கவி ப்ராஜெக்ட்(Kavi project) என்ற பெயரில் கைவினை பொருட்கள் மூலம் கவிதைகளை சேர்த்து ஒரு புதுவித வீட்டு அலங்கார பொருட்களை டெல்லியை சேர்ந்த பெண்மணி செய்து வருகிறார். மூன்று பேர் சேர்ந்து இந்த தொழிலை ஆரம்பித்துள்ளனர். தற்போது அவர்களின் பொருள்களுக்கு ஆதரவும், விற்பனையும் அதிகரித்த நிலையில் புதிதாக ஒரு இடத்தில் தற்போது பெரிய லட்சத்துடன் செயல்படுகின்றனர். சமூக மற்றும் கலாச்சார மாற்றத்திற்காக அவர்களின் பொருட்களின் மூலம் நல்ல செய்திகளை உலகத்தில் பரப்பி வருகின்றனர். இந்த குழு ஊரடங்கு காலத்தில் முழுமையாக ஆன்லைனில்(online) அவர்கள் பொருட்களை விற்கத் தொடங்கி தற்போது டிஜிட்டல் மீடியாவினால்(digital media) அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
மாதுரி பலோடி அவரின் நான்கு வருட வேலையை விட்டு கைவினைப் பொருட்களில் முழு கவனத்தை செலுத்தினார். "இந்த தொடக்கம் எனக்கு வேலை மட்டுமல்ல இது என்னுடைய கனவு. எனது பேஷனை(passion) முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டேன். நாங்கள் ஒரு பொருளை மறுசுழற்சி செய்ய முடியவில்லை என்றால் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்."
கூகுள் மற்றும் ஆக்சிஸ் பேங்கின் ஆதரவுடன் SheThePeople நடத்திய Digital Women Awards இல் பலோடி வெற்றி பெற்றுள்ளார். அவர் பல பெண் தொழில் முனைவோர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். இவரது வாழ்க்கை பயணம் பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.
அமித் மற்றும் சௌமியாவுடன் சேர்ந்து பலோடி இந்த கவி ப்ராஜெக்ட் தொடங்கி உள்ளார். இந்தப் பயணம் ஒரு டீக்கடை ஓரத்தில் நின்று, "சரி, இது நம்ம பண்ணுவோம்" என்று தான் ஆரம்பித்தது. இந்த மாதிரி பல பேர் சொல்லி இருப்போம். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அதற்கான முயற்சிகளை எடுத்திருப்போம்.
குறிப்பிட்ட அளவு கைவினை பொருட்களை வைத்து பேஸ்புக்(Facebook) பக்கத்தில் மற்றும் வாய் வழியாக அவர்களின் பொருட்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கூடவே இவர்களின் தொழிலும் பெருகி உள்ளது. முதலில் சுற்றுச்சூழல் மீது அக்கறை உள்ளவர்களும், கைவினைப் பொருட்களில் மேல் விருப்பம் உள்ளவர்களும், கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு உள்ளவர்களும் இதை வாங்கி உள்ளனர். அப்படி ஆரம்பித்த இந்த தொழில் தற்போது நொடியாவில் 3000 சதுர அடி பரப்பளவில் ஒரு வேர்ஹவுஸ்(warehouse) வரை வளர்ந்துள்ளது.
நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:
பலோடி கூறுகிறார் அவர் கற்றுக் கொண்ட பெரிய பாடம் பொறுமை மற்றும் நிதானம். “ஒரு தொழில் ஆரம்பக் காலகட்டத்தில் சுலபமாக இருக்காது. அந்த நாட்கள் நிறைய தடைகளையும், சவால்களையும் தரக்கூடும். ஒருவர் அதை நிதானமாக கையாள பழகிக் கொள்ள வேண்டும். இந்த முதல் நிலையை நாம் கடந்து, செய்யும் வேலையில் கவனமாக இருந்தால், நம் லட்சியத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.”
