SheThePeople Tamil தொடங்கிய Thuglife Thalaivi என்ற புதிய பாட்காஸ்ட்(Podcast) நிகழ்ச்சிக்காக இவள் நந்தினி கூறிய சில பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவள் சீரிஸ் பண்ணலாம் என்ற ஐடியா எப்படி வந்தது?
நான் காலேஜ்ல எலக்ட்ரானிக் மீடியா படிச்சிட்டு இருந்தேன். ப்ராஜெக்ட்டுக்காக எங்களுக்கு ரியாலிட்டி ஷோ, டாக்குமென்ட்ரி, டிராமா போன்ற மூன்று தலைப்புகள் கொடுத்தாங்க. எனக்கு fiction ஸ்டோரீஸ் பிடிக்கும் என்பதால் நான் டிராமா என்ற தலைப்பை தேர்வு செய்தேன். அதுக்காக ஒரு sex worker லைஃப் பத்தி பண்ணலாம்னு நெனச்சேன். எல்லாரும் அவங்களோட ஒரு பக்க வாழ்க்கையை பார்த்திருக்காங்களே தவிர மறு பக்க வாழ்க்கையை யாரும் பார்த்ததில்ல. அவங்க இந்த தொழிலுக்கு சும்மா வந்து இருக்க மாட்டாங்க, அவங்க வாழ்க்கையில ஏதாவது நடந்திருக்கும், அதனால விருப்பம் இல்லாம இதுக்கு வந்து இருப்பாங்க. எனக்கு அவங்கள பத்தி பண்ணனும்னு தோணுச்சு.
கல்லூரியில் இறுதி ஆண்டு ஆரம்பத்திலேயே டிராமா தான் பண்ண போறோம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காக என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது அவங்க இடத்துக்கே போய், நேர்ல அவங்க கிட்ட பேசி உங்கள பற்றிய விஷயங்கள் தான் நான் பண்ண போறேன், உங்கள பத்தி சொல்லுங்க அப்படின்னு கேட்டேன். ஒரு பத்து பேர் அவங்க கதையை சொன்னாங்க. மத்த எல்லாரும் அவங்க சொன்னத ஒத்துக்கிட்டாங்க.
காலேஜ்ல டிராமா மாதிரி இவங்கள பற்றிய ஒரு விஷயம் தான் நான் செய்தேன் என்று விக்கி அண்ணா கிட்ட காட்டும்போது, இது நல்லா இருக்கு, இதே மாதிரி நம்ப சொசைட்டில நம்ம பார்த்தா ஒரு டூ ஸ்டெப்ஸ் தள்ளி நிக்கிற மாதிரி நிறைய பேர் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் பத்தி எடு, அவங்கள அப்படி யாரும் பார்க்க கூடாது, அவங்களும் சமம் தான் அப்படின்ற மாதிரி பண்ணுங்கனு சொல்லி எடுத்தது தான் இவள். நானும், டியுட் விக்கியும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி பண்ணோம்.
நடிக்கணும் என்பதற்காக நீங்கள் மாற்றிக் கொண்ட விஷயங்கள்?
என்னோட உடம்பு, உணவு இதையெல்லாம் கேரக்டருக்கு மாத்திக்கணும்னு சொன்னாங்கனா அத நான் மாத்திப்பேன். மத்தபடி எல்லாத்துலயும் நான் நானாக தான் இருந்தேன். கதை சொல்லும் போது என்னோட கதாபாத்திரம் மற்றும் முழு கதை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பேன். இந்த இரண்டும் எனக்கு பிடித்திருந்தால் அந்த கேரக்டருக்கு தேவையான விஷயங்களை நான் செய்வேன். என்னோட கதாபாத்திரத்திற்காக என்ன செய்வேன் அப்படின்னா உதாரணத்திற்கு அக்கா கடை எபிசோட் ஒன்னு இருக்கும்.
ரோடு சைடுல கடை வைத்திருக்கும் ஒரு அக்காவை பற்றி 20 நிமிடத்திற்கு ஒரு வீடியோவை உருவாக்க வேண்டும். ஒரு சில கேரக்டர் எப்படி இருக்கும்னு நான் ஒரு இமேஜ் வைத்திருப்பேன். ஒருவேளை அந்த கதாபாத்திரம் பக்கத்தில் இருந்தால் அங்கு சென்று அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பேன். அக்கா கடை எபிசோடுக்கு அப்படித்தான் செய்தேன். இப்படித்தான் நான் பர்சனலா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். பிளாக் ஷீப் இல்லாம வேறு ஏதாவது வாய்ப்புகள் வந்தால் அவர்களே இப்படித்தான் வேண்டும் என்று ரெஃபரன்ஸ் கொடுப்பார்கள். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்து விடுவேன்.
கண்ணாடி முன் நின்று முக பாவனைகள் பயிற்சி செய்தது உண்டா?
பென்குயின்(PenQueen) சீரிஸில் எரியும் பனிக்காடு என்று ஒரு எபிசோட் செய்து இருப்போம். அது எனக்கு பிளாங்கா இருந்தது. ஏனென்றால், நான் இதுவரைக்கும் ஊட்டி சென்று இருக்கிறேன், ஆனால் அந்த மாதிரி சூழலில் வாழ்ந்த மக்களை நான் பார்த்ததே கிடையாது, அவர்களிடம் பேசினதும் கிடையாது. அதனால் எனக்கு முழுமையாக பிளாங்காக இருந்தது. நானே ஒரு சில விஷயங்கள் கற்பனை செய்து நடிப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள் முன்னாடி அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதுக்கு அப்புறம் பார்த்தா நான் தயார் பண்ண மாதிரி அங்க இல்ல, அவங்க ரொம்ப லைவ்லியா இருந்தாங்க. அவங்களோட ஒரிஜினல் கேரக்டர் நான் பிளான் பண்ணி வச்சிருந்த கேரக்டர் மாதிரி இல்ல, அது ஃபுல்லா வேற மாதிரி இருந்துச்சு. அப்புறம் நான் தங்கி இருந்த அறையில் முக்கியமான காட்சிகளுக்கு எப்படி வேரியேஷன் காட்டலாம் என்று எக்ஸ்பிரஷன் ப்ராக்டிஸ் பண்ணேன்.
இது போன்ற பல தகவல்களையும், பெண்களை ஊக்குவிக்கும் விஷயங்களையும் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில் பகிர்ந்துள்ளார். அதனை கேட்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Click here: Ival Nandhini's Acting Journey with Inspiring Conversation