந்தால் அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது STIயின் அறிகுறியாக இருக்கலாம். என்வே,இதை அலட்சியமாக எடுத்துக கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

தயிர் வெள்ளை

அது ஒரு புஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். வெஜைனாவில் அது தொடர்ந்து அரிப்பை உண்டாக்கும். இதில் "மீன்" அல்லது "அம்மோனியா" அல்லது "உலோகம்" போன்ற துர்நாற்றம் வந்தால் அது பாக்டீரியா வஜினோசிஸைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், நீங்கள் நிச்சயமாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.