ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினியின் பயணம்(dietition dharshini)

தர்ஷினியின் பயணம் பற்றியும், அவரின் ஆதரவாளர்கள் பற்றியும் பகிர்ந்தது மட்டுமில்லாமல் பல பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

Devayani
21 Feb 2023
ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினியின் பயணம்(dietition dharshini)

Images of Dharshini

நம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த காலகட்டத்தில் வேலை காரணமாகவும், பிற பிரச்சனைகளாலும் மக்கள் அவர்களை பார்த்துக் கொள்ளும் விதம் மாறிவிட்டது. குறிப்பாக மன அழுத்தம் போன்றவை அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் தர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின்(dietition_dharshini) மூலம் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பற்றி பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இன்றி ஆன்லைனில் கன்சல்டேஷனும் செய்து வருகிறார். SheThePeople Tamil உடன் நடந்த நேர்காணலில் தர்ஷினி கூறிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீடியா எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?

2019இல் dietition_dharshini என்ற ஒரு பேஜ் ஓபன் பண்ணி தினமும் ஒரு போஸ்ட் போட ஆரம்பித்தேன். நான் கன்சல்டேஷன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதை தொடங்கவில்லை. எனது அறிவை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தினமும் ஒரு போஸ்ட் பதிவிட்டு வந்தேன். அப்பொழுது ரியிஸ் அறிமுகமாகவில்லை, அதனால் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் நான் மிகவும் கண்சிஸ்டெண்டாக இருந்தேன். தினமும் எது செய்கிறேனோ இல்லையோ ஒரு போஸ்ட்டை பதிவிடுவேன். அப்படித்தான் நான் ஆரம்பித்தேன். 

அதன் பிறகு தான் ஊரடங்கு வந்தது. அப்பொழுது தான் ரீல்சும்(reels) அறிமுகமானது. அதன் பிறகு ரீல்சும் செய்து பதிவிட்டேன். ஒரு கிளினிக் வைத்திருந்தால் அந்த ஊர் மக்கள் மட்டுமே வருவார்கள், ஆனால் டிஜிட்டல் மீடியா என்பது உலகம் முழுவதும் இருக்கும் மக்களை சென்றடைய உதவுகிறது. மக்கள் நான் சொல்கிற விஷயம் நன்றாக உள்ளது, ரெசிபிஸ்(recipies) அவர்களுக்கு பயன்படுகிறது என்று கூறுவதை கேட்கும் பொழுது இதை செய்ய இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்த மூன்று வருட பயணம் ரொம்ப அழகானது, பொறுமையானது, முற்போக்கானது, நிலையானது என்பது எனக்கு மகிழ்ச்சியாக வைக்கிறது.

dietition dharshini

உங்கள் வாழ்க்கையில் வந்த மறக்க முடியாத கமெண்ட்கள் என்ன? 

எனக்கு நிறைய DMs வரும். நான் சொல்கிறதை அவர்கள் முயற்சி செய்து பார்த்து, அதற்கான பலன்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். PCOS உடன் வருபவர்கள் கன்சல்டேஷனுக்கு பிறகு அவர்கள் கர்ப்பமாகும் பொழுது அந்த விஷயத்தை முதலில் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். "என் கணவருக்கு கூட தெரியாது, முதலில் நான் உங்களுக்கு தான் சொல்கிறேன்" என்று கூறும் பொழுது அதெல்லாம் எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதெல்லாம் தான் எனது தொழிலுக்கு நான் நேர்மையாக இருப்பதற்கான பலன்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு பெரிய ஆதரவாக யார் இருக்கிறார்கள்?

பெரிய ஆதரவு என்றால் நான் எனது பெற்றோர்களை சொல்லுவேன். நான் இந்த கோர்சை படிக்க விரும்புகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் அதை மறுத்து இருந்தால் என்னால் இதை படித்திருக்க முடியாது. அவர்கள் நீ என்ன பண்றியோ பண்ணு, ஆனால் நீ அதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நீ அதை வேலையாக எடுத்துக் கொண்டு செய்யும்பொழுது உன்னால் அதை செயல்முறை படுத்த முடிய வேண்டும், சும்மா எதையாவது படித்துவிட்டு பிறகு அதற்காக வருத்தப்படக்கூடாது. ஒரு 10 பேர் இதை செய்கிறார்கள் என்பதற்காக நீயும் அதை செய்யப் போகிறேன் என்று சொல்லக்கூடாது என்று கூறினார்கள். நானும் இந்த படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே இதை தான் படிக்க வேண்டும் என்று போக்கஸ்டாக(focused) இருந்தேன்.

எப்பொழுதுமே எனக்கு ஏதாவது வாய்ப்புகள் வருகிறது என்றால் முதலில் அவர்கள் தான் அனைவருக்கும் சொல்லுவார்கள். என் பொண்ணு இதெல்லாம் பண்றா என்று சொல்லுவார்கள். அதுவே, ஒரு பெரிய விஷயம், எத்தனை பெற்றோர்கள் இப்படி செய்வார்கள் என்று தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் ரீல்சை எல்லாம் மற்றவர்களுக்கு பகிர்ந்து, இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுவார்கள். எனவே, எனது பெற்றோர்கள் தான் எனது பெரிய ஆதரவாளர்கள்.

Dietition Dharshini

பெண்களுக்கு பணரீதியான சுதந்திரம் எவ்வளவு முக்கியம்?

ரொம்ப முக்கியம். நான் கன்சல்ட் பண்ணும் போது சில பேர் அழுது இருக்கிறார்கள். எனக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு, ஆனால் நான் ஒருவரை சார்ந்து இருப்பதால், எனது குடும்பத்தை சார்ந்திருப்பதால் நான் அவர்களிடம் கேட்டால் அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நீயே எதையாவது செய் என்று கூறுவார்கள். உனக்கு சரியாகவில்லை என்றால் என்ன பண்றது, நாலாம் தரமாட்டேன் என்று கூறியதாக கூறினார்கள். 

எல்லா நேரமும் நாம் ஒருவரை சார்ந்து இருப்பது கடினம். நமது தேவைக்கு, நம்மை பார்த்துக் கொள்வதற்கு இன்னொருவரை சார்ந்து இருந்தால், நாம் எது வாங்க வேண்டும் என்றாலும் அவர்கள் ஏதாவது குறை சொல்வார்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி கண்டிப்பாக பணரீதியாக சுதந்திரமாக இருப்பது அவசியம். உங்க அப்பா நல்லா சம்பாதிக்கிறாங்க, கணவர் நல்லா சம்பாதிப்பவராக இருந்தாலும் உங்கள் கையில் பணம் இருப்பது தான் உங்களின் முதல் செக்யூரிட்டி(security) ஆகும்.

இது மட்டுமின்றி தர்ஷினி பல உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில்(podcast) பகிர்ந்து உள்ளார். குறிப்பாக குழந்தைகளுக்கான உணவு முறை, பெண்களுக்கான உணவு முறை, புதிதாக திருமணமானவர்கள் உடல் நலத்தை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதைக் கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.


Click here to read the podcast: "Health should be personalised" - Dharshini | Nutritionist | Dietition

அடுத்த கட்டுரை