Advertisment

தொழில் முனைவோருக்கு விடாமுயற்சி வேண்டும்: டசுமர்லின் மஜாவ்

author-image
Devayani
New Update
coffee

மேகாலயாவை சேர்ந்த பசும்பார்லிங் பஜார் அவரது சிறு வயது நினைவுகள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. எல்லா குளிர்காலத்திலும் அவருடைய மாமா உள்நாட்டில் வளர்க்கப்பட்ட காபி கொட்டைகளை சேராபூந்தி என்ற கிராமத்திலிருந்து எடுத்து வருவார். உள்நாட்டில் வளர்ந்த இந்த காபி சிறுவயதில் இருந்தே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு ஏற்றது போலவே அவர் நகரத்தில் இருக்கும் மக்களுக்கு தேநீரை விட காபி அதிகமாக பிடிக்க தொடங்கியது. “நான் எனது பகுதியில் காபியை ஊக்குவிக்க நினைத்தேன். 2015 ஆம் ஆண்டு உள்நாட்டில் விளைந்த காப்பி கொட்டைகளை பயிரிடுபவர்கள் உடன் ஆலோசித்த பிறகு வறுத்து எடுத்த காபி கொட்டைகளை வைத்து ஒரு தொழில் செய்யலாம் என்ற யோசனை வந்தது.” 

Advertisment

மற்ற கடைகளை விட இவரின் கடை தனித்துவமானது. ஏனென்றால் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் மனநிலைக்கு ஏற்ப, காபி செய்யும் முறையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். "ஆரம்பத்தில் நான் ஒரு சிறிய காபி மெஷின் மற்றும் கிரைண்டரை வாங்கினேன். காபி கொட்டைகளை வறுத்து அதனை எங்கள் கடையில் விற்க ஆரம்பித்தோம். பிறகு அந்த செயல் முறையை விரிவுபடுத்தி பாக்கெட்டுகளில் விற்க ஆரம்பித்தோம். நான் ஜெர்மன் காபி போஸ்டரில் முதலீடு செய்தேன். அது வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவியது. அந்த மிஷினில் பல பயனுள்ள அம்சங்கள் இருந்தது. இதை வைத்து எங்கள் தொழில் நிறைய வளர்ந்தது. மக்களும் விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள்."

முக்கியமான சாதனைகள்:
எனது பயணத்தில் பெரிய சாதனையாக நான் பார்ப்பது மேகாலயாவில் வாழும் மக்களை காபிக்கு பழகியதுதான். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் தேநீரை தான் விரும்புவார்கள், அவர்களை காபி குடிக்க பழகுவது சிறிது சவாலாக இருந்தது. எனவே, நான் இரண்டு காபி காய்க்கும் கிளாஸ்களை எடுத்தேன் மற்றும் மக்களுக்கு காபியை அறிமுகப்படுத்தினேன். தற்போது நிறைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து எங்களிடம் வறுத்த காபிகளை வாங்கி செல்கின்றனர். இது என்னை மேலும் இந்த பயணத்தில் செல்ல ஆதரவளிக்கிறது.

coffee business

Advertisment

சந்தித்த சவால்கள்:
எல்லா தொழில் முனைவர் போலவும் அவரும் பல சவால்களை சந்தித்துள்ளார். பண பற்றாக்குறை தான் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது. மேலும் பல மணி நேரங்களை விவசாயிகளுடன் செலவிட்டு அவர்களுக்கு அறுவடை செய்வது முதல் அதனை காய வைக்கும் வரை அனைத்தையும் கற்றுத் தந்துள்ளார். "எனக்கு விடாமுயற்சி தான் வெற்றியை தரும் என தெரியும். அது மட்டும் இன்றி எனது பொருளின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், நான் அதற்காக நிறைய ஆராய்ச்சிகளை தொழில் தொடங்குவதற்கு முன்பே செய்துள்ளேன்"

"நான் தனித்து இந்த தொழிலை ஆரம்பித்தேன். சிறிது நாட்கள் கழித்து காபி கொட்டைகளை சுத்தம் செய்வதற்காக என்னுடன் ஒரு ஆளை சேர்த்துக் கொண்டேன். தற்போது என்னுடன் சேர்ந்து 11 பெயர் இந்த பொருளை உருவாக்க வேலை செய்கின்றனர். ஒரு ஆண்டிற்கு நான் ஏழு டன்களுக்கு மேலே காபிகளை தயாரிக்கிறேன். அதற்கு 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உதவி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

"ஒரு தொழிலை ஒழுங்காக நடத்த ஒழுங்கமைப்பு முக்கியமானது. Google sheets மூலம் நாங்கள் தினமும் செய்யும் வேலைகளையும், மற்ற தொழில் முன்னேற்றங்களையும் அதில் பதிவிட்டு வருகிறோம்" என்று கூறுகிறார்.

Advertisment

எதிர்கால திட்டங்கள்:
தற்போது அவர் வடகிழக்கு பகுதிகள் மற்றும் பெங்களூர், மும்பை, சென்னை போன்ற நகரங்களுக்கு எனது பொருளை அனுப்பி வைக்கிறார். அது மட்டும் இன்றி பிரான்ஸ், நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் சவுத் ஆப்பிரிக்காவிற்கும் பொருள்களை ஏற்றுமதி செய்கிறார். அவரின் கடுமையான உழைப்பு அவருக்கு உதவியது. 2019ஆம் ஆண்டு மேகாலயா தொழில்முனைவோர் அங்கீகார விருதை அவர்களின் முதலமைச்சரிடம் இருந்து உள்நாட்டு காபி கொட்டைகளை பிரபலப்படுத்தியதற்காக வாங்கி உள்ளார்.

மேலும் அவரின் காபி கடைகளை பல்வேறு இடங்களில் திறந்து, சுத்தமாக வறுக்கப்பட்ட காபி கொட்டைகளை வடகிழக்கு பகுதிகளில் விற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

Advertisment