பலோடி ஒரு முன்னாள் பத்திரிகையாளர், அவரின் மக்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற திறமை இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. "நான் ஒரு சாதாரண பெண், பள்ளிகளில், கல்லூரிகளில் சிறந்து விளங்கவில்லை, என்னோட முதுகலை படிப்பை பாதியில் நிறுத்தம் நிலைமை ஏற்பட்டது. ஆனால், எனது பேச்சுத்திறமையும், மக்களுடன் பழகும் குணமும் எனக்கு கை கொடுத்தது."
டிஜிட்டல் மீடியா:
கவி ப்ராஜெக்ட் முதலில் ஆன்லைனில் தான் விற்று வந்தனர். ஆனால், விற்பனை அதிகரித்தவுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இவை இரண்டிலும் பொருட்களை விற்க தொடங்கினர். “நாங்கள் கவி ப்ராஜெக்ட் என்றே சொந்த வலைதளத்தில் பொருட்களை விற்பது மட்டுமில்லாமல் வேறு முக்கிய தளங்களிலும் பொருட்களை விற்பனை செய்கிறோம். அது மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கும் ரீசெல்லர்ஸ்(resellers) மூலம் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் தளங்களிலும் பொருட்களை விற்று வந்தோம்.”
“இப்படி நடந்து கொண்டிருந்த பொழுதுதான் ஊரடங்கு வந்தது. நாங்கள் பல விஷயங்களை இந்த ஊரடங்கு மூலம் கற்றுக் கொண்டோம். மற்றும் எங்களின் விற்பனையை முழு நேரமாக ஆன்லைனில் ஆரம்பித்தோம். உண்மையை கூறினால் ஊரடங்குக்கு பிறகுதான் எங்கள் விற்பனை இருமடங்காக உயர்ந்தது. ஆன்லைன் விற்பனை எங்களுக்கு நிறைய நன்மைகளை அளித்தது.”
“இந்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மக்களுக்கு எங்கள் பொருட்களை பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுவதற்காகவும் Google Ads, YouTube போன்ற தலங்களில் மூலம் அதில் தேர்ச்சி பெற்றவர்களுடன் இணைந்து செயல்படு தொடங்கினோம்.” டிஜிட்டல் மீடியா பல தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. அதேபோல கவி ப்ராஜெக்டும் அதிலிருந்து நிறைய நன்மைகளை பெற்றுள்ளது.
மூன்று பேரில் ஆரம்பித்த இந்த தொழில் அதிலிருந்து ஒருவர் விலகிய பின் இரண்டு பேருடன், தற்பொழுது 10 கலைஞர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த 10 பேரும் வெவ்வேறு குழுவாக பிரிந்து அவர்களின் வேலையை செய்து வருகின்றனர். “நான் கவிதை மற்றும் பொருள் பற்றிய புதுவித யோசனைகளை பார்த்துக் கொள்வேன். அமித் தொழிலை விரிவடைய செய்ய உழைக்கிறார். நைனா மற்றும் சோனாலி வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையை பார்த்துக் கொள்கின்றனர். ரிஷி ஆன்லைன் ஆடர்களை பார்த்துக் கொள்கிறார். மற்ற ஐந்து நபர்கள் பேக்கேஜிங்(packaging) பார்த்துக் கொள்கின்றனர்”
மாற்றத்தை எதிர்நோக்குகிறோம்:
“ஒரு பசுமை நிறுவனமாக, மறு சுழற்சி செய்யப்பட்ட மக்கும் பொருட்களை வைத்து வீட்டு அலங்கார பொருட்கள், வாழ்க்கை முறை தயாரிப்புகள், வீட்டு பயன்பாட்டிற்காக பிற பொருட்களை புதுப்பித்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பரிசு பொருட்களை தயாரிப்பதே எங்கள் நோக்கம்”
அனைத்து பெரிய தொழில்களும் ஒரு சிறு வணிகமாக தான் ஆரம்பித்திருக்கும். அதேபோல் கவி ப்ராஜெக்டை விரிவாக்க நிதி உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் வளர்ச்சிக் கதை அடுத்த கட்டத்திற்கு செல்ல எங்கள் வாழ்த்துக்கள்.