இரவு நேரங்களில் வேலைபார்ப்பதினால் நமது வழக்கமான முறைகள் கெடுப்பதன் மூலம், தூக்கமின்மையை உருவாக்குகிறது. இதனால் பல பிரச்சனைகள் வரும் . உடல் எடை கூடுவது, சக்கரை நோய், இதய நோய் போன்று பல உடல் ரீதியான பிரச்சனைகள் வரலாம்.

Sleep and powernap

இரவு நேரங்களில் உங்கள் வேலை போக மித நேரங்களில் கைபேசியை பயன்படுத்தாமல், தூங்கினால் அடுத்து வேலைக்கு நன்றாக இருக்கும். நீங்கள் வேலை நேரத்தில் (Power nap) எடுத்துக் கொள்ளலாம் . ஒரு 10 முதல் 15 நிமிடம் இடைவேளை எடுத்து தூங்காவதுதன் பெயர் Power Nap.

Coffee tea break.

இதை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை எடுப்பதன் மூலம் உங்களுக்கு அன்று இரவில் செய்யும் வேலைக்கு தகுந்த சக்தி தரும் மேலும் நம்மை அறியாமல் தூக்கம் வருவதை இது தடுக்க இயலும்.

3 roses!

ஆரோக்கியமான உணவு , தேவையான அளவில் தண்ணீர், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் அவசியம். சரியான நேரத்தில் இவை எடுத்துக்கொண்டு வந்தால் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் வராது.

என்னதான் உங்கள் சம்பளத்தில் நீங்கள் திருப்தி அடைந்தாலும், உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை விட மதிப்பு மிக்கது எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.