Advertisment

இந்தியாவைப் பற்றிய ஆறு ஆவணப்படங்கள்

author-image
Devayani
New Update
India Emerges documentary

இந்த 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் தேசபக்தி பாடல்களை கேட்பது மற்றும் வரலாற்றை கூறும் படங்களை பார்த்து குடியரசு தினத்தை கொண்டாட நினைப்பீர்கள். வரலாற்றை புரிந்து கொள்வது மனிதருக்கு மனிதன் வித்தியாசப்படும். இருப்பினும் அதில் உள்ள உண்மை சம்பவங்களை பார்த்து நமது தாய் நாட்டை பற்றியும் அதற்காக போராடிய வீரர்களை பற்றியும் பெருமை கொள்வோம்.

Advertisment

இந்த குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் உங்களுக்காக சில ஆவணப் படங்களை நாங்கள் எடுத்து வந்துள்ளோம். இதை பார்ப்பது மூலம் நீங்கள் இந்தியாவை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

1. I Am 20:
இது ஒரு சிறிய ஆவணப் படம். I Am 20 ஏன் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது என்றால் அது சுதந்திர தினத்தன்று பிறந்த பல மக்களுடைய நேர்காணலின் தொகுப்பாகும். இதை 
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவு காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் சுதந்திரம் இளைஞர்களுக்கு நல்ல வாழ்க்கையை தர வேண்டும் என்ற கனவோடு பெறப்பட்டதால், இது 1967இல்  20 வயதை அடைந்த மக்களை படம் ஆகியுள்ளது. இதை நீங்கள் YouTubeயில் பார்க்கலாம்.

2. The Story of India:
2007இல் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் மைக்கேல் வூட் (Michael Wood) இந்த விரிவான ஆவணப் படத்தை எடுத்துள்ளார். இது ஆறு பாகங்களை கொண்டுள்ளது. மேலும் பாட புத்தகத்தில் கொடுக்கப்படாத இந்தியா பற்றிய கதைகளையும், அறிவையும் இந்த ஆவணப் படம் நமக்கு தருகிறது.

Advertisment

சிந்து சமவெளி நாகரிகம் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரை, இந்தியாவை பல கோணங்களில் காட்டுகிறது மற்றும் நடக்கும் செயல்களுக்கு பின்னால் உள்ள அர்த்தத்தையும் விளக்குகிறது. இந்த ஆவணப் படம் வரலாற்று ஆதாரம் மற்றும் கண்டுபிடிப்புகளை தவிர இந்தியாவில் வாழும் பல சராசரி மனிதர்களின் கலாச்சாரத்தையும், வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

இந்த ஆவணப் படம் தெற்கு இந்தியாவையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை BBC Networkகில் நீங்கள் பார்க்கலாம்.

Advertisment

3. India Emerges: A Visual History:
இந்தியா கைப்பற்றப்பட்ட காலத்தில் இருந்து தற்போது பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவாகும் வரை நம் வரலாறு ஒரு ஊக்குவிக்கும் கதையாகும். இந்த ஆவணப் படத்தை ஏன் மக்கள் பார்க்க வேண்டும் என்றால் இதில் 1903 முதல் 1937 வரை நடந்த உண்மையான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அது மட்டும் இன்றி இந்தியாவின் பயணத்தை இது காண்பிக்கிறது. 1965 மற்றும் 1971 நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போர் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. அன்று முதல் இன்று வரை இந்தியாவில் நடந்த அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் இதனை கண்டிப்பாக பார்க்கலாம். இதை நீங்கள் Prime Videoவில் பார்க்கலாம்.

4. The Great Indian Railways: 
இந்திய வரலாற்றை நாம் இந்திய ரயில்வே இல்லாமல் படிக்க முடியாது. இந்த ஆவணப் படம் டிசம்பர் மாதம் 2018 வெளியானது. இதில் வரலாற்றில் ரயில்வே அமைக்க எது காரணமாக இருந்தது என்பதை விளக்குகிறது. இந்த ஆவணப் படம