டிஜிட்டல் மீடியா பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அவர்களின் திறமையை காட்ட டிஜிட்டல் ஒரு நல்ல தளமாக உள்ளது. பெரிய அளவில் செலவில்லாமல் ஒருவரின் திறமையை வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது. சமூக வலைத்தளங்களை பலர் பொழுதுபோக்காக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். மற்றவர்களை என்டேர்டைன் செய்ய வேண்டும் என்ற வகையில் சிலர் சமூக வலைத்தளங்களை அவர்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தி ஒருவரின் திறமையை வெளிப்படுத்தகின்றனர் அல்லது மற்ற விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். மக்களை மகிழ்ச்சி படுத்த நினைக்கும் பொழுது அது வெறும் என்டேர்டைன்மெண்ட்டாக மட்டுமல்லாமல் சில சமூக கருத்துகளையும் இணைத்து சிலர் சமூக வலைதளங்களில் அவர்களின் கன்டென்ட்டை(content) பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் தான் RJ Sindhu.
RJ சிந்து தனது இன்ஸ்டாகிராம்(Instagram) பக்கத்தை பயன்படுத்தி சிறப்பாக மக்களை என்டர்டெயின்(entertain) செய்வது மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் காமெடியாக மக்களுக்கு கூறுகிறார். தினம் தினம் நாம் பார்க்கக் கூடிய விஷயங்களை அவர் நகைச்சுவையான வடிவில் கூறி வருகிறார். குறிப்பாக அம்மாக்கள் எப்படி இருப்பார்கள், என்னென்ன மாதிரி விஷயங்களை அவர்கள் கூறுவார்கள், பெண்களுக்கு சமூகத்தில் இருந்து வரும் கருத்துக்கள் இது போன்ற பல விஷயங்களை அவர் வீடியோக்களின் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் தாயாக நடிக்கும் கதாபாத்திரம் நிறைய வரவேற்பை பெற்றது.
அவரது பல வீடியோக்களில் பாலின பாகுபாட்டை பற்றி மக்களுக்கு புரியும் வகையில் நகைச்சுவையாக அவர் நடித்திருப்பார். பெண்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் ஆண்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலின பாகுபாட்டிற்காகவும் அவர் சில வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். அதில் சில வீடியோக்களை பற்றி நாம் பார்ப்போம்.
அம்மா மகள் பேசிக் கொள்வது:
இந்த வீடியோவில் தாய் மகளிடம் கூறும் விஷயங்களை பற்றியும் தினம்தோறும் பெண்கள் வாழ்க்கையில் கேட்கும் விஷயங்களை பற்றியும் அவர் கூறியிருப்பார். குறிப்பாக "உன் வாயசுல எனக்கு ரெண்டு பசங்க, சரியா உட்காரு, இந்த ஆட்டம் எல்லாம் இதோட க்ளோஸ் மாமியார் வீட்ல இதெல்லாம் நடக்காது, எதுத்து பேசாத, பொண்ணா அடக்க ஒழுக்கமாய் இரு, அவன் பையன்" இந்த மாதிரி ஒரு பெண் வீட்டில் தினம்தோறும் அனுபவிக்க கூடிய பாலின பாகுபாட்டை, சாதாரண ஒரு உரையாடலில் கூட நாம் பார்க்க முடியும். இதுபோன்ற அவரின் வீடியோக்கள் நிறைய பார்வையாளர்களை பெறுகிறது.
பெண்கள் கேட்க வேண்டாம் என்று நினைக்கும் விஷயங்கள்:
"பரவாயில்லையே பொண்ணா இருந்துட்டு நல்லா பைக்லாம் ஓட்டுரியே"
"Cricket, Footballலாம் பாப்பியாமா, விளையாட கூட தெரியுமா"
"பரவாயில்லையே பொண்ணா தனியா ஆபிஸ் டூர்(office tour) எல்லாம் போயிட்டு வரியே, தைரியமான பொண்ணா தான் இருக்க பரவால்ல"
"என்னது பொண்ணா இருந்துட்டு சமைக்க வராதா, கல்யாணம் பண்ண அப்புறம் என்ன பண்ணுவ"
"நல்லா ஹைட்டா(height) வளர்ந்துட்டாள உங்க பொண்ணு, பரவால்ல பரவால்ல ஆனா மாப்பிள்ளை கிடைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம்"
"இன்னொரு கோர்சா(course) இப்படி படிச்சிட்டு இருந்தா எவண்டி மாப்பிள்ளை தருவான்"
"அவன் பையன், நீ பொண்ணு அடக்க ஒழுக்கமா இரு"
இதுபோன்று சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை தனது வீடியோக்களின் மூலம் அவர் பதிவிட்டு வருகிறார். இது நிறைய மக்களிடம் சென்றடைவதற்கான முக்கிய காரணம் அவரின் நகைச்சுவையான முகபாவனை. ஒரு விஷயம் நிறைய மக்களை சென்றடைய வேண்டுமானால் அது நகைச்சுவையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் கருத்துக்களை கூட நகைச்சுவையாக சொன்னால்தான் அது பலரிடம் சென்றடைகிறது.
குறிப்பாக அம்மாக்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் எப்படி ரியாக்ட்(react) செய்வார்கள், எந்த மாதிரியான பதில்களை தருவார்கள் இது போன்ற விஷயங்களை நடிப்பதில் தனிதவமிக்க ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவரது வீடியோக்களை மக்கள் அவர்களுடன் ஒப்பிட்டு கொள்ள முடிகிறது என்பதால் அதற்கான வரவேற்பு நிறைய கிடைக்கின்றது.
இவரின் ரெடி ஸ்டெடி போ(Ready Steady PO) என்கின்ற வானொலி நிகழ்ச்சி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி காலையில் மக்களை சுறுசுறுப்பாக உற்சாக படுத்தும் வகையில் அவர் தொகுத்து வழங்கினார். மேலும் கிங்ஸ் ஆப் காமெடி(Kings of Comedy) என்று ஷோவின் மூலம் டெலிவிஷனுக்கு வந்தார். அது மட்டும் இன்றி செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு கதாபாத்திரம் மூலம் திரை உலகிற்கும் அறிமுகமானார். தற்போது இன்ஸ்டாகிராமில்(Instagram) இவருடைய வீடியோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.