பெரி மெனோபாஸ்(peri menopause)

பெரி மெனோபாஸ் என்பது உங்கள் மாதவிடாயை நிறுத்துவதற்கு ஏற்படும் கட்டமாகும். இந்த நிலை சில ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் மற்றும் உங்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பு, வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

மெனோபாஸ்(menopause)

இந்தக் கட்டத்தில் பெண்களுக்கு தொடர்ந்து 12 மாதம் மாதவிடாய் வராமல் நிற்கும். கருப்பை முட்டைகளை உற்பத்தி செய்வதை இந்த கட்டத்தில் நடத்துகிறது. உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள் அல்லது சிறுநீர்ப்பை பிரச்சனைகள் ஆகியவை இந்த மெனோபாஸ் காலத்தில் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

போஸ்ட் மெனோபாஸ்(post menopause)

போஸ்ட் மெனோபாஸில் அறிகுறிகள் குறையும். ஆனால், எலும்பு மற்றும் இதய நோய்கள், எலும்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை மாதவிடாய் முடிந்த பிறகு தொடங்கி வாழ்நாள் முழுவதும் இருக்கும்.