பண்டிகை என்றாலே சந்தோஷம் தான். புது படங்கள் டிவியில் போட்டு அதை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதும் ஒரே கூத்தாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பிடித்த உணவுகளை சமைத்து வைத்து அம்மாக்கள் , பாட்டிகள் எல்லாம் சாப்பிடு சாப்பிடு என்று வறுபுறுத்தி சாப்பிட வைக்கும் தருணமும் இருக்கும்.

வகை வகையா வாழை இலையில் பாயாசம் முதல் அப்பளம் வரை ஒரு full கட்டு கட்டிவிட்டு தூங்கும் பொது வரும் சுகம் இருக்கே. யப்பா கோடி ரூபாய் கொடுத்தாலும் வராது. ஆனால் Diet இருபர்களுக்கு இந்த மாறி பண்டிகை நாட்கள் வந்தால் சந்தோச படுவதா? இல்லை கட்டுப்பாடாக இருப்பதா என்று குழப்புவார்கள்

ஒரு வேலை யாராவது வீட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் சிறிது உணவை உங்கள் வீட்டில் அருந்திவிட்டு கிளம்புங்கள். இதன் விளைவு நீங்கள் உணவு உண்ணும் பொழுது ஏற்கனவே சாப்பிட்டதால் வயிறு full ஆகியிருக்கும் அதனால் இந்த உணவை அளவு கம்மியாக எடுத்துப்பீர்

பசிக்கும் தாகத்திற்கு வித்தியாசம் தெரியாது. உங்களுக்கு முதலில் பசி எடுப்பதுபோல் இருந்தால் தண்ணீர் குடியுங்கள். உங்களது பசி அடங்கினால் அது தாக்கம், அதையும் மீறி உங்களுக்கு பசித்தால் அது தான் பசி .

இந்த விழாக்களில் நிறைய நேரம் செலவிடுவதால் நேரம் போவதே தெரியாமல் இருக்கும்.இரவு உணவையே ஒன்பது மற்றும் பத்து மணிபோல் தான் சாப்பிடுவோம். அதை தவிர்த்துக்கொண்டு சீக்கிரம் சாப்பிட முயற்சி செயுங்கள்.

சக்கரை திண்பண்டங்களை தவிர்த்து விடுங்கள்.அது சிறிது சாப்பிட்டாலும் calorie count ஏகிரும். அப்போது இதனை நாள் பின்பற்றிய அனைத்தும் வீணாகி விடும்.

உடல் எடையை குறைக்க இது சிறந்த நேரம் அல்ல, ஒவ்வொரு நாளும் யாராவது உங்களுக்கு இந்த மாறி வட பாயாசம் வழங்கும்போது அல்ல. உங்கள் தற்போதைய எடையை பராமரிப்பதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.