ஒரு பெண் குழந்தை எப்படி நடந்துக்கணும், எங்க போகணும், என்ன டிரஸ் போடணும், யார் கூட பேசணும் என்ற வரைக்கும் சொல்லிக் கொடுக்கிற அம்மாவும், அப்பாவும் அதே வீட்டில் இருக்கிற பசங்களுக்கு பெண்களை எப்படி பார்க்கணும், மதிக்கணும், எப்படி நடந்து கொள்ளணும் என்பதை சொல்லிக் கொடுங்கள்.

ஒரு பொண்ண தொட்டா அவளை அசிங்கப்படுத்தலாம் என்று நினைக்கிறார்களே அந்த நினைப்பை தான் நம்ம அசிங்கப்படுத்தனும், அலட்சியப்படுத்தனும்.

ஒரு பொண்ணு இதை செய்யலாமுன்னு 5 இருக்கு. இத செய்யக்கூடாதுன்னு 50 இருக்கு. எல்லாருக்கும் பிடிச்ச அந்த 5 நம்ப செய்யலாம். நமக்கு பிடிச்ச அந்த 50 நம்ப செய்யக்கூடாது. அவ்வளவுதான் simple ஒரு பொண்ணோட வாழ்க்கை.

இந்தியாவுல 16 பிரதமர்ல ஒருத்தர் மட்டும் தான் பெண். 15 ஜனாதிபதியில ஒருத்தர் மட்டும் தான் பெண். ஏன் இந்த தேசத்துல அறிவாளியான, தகுதியான பெண்களே இல்லையா? இல்ல அவங்க கனவுகள‌ யாரோ தடை பண்ணிட்டாங்களா? Who decides the expiry date of a women's dreams?