Advertisment

இந்த ஐந்தையும் பின்பற்றினால் உங்கள் காதல் தோல்வி அடையாது

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oh My Kadavuley

காதல் உறவை வலுப்படுத்த தேவையான ஐந்து விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

1. நம்பிக்கை:

காதல் உறவில் மிகவும் அவசியமான ஒன்று நம்பிக்கை. நம்பிக்கை குறைவால் மட்டுமே இங்கு பல காதல் பிரிந்துள்ளது. அதேபோல் நம்பிக்கையால் மட்டுமே பல காதல் சேர்ந்தும் உள்ளது. நாம் காதலிக்கும் நபரை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால், யாரோ ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கையை உங்கள் காதலன் அல்லது காதலி மீது வையுங்கள். ஒருவேளை யாரோ உங்களிடம் வந்து உங்கள் காதலன் அல்லது காதலி பற்றி கூறும் சில விஷயங்கள் மேல் உங்களுக்கு சந்தேகம் வந்தால், அதை பொறுமையாக உங்கள் துணை இடம் பேசி என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உண்மை என்னவென்று தெரியாமல் நீங்கள் ஒருவர் மீதும் வைக்கும் நம்பிக்கையை சந்தேகப்படாதீர்கள். அதேபோல், உங்கள் துணை உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும். ஏனெனில், நம்பிக்கை ஒரு முறை முறிக்கப்பட்டால் அதனை மீண்டும் பெறுவது கடினம். நம்பிக்கையால் உருவாகும் உறவே நீண்ட காலத்திற்கு நிரந்தரமானது. 

2. நீங்கள் உங்கள் துணையிடம் நீங்களாக இருங்கள்:

Advertisment

நீங்கள் உங்கள் துணையுடன் இருக்கும் போது எந்த ஒரு பயமும் இல்லாமல், அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் இயல்பாக இருந்தால் நீங்கள் சரியான உறவில் இருக்கிறீர்கள். நீங்கள் காதல் உறவில் இருக்கும் பொழுது முதல் சில நாட்கள் உங்களுக்கு சில தயக்கங்கள் இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் நீங்கள் அவர்களுடன் இயல்பாகுவதை உணர்வீர்கள். ஒருவேளை உங்கள் துணை என்ன நினைப்பார்கள் என்று நினைத்து, நீங்கள் அவர்கள் முன் இயல்பாக இல்லாமல் நடிக்கிறீர்கள் என்றாலும் அல்லது ஒருவரை உங்களை காதலிக்க வைப்பதற்காக நடிக்கிறீர்கள் என்றால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களால் அந்த நாடகத்தை நிறைய நாட்களுக்கு போட முடியாது. மேலும், உண்மை தெரியும் பொழுது அந்த உறவு நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான இயல்பை பார்த்து ஒருவர் உங்களை காதலிக்கிறார் என்றால் அந்த காதல் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்.

3. நீங்கள் இருவரும் உங்கள் கனவுகளை ஆதரித்து கொள்ள வேண்டும்:

ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு சில கனவு இருக்கும். அந்த கனவை யார் எதிர்த்தாலும் அவர்கள் துணை ஆதரவாக இருக்க வேண்டும். காலம் முழுவதும் நம்முடன் இருக்கப் போகும் ஒருவரிடம் இருந்து வரும் அந்த ஆதரவு சாதிப்பதற்கு அளவில்லா நம்பிக்கையை தரும். எனவே, நீங்கள் உங்கள் துணையின் கனவுகளை ஆதரிக்கும் பொழுது உங்கள் உறவு இன்னும் வலிமையாகும். ஒரு உறவில் எப்பொழுதும் உங்கள் துணை மட்டும் உங்கள் கனவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது, நீங்களும் அவர்களின் கனவுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 

Advertisment

4. நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்:

மரியாதை என்றால் பலரும் மரியாதையாக வாங்க, போங்க என்று கூப்பிட வேண்டும், அப்படி தான் அவர்களிடம் பேச வேண்டும் என்று தவறாக கருதுகின்றனர். ஆனால், மரியாதை என்பது ஒரு பிரச்சனை அல்லது வாக்குவாதம் வந்தால் கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல், அவர்களை தாழ்த்தி பேசாமல், அவர்கள் பெற்றோர்கள் பற்றி, வளர்ப்பு பற்றி இழிவாக பேசாமல் இருக்க வேண்டும். நீங்கள் ஒருவரை உங்களுக்கு தாழ்ந்தவராக நினைக்கும் பொழுதே அவர்களை மரியாதை குறைவாக நடத்துவீர்கள். எனவே, உங்கள் வாழ்க்கை துணையாக வருபவர் உங்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர் இல்லை என்ற நினைவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்.

5. ஒழுங்கான பேச்சு வார்த்தை / உரையாடல்:

ஒருவருக்கொருவர் எல்லா விஷயத்தையும் பேசிக் கொள்ள வேண்டும். இன்று இருக்கும் காதல் உறவுகளில் ஒழுங்காக பேசிக்கொள்ளாததால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. அது மட்டும் இன்றி செல்போனில் மெசேஜ் செய்யும் பொழுது நீங்கள் ஒரு விஷயத்தை எந்த நோக்கத்தில், எந்த முறையில் சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்வது கடினம். எனவே, ஒரு பிரச்சனை வந்தால் நேரில் சந்தித்து பேசுவது நல்லது. பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. ஆனால், நீங்கள் எப்படி பேசுகிறீர்கள், என்ன வார்த்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. சில சமயங்களில் கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் என்றும் கூறுவர். எனவே, நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது தான் கவனமாக பேச வேண்டும்.

relationship காதல்
Advertisment