தனித்துவத்தை உணருங்கள்
எல்லா மனிதர்களும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவரின் செயல்கள், ஆசைகள், திறமைகள் வேறுபடுகிறது என்பதால் நாம் நமது தனித்துவத்தை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
எல்லா மனிதர்களும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவரின் செயல்கள், ஆசைகள், திறமைகள் வேறுபடுகிறது என்பதால் நாம் நமது தனித்துவத்தை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
இன்று சமூக வலைத்தளத்தில் நாம் பார்க்கும் விஷயங்களுடன் நமது வாழ்க்கையை ஒப்பிட்டுக் கொள்கிறோம். ஆனால், அதில் வருபவை எல்லாம் உண்மையான விஷயங்களை இல்லை. சமூக வலைத்தளத்தில் உள்ள பல விஷயங்கள் பொய்யாகவே உள்ளதால் அதனுடன் நமது வாழ்க்கையை ஒப்பிட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
நம்மில் பலர் ஒரு விஷயத்தை செய்தால் அதை perfect ஆக செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால், ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போதே perfection வந்து விடாது. அதனால் நீங்கள் உங்கள் வளர்ச்சியில் சிறிய முன்னேற்றங்களை பாராட்ட ஆரம்பியுங்கள்.
உங்களை சுற்றி உங்களை ஆதரிப்பவர்களும், ஊக்குவிப்பவர்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் வளர்ச்சியை அல்லது நம்பிக்கையை உடைப்பவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
நம்மிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல் இருக்கும் விஷயங்களுக்காக நன்றியுடன் இருங்கள். இப்படி இருப்பது மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதையும் தடுக்க உதவும்.
{{ primary_category.name }}