இந்தியா பாகிஸ்தான் சண்டைக்கு கூட தீர்வு கிடைத்துவிடும் போல இவங்க ரெண்டு பேருக்கும் உண்டான சண்டைக்கு தீர்வு காணவே முடியாது போல" என்று கணவர்கள் கேலியாக கூறுவதைக் கேட்டிருப்போம்.ஆனால் உண்மையாகவே இந்த "மாமியார் மருமகள்" உறவு மிகவும் அழகானது.

அம்மா - பொண்ணு

மாமியார்கள் அவர்களது மருமகளை தனது பெண்ணைப் போல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் பெண், ஏதாவது தவறு செய்தால், எப்படி அவரை மன்னிக்கும் இயல்பு இருக்கிறதோ அதே மாதிரி உங்கள் மருமகளும், அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிக்கும் பக்குவம் வேண்டும்.

Personal எடுத்துக்க வேண்டாம்

ஒரு சில வார்த்தை மனதை நோக்கக்கடிக்கும் படி பேசிவிடுவதுண்டு. அதை மனதளவில் எடுத்துக் கொள்ளாமல், விட்டு கொடுத்துப் போனால் நல்லது . உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை, மனம் திறந்து, “இது பிடிக்க வில்லை" என்று பேசிவிட்டால் இருவருக்கும் நல்லது.

பாராட்டு >>>>> ஆளுமை

இரண்டும் பெரும் , குடும்பத்தை ஒரு அலுவலகம் என்று எண்ணாமல் , Dominant ஆக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. வெறும் சுவர்கள் அல்ல வீடு, உள்ளே இருக்கும் மனிதர்களே அதை வீடாக மாற்றுகிறார். அதனால் control எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

Give respect, take respect!

ஆரம்பத்தில் பாச மழையில் நினையும் இருவர், அப்படியே படிப்படியாக குறைந்து எலியும் பூனையுமாம் மாறிவிடுவார்கள். அதற்கு முன்னரே " Expectations" break செய்து மனம் திறந்து பேசுதல் நல்லது. இதன் மூலம் மரியாதை தக்க வைத்துக்கொள்ளப்படும் .

Tips To மாமியார்

உங்கள் பெண் வயது தான் அவளுக்கும். அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு இருந்தால் நல்லது. உங்கள் காலக்கட்டத்தில் நீங்கள் , உங்கள் மாமியாரிடம் இருந்தது போல இந்த காலகட்டத்தில் இருக்க முடியாது அதனால் உங்களது expectations ணை குறையுங்கள்.

Tips to மருமகள்

நீங்கள் உங்கள் மாமியாரை அம்மாவை போல் நடத்த வேண்டாம் எண்ணினால் அது தனிப்பட்ட ஒரு விஷயம் ஆனால் மரியாதை கண்டிப்பாக குடுக்க வேண்டும். வயதில் மற்றும் அனுபவத்தில் மூத்தவர். கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல. அதனால் மரியாதையுடன் நடத்துங்கள்.