Advertisment

காதல் தோல்வியிலிருந்து(love breakup) வெளிவர ஒன்பது குறிப்புகள்

காதல் தோல்வியிலிருந்து வெளிவருவது சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் இந்த ஒன்பது குறிப்புகளை பின்பற்றுவது மூலம் அந்த நினைவுகளில் இருந்து உங்களால் வெளியே வர முடியும். அதனைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
healing from breakup

Image is used for representational purpose only

காதல் தோல்வி மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அந்த நினைவுகளில் இருந்து வெளிவருவது கடினமாக விஷயமாக இருந்தாலும் நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பின்பற்றினீர்கள் என்றால் அந்த நினைவுகளில் இருந்து வெளிவந்து உங்கள் வாழ்க்கையில் கவனத்தை செலுத்த உதவும். காதல் தோல்வியில் இருந்து முழுமையாக வெளிவரவும், உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் இந்த ஒன்பது விஷயங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Advertisment

1. வருத்தப்படுவதற்கும், மன எண்ணங்களை உணர்வதற்கும் நேரத்தை கொடுங்கள்:

காதல் தோல்வியிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டும் எனில் நமது எண்ணங்களை நாம் முதலில் மதிக்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவர் பலவிதமான உணர்ச்சிகளை உணரக்கூடும். உதாரணத்திற்கு சோகம், கோவம், குழப்பம் என பல்வேறு உணர்ச்சிகள் இருக்கக்கூடும். ஒரு விஷயத்தில் இருந்து மீண்டு வருவது எளிதாக நடக்கக்கூடிய காரியம் இல்லை. அதனால் நீங்கள் இதிலிருந்து வெளி வருவதற்கு உங்களுக்கு தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும்.

2. உங்களை ஆதரிப்பவர்களிடம் உதவி கேளுங்கள்:

Advertisment

இந்த சவாலான சூழ்நிலையை நீங்கள் கடக்க முயலும் பொழுது உங்கள் மீது பாசம் வைத்திருப்பவர்களையும், ஆதரவு தருபவர்களையும் உங்களை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களை, யோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது மனதில் ஒரு வகையான நிம்மதி தோன்றும். அவர்களும் உங்களை இந்த கடினமான சூழ்நிலையை கடக்க உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

3. சுய கவனிப்பில்(self care)ஈடுபடுங்கள்:

இந்த மாதிரியான சமயத்தில் பலர் அவர்களை பார்த்துக் கொள்வதையே வெறுக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலையும், மனநிலையும் இன்னும் மோசமான நிலைமையை அடைகிறது. நீங்கள் காதல் தோல்வியிலிருந்து வெளிவருவதற்கு சுய கவனிப்பு(self care) ஒரு சிறந்த முறையாக இருக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது, தியானம் செய்வது, ஒழுங்காக தூங்குவது போன்ற விஷயங்களில் உங்களின் சிந்தனையை செயல்படுத்துங்கள். இப்படி உங்களை கவனிப்பது மூலமாக உங்களின் எண்ணங்களும் மாறும் மேலும் உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள உதவும்.

Advertisment

breakup heal

4. உங்கள் முன்னால் காதலி அல்லது காதலனுடன் பேசுவதை நிறுத்துங்கள்:

காதல் தோல்வியின் ஆரம்ப கட்டத்தில் நாம் நமக்கான எல்லைகளை தெளிவாக திட்டமிட வேண்டும். முக்கியமாக நமது முன்னாள் காதலி அல்லது காதலனுடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படி செய்வது காதல் தோல்வியை கடந்து வருவதற்கு உதவும். சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற விஷயங்களில் இருந்து அவர்களை தள்ளி வையுங்கள். ஏனென்றால், தெரியாமல் நீங்கள் பார்க்கும் விஷயங்களும் அல்லது தேவையில்லாத விஷயங்களும் உங்களின் உணர்ச்சிகளை தூண்டும். உங்களின் மன அமைதி தான் முக்கியம் என்பதை உணருங்கள்.

