"கடுமையாக உழையுங்கள், உங்கள் வெற்றி பேசட்டும்": ரக்ஷிதா

Devayani
20 Dec 2022
"கடுமையாக உழையுங்கள், உங்கள் வெற்றி பேசட்டும்": ரக்ஷிதா

ரக்ஷிதா கல்லூரி படிக்கும் பொழுதே தனது சொந்த தொழிலின் பயணத்தை தொடங்கினார். அவரின் Cooks and Crafts  நிறுவனத்தின் மூலம் முட்டையில்லா கேக்குகளை செய்து வருகின்றார். அவரது இந்த அகாடமி பேக்கிங் மட்டுமல்லாமல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லாத பெண்களுக்கு நிதி ரீதியாகவும் ஆதரவளிக்கும் ஒரு ஊடகமாக செயல்பட்டு வருகிறது. ரக்ஷிதா சிறு கிராமங்களில் இருந்து தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக வைத்திருக்கிறார்.

இந்தூர் போன்ற சிறிய நகரங்களில் உள்ள பெற்றோர்கள் அவர்களின் மகள்களை உயர்கல்விக்காக வேறு நகரங்களுக்கு பாதுகாப்பை கருதி அனுப்ப மறுக்கின்றனர். எனவே, பள்ளி படிப்பை முடித்த பெண்கள் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள சொந்த ஊரில் வாய்ப்பு இருந்தால் சமூகத்துடன் அவர்கள் போராட வேண்டியதில்லை. அதனால், அவரது அகாடமியில் மாணவிகளுக்காக பாதுகாப்பான தங்கும் இடத்தையும் வழங்குகிறார் என்பதை SheThePeople இடம் அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு பேக்கிங் பற்றி கற்று தருவதோடு தொழில் முனைவு, வணிகம் பற்றியும் கற்றுத் தந்து அவர்கள் வளர்வதற்கு ஊக்கமளிக்கிறார்.

வணிக குறிப்புகள்:

"தொழில் முனைவோருக்கு முக்கிய தேவையாக திறனாக இருப்பது தலைமை தாங்குவது. அவையே முக்கியமான திறமையும் கூட. ஒரு பேக்கராகவும், ஆசிரியராகவும் மாணவர்களுக்கு அவர்களை நேர்மறையாக பார்க்கும்படி நான் அறிவு வழங்க வேண்டும்". 

அவரின் ஆரம்ப கட்டத்தில் இருந்து அவரது முன்னுரிமைகள் காலத்திற்கு ஏற்றது போல மாறி வருகிறது. அவர் கல்லூரியில் இருந்த போதே இந்த தொழிலை தொடங்கியதால் அப்பொழுது நல்ல மதிப்பெண்கள் எடுப்பதே அவரின் முதன்மை கடமையாக இருந்தது, இந்த தொழில் ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருந்தது.

"இப்பொழுது இந்த தொழில் என்னுடையது மட்டுமல்ல. நான் மாணவர்களுக்கு கற்றுத் தரும்போது நான் மற்ற விஷயங்களை மறந்து விடுகிறேன். எனது படிப்பில் பணத்தையும், நேரத்தையும் செலவிடும் மாணவர்கள் திரும்பி செல்லும் பொழுது நல்ல தரமான விஷயங்களை கற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தற்போது என் முன்னுரிமையாக உள்ளது"

டிஜிட்டலின் பங்கு:

டிஜிட்டல் அவரின் தொழில் வளர்ச்சிக்கு நிறைய உதவியதாக கூறுகிறார். மேலும் YouTube பார்த்து தான் அவரின் தொழிலில் உள்ள புதிய வரவுகளையும், புதிய யோசனைகளையும் பற்றி தெரிந்து கொள்கிறார் என்று விளக்கினார். 

சமூக விதிகளுக்கு பயப்பட வேண்டாம்:

ஒரு பெண்ணாக, உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்கினாலும், நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பெண்களிடம், ரிக்ஷிதா கூறுகிறார், “உங்கள் பணி உங்களை எந்த ஆணும், திருமணமும் செய்ய முடியாத வகையில் நிறைவு செய்கிறது. ஒரு பெண் வளர முயலும் போது, ​​அவளுடைய தேர்வுகள் வரம்புக்குட்பட்டவை, அந்நியர்களால் மட்டுமல்ல, அவளுடைய குடும்பத்தாலும். தொழிலையோ அல்லது உறவுகளையோ அல்லது திருமணம் செய்துகொள்ளவோ ​​உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. நீங்கள் வெற்றியடைந்தவுடன், உங்கள் விருப்பங்களை முன்னர் கேள்வி எழுப்பியவர்கள், உங்களை ஆதரிக்கத் தொடங்குவார்கள்," என்று அவர் விளக்குகிறார்.

ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஆலோசனை:

தனது பயணத்தின் ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தால், பேக்கராக இருப்பதற்கான தனது முடிவை பெற்றோரும் சமூகமும் ஆதரிக்குமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு பொறியியல் மாணவி, பின்னர் ஒரு பேக்கராகத் வேண்டும் என்று கூறியதால் அவரின் முடிவுகள் ஆதரிக்கப்படவில்லை.  "நீங்கள் ஏன் ஒரு சமையல்காரராக விரும்புகிறீர்கள்?"  என்பது அவர் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. இன்று, அவரது கடின உழைப்புக்கு வெகுமதி கிடைப்பதை அவரது குடும்பத்தினர் பார்க்கும்போது, ​​​​விருதுகள் மற்றும் ஊடகங்களில் அவரைப் பற்றி பேசும்பொழுது, அவரது அனைத்து முடிவுகளையும் நினைத்து பெருமிதம் கொள்கின்றனர். 

“எனது இலக்குகளை அடையும் வரை கைவிடாத மனப்பான்மை எனக்கு எப்போதும் இருந்தது. எந்த சூழ்நிலையில் இருந்தாலும், உயர்ந்து சாதிக்க வேண்டும். உங்கள் பணிக்கு 100% கொடுங்கள், உங்கள் துறையில் சிறந்து விளங்குங்கள், உங்கள் வெற்றியில் சத்தம் போடுங்கள்" என்று ரிஷிதா கூறுகிறார்.

சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுப்பது:

“நீங்கள் பணிவாக இருக்க வேண்டும், முதலில் உங்கள் போட்டியாளர்களை வாழ்த்தி அவர்களை பாராட்ட வேண்டும். உங்கள் வேலைக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால், உங்கள் வேலை உங்களுக்கு விசுவாசமாக இருக்கும்" என்று அவர் அறிவுறுத்துகிறார்.

Read The Next Article