சண்டைகள் வந்து ஒரு பிரிவு வருவதன் மூலம் இருவருக்கும் ஒரு புரிதல் வரும். அதையும் மீறி ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் விவாகரத்து வரை செல்வதுண்டு. அப்படி செல்லாமல் , அந்த கணவர் மனைவி உறவை எப்படி வலுவாக்கலாம் என்பதே இந்த பதிவு.

கல்யாணத்திற்கு முன்னும், பின்னும் இருவரும் ஒரே மாறி இருத்தல் நல்லது. அவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காக செய்வோம் . இதற்க்கு திருமணம் முன்பே இதெல்லாம் பிடிக்கும் பிடிக்காது, என்று இருவரும் மனம் திறந்து பேசிவிட்டால் நல்லது.

யாராவது ஒருத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது மற்றுஒருவருக்கு பிரச்னை தான். அதனால் அவர்களிடம் பேசி அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பேசி முடிவு எடுங்கள்.

ஒரு முழம் மல்லிப்பூ, அல்ல அவர்களுக்கு கால் கை அமைக்கி கொண்டு மலரும் நினைவாக ஏதாவது பேசிக் கொண்டு இருந்தால், மனம் லேசாகும். அந்த உறவும் விட்டுப்போகாமல் இருக்கும்.

இந்த உறவு இணைபிரியா நபர்கள் என்று கூறினாலும், அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு. அதனால் தனிநபர் விருப்பங்களை மதிக்க வேண்டும். இது தான் உங்களது உறவு வலுவடைய முக்கியமானது.

கோவத்தில் தகாத வார்த்தைக் கூறினால் அது அவர்கள் மனதில் ஆழமாக பதியும். அது, உங்களுக்கும் அவருக்கும் நடுவில் இருக்கும் பந்தம் விட்டு போகும்.