Advertisment

5. உங்களின் தனித்துவத்தையும், ஆர்வத்தையும் கண்டுபிடியுங்கள்:

இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உங்களின் தனித்திறமையை கண்டுபிடிக்க முடியும். நீங்கள் காதல் உறவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் உங்களின் விருப்பங்களுக்கு அல்லது உங்களை ஊக்குவிக்கும் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அந்த காதல் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பீர்கள். அதனால் இந்த சமயத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பியுங்கள். உங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டு உங்களுக்கு எதன் மீது விருப்பம் உள்ளதோ அதில் உங்கள் கவனத்தை செலுத்துவது தேவையில்லாத எண்ணங்களில் இருந்து வெளிவர உதவும்.

6.நிபுணரின் உதவியை பெறுங்கள்:

Advertisment

பலருக்கு காதல் நினைவுகளில் இருந்து வெளி வருவது மிகவும் கடினமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நிபுணரை சந்தித்து உதவி கேட்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். நிபுணர்கள் உங்களின் எண்ணங்களை எப்படி கையாள வேண்டும் என்றும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் போன்ற தெளிவான விளக்கத்தையும் உங்களுக்கு தருவார்கள். அவர்களின் வழிகாட்டுதல்கள் உங்களின் தேவையில்லாத எண்ணங்களில் இருந்தும், குழப்பங்களில் இருந்தும் வெளிவர உதவியாக இருக்கும்.

breakup healing

7. நேர்மறையான எண்ணங்களை(positive thoughts):

Advertisment

ஒரு காதல் தோல்விக்கு பிறகு நமக்கு நம்மை பற்றிய தாழ்வு மனப்பான்மையும், சந்தேகங்களும் வரக்கூடும். இப்படி ஒரு சூழ்நிலையில் நம்மை நாம் எதிர்மறையாக தான் பேசிக்கொண்டு, தாழ்த்தி நினைத்துக் கொள்வோம். இதுபோன்ற எண்ணங்களில் இருந்து வெளிவருவதற்கும், உங்கள் எண்ணங்களை நேர்மறையான வழியில் செல்வதற்கும் நீங்கள் பழக்கப்படுத்த வேண்டும். உங்கள் மதிப்பு, பலம் மற்றும் நல்ல குணங்கள் ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். நிறைய ஊக்கவிக்கும் பேச்சுக்கள், புத்தகங்கள், பாடல்கள், podcast என பல விதங்களில் உங்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்வதற்கு கேளுங்கள்.

8. உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்:

இந்த நேரத்தை பயன்படுத்தி உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் உங்களால் கவனம் செலுத்த முடியும். அதனால் புது இலக்குகளை தேர்ந்தெடுத்து அதை நோக்கி உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வது, புதிதாக ஒரு திறமையை வளர்த்து கொள்வது, ஏதாவது கோர்ஸில்(course) சேர்ந்த படிப்பது, பயணம் செய்வது போன்ற விஷயங்களில் உங்களை ஈடுபடுத்தலாம். இது போன்ற விஷயங்கள் உங்களை காதல் தோல்வி சிந்தனையில் இருந்து திசை திருப்ப உதவுவதோடு உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

Advertisment

9. மற்றவர்களுடன் பேசுவது:

பெரும்பாலும் காதல் தோல்விக்கு பின்னர் அனைவரும் தனியாகவே இருக்க விரும்புவர். ஆனால், இப்படி உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மீண்டும் மீண்டும் உங்களை அந்த காதல் உறவை பற்றியே யோசிக்க வைக்கும். பெரும்பாலும் தனிமையில் இருப்பதை தவிர்த்து விட்டு சமூக செயல்களில் ஈடுபடுவது, புதிய மனிதர்களை சந்திப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம். பலர் அவர்களின் அனுபவங்களையும், வாழ்க்கையும் உங்களுடன் பகரும்பொழுது உங்கள் காதல் தோல்வி எண்ணங்களில் இருந்து வெளிவருவதற்கு உதவியாக இருக்கும்.

காதல் தோல்வியை கடந்து வருவது கடினமாக இருந்தாலும் மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றுவது மூலம் உங்களின் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும். இந்த நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு விஷயத்தை கடந்து வருவதற்கு நேரமும், உங்களைப் நீங்கள் புரிந்து கொள்வதும் அவசியமாகும். 

love breakup
Advertisment