108 வயதான பெண் தேர்வில் முதல் இடம் (Literacy Programme)

ஒரு விஷயத்தில் நமக்கு மிகுந்த ஆர்வம் இருந்து அதற்கான முயற்சிகளை எடுத்தால் நிச்சயமாக எதுவும் தடையாக இருக்காது என்பதை 108 வயதை அடைந்த கமலக்கனி என்பவர் தேர்வில் முதலிடம் பிடித்து நிரூபித்துள்ளார். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
kamalakanni

Image of Kamalakanni

சாதிப்பதற்கும், நமக்கு பிடித்ததை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை பலர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் தமிழ்நாட்டை சேர்ந்த 108 வயதை உடைய மூதாட்டி கேரளாவில் உள்ள ஒரு திட்டத்தில் பங்கு பெற்று கல்வி கற்றதோடு மட்டுமில்லாமல் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனையையும் புரிந்துள்ளார். கல்வி கற்க வேண்டும் என்ற தனது ஆசையை இந்த திட்டத்தின் மூலம் அவர் நிறைவேற்றிக் கொண்டார்.

Advertisment

கேரளாவில் நடத்தப்படும் எழுத்தறிவு திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 108 வயது மூதாட்டி முதலிடம் பிடித்துள்ளார். 1915ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் வசித்து வந்தார். கமலக்கனி தனது சிறுவயதில் கேரளாவில் ஏலக்காய் வயலில் வேலை செய்ய தொடங்கினார்.

National Statistical Office (NSO) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. குடிமக்களுக்கு கல்வி கற்க உதவும் வகையில் "அனைவருக்கும் எப்பொழுதும் கல்வி" என்ற நோக்கத்துடன் முதியவர்கள் கல்வி கற்கும் வகையில் கேரளா அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. கேரளாவில் சம்பூரணம் சாஸ்திரா எழுத்தறிவு திட்டத்தின்(Sampoornam Shastra Literacy Programme) கீழ் முதியவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அறிவொளி இயக்கத்தை போலவே இந்தத் திட்டத்திலும் மூத்த குடிமக்களுக்கு தங்கள் பெயர்களில் கையெழுத்திட கற்றுக் கொடுக்கப்படுகிறது மற்றும் மக்களுக்கு கல்வியை கற்றுத் தருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

108 வயதான பெண் தேர்வில் முதல் இடம் :

ஏலக்காய் பண்ணையில் வேலைக்காக கேரளா சென்ற கமலக்கனி இத்திட்டத்தில் கீழ் கல்வி பயின்று வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு அவர் தனது குடும்பத்துடன் வண்டன்மேடு பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவர் தனது குடும்பத்தை ஆதரிக்க வேலை செய்ய தொடங்கினார். கமலக்கனி 80 வருடங்கள் ஏலக்காய் வயல்களில் வேலை செய்ததால் பள்ளிப்படிப்பை முடிக்க முடியவில்லை.

Advertisment

ஆரோக்கியமாக இருக்கும் 108 வயது மூதாட்டி படிக்க ஆசைப்பட்டு கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் தன்னை சேர்த்துக் கொண்டார். கல்விக்காக அவரது அர்ப்பணிப்பு அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பாராட்டப்படுகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எழுத்து பயிற்சி செய்தார். எழுத்தறிவு திட்டத் தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வயதானாலும் கல்வி கற்க வேண்டும் என்று அவரது விருப்பத்திற்கு பல கேரள அமைப்புகள் நன்றியும், பெருமிதமும் தெரிவித்துள்ளனர்.

நியூஸ் 18க்கு அளித்த பிரத்தேக பதிவு கமலக்கனியின் பேரன் வண்டன்மேட்டில் வசிக்கும் ஐந்தாவது தலைமுறை தாங்கள் என்று கூறுகிறார். அவரது பாட்டியின் 109 ஆவது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் தனது பாட்டி எப்போதுமே படிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருப்பதாக அவர் கூறுகிறார். எனவே, அவர்கள் சம்பூர்ணம் சாஸ்திரத்தின் அதிகாரிகளை அணுகி கமலக்கனியின் படிப்பு ஆர்வத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்த வயதில் தனது பாட்டி ஒரு முன் உதாரணமாக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறார் கமலக்கனியின் பேரன். எழுத்தறிவு திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக கேரள மாநில அரசிடமிருந்து கமலக்கனிக்கு அங்கீகாரம் கிடைத்தது.

Advertisment

இந்த வயதில் படிக்க வேண்டும் என்ற அவரின் ஆர்வம் பலருக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது. அதுவும் இந்த வயதில் ஒரு திட்டத்தில் சேர்ந்து அதில் படிப்பு கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்ததும் பலருக்கு முன் உதாரணமாக இருக்கக்கூடும். எனவே, உங்களுக்கு பிடித்ததை செய்ய வயதை ஒரு தடையாக நினைக்காதீர்கள்.

Read in English: 108-Year-Old Woman From Tamil Nadu Tops Kerala Literacy Programme Exam

Sampoornam Shastra Literacy Programme Literacy Programme