கருவளையங்கள் என்பது கண்களை சுற்றி கருமையான தோலின் தோற்றம். சிலரின் கண்ணின் இமைகள் அல்லது சிலரின் கண்ணுக்கு கீழே உள்ள குழிகளால் ஏற்படும் நிழல்கள் காரணமாக அவை சில நேரங்களில் கருவளையமாக தோன்றலாம்.
நிறைய நேரம் பல பெண்கள் அழகாக இருக்க சமூக அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால், கருவளையங்கள் பொதுவானவை மற்றும் இயல்பானவை. அவை எந்த மருத்துவ பிரச்சனையின் அறிகுறியும் அல்ல. இந்த கருவளையங்கள் பொதுவாக கீழ் இமைகளுக்கு கீழ் தோன்றும். இவை உங்களை சோர்வடைந்தவர் போல் காண செய்யலாம் மற்றும் உங்கள் தோற்றத்தை பாதிக்கலாம். மக்கள் பொதுவாக தூக்கமின்மையால் கருவளையங்கள் தோன்றும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கருவளையங்கள் வர இதைத் தவிர வேறு சில காரணங்களும் உண்டு.
1. சோர்வு:
சோர்வு, மிகக் குறைவாக தூக்கம் அல்லது அதிக நேரம் தூங்குவது கருவளையர்களை ஏற்படுத்தும். தூக்கமின்மை உங்கள் கண்ணுக்கு கீழே உள்ள சருமத்தை கருமையாக்கும். இது உங்கள் கண்களுக்கு கீழே திரவம் குவித்து வீங்கிய கண்களைப் போல தோற்றமளிக்கும். இந்த வீங்கிய கண்களை போன்ற தோற்றத்தின் நிழல் உண்மையாகவே கருவளையங்கள் போல இருக்கும்.
2. முதுமை:
முதுமை என்பது வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும். மேலும் இது உங்கள் கண்களுக்கு கீழே கருவளையங்கள் தோன்றுவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இதற்கு பின்னால் உள்ள காரணம் வயதானதால் சருமம் மெலிந்து தன்மை குறைவதால் உங்கள் தோலுக்கு கீழே உள்ள கருமையான இரத்த நாளங்கள் அதிகமாக தெரியும். இதனால் உங்கள் கண்களுக்கு கீழே கருமை ஏற்படும்.
3. கண் சிரமம்(strain):
உங்கள் மொபைல் அல்லது கணினி திரைகளை தொடர்ந்து உற்றுப் பார்த்த பிறகு கண்களுக்கு கீழே கருமையாகவோ அல்லது ஊதா நிறமாகவோ இருப்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இரத்த நாளங்கள் பெரிதாகி கண்களை சுற்றி உள்ள தோலை கருமையாக்கும். அது கண்ணுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தும்.
4. ஒவ்வாமை(allergy):
ஒவ்வாமை மற்றும் கண்களின் வறட்சி ஆகியவை கண்களுக்கு கீழே கருமையான கருவளையங்களை ஏற்படுத்த மற்றொரு பொதுவான காரணமாகும். இந்த ஒவ்வாமை எதிர்விளைவுகளாக அரிப்பு, சிவத்தல் மற்றும் உங்கள் கண்களை அடிக்கடி தேக்க செய்யலாம், அதனால் கருவளையங்கள் ஏற்படலாம்.
5. சூரிய ஒளிக்கு அதிகப்படியான வெளிப்பாடு:
இது பொதுவானது அல்ல என்றாலும் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது உங்கள் உடலில் மெலனின் உற்பத்தி செய்யும். இது கண்களுக்கு கீழே பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.
6. மரபியல்:
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கருவளையங்கள் இருந்தால் அது பரம்பரை பரம்பரையாக வந்து உங்களுக்கு வயதாகும் போது தோற்றமளிக்கும்.
7. சில நோய்கள்:
சில நோய்கள் பக்கவிளைவு அல்லது அறிகுறையாக ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தலாம். உதாரணமாக இரத்த சோகையால் உங்கள் சருமம் வெண்மையாக தோன்றி கருவளையங்களை ஏற்படுத்தலாம்.
கருவளையங்கள் பொதுவானவை மற்றும் இயற்கையானவை என்றாலும் அடிப்படை காரணத்தை கண்டறிய நீங்கள் தோல் மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் விரும்பினால் அந்த சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். கருவளையத்தை குறைக்க உங்கள் தோல் மருத்துவர் சில கிரீம்கள் அல்லது லேசர் சிகிச்சை அல்லது கெமிக்கல் பீல் போன்ற சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்.
Read in English: 7 Basic causes of Dark Circles you must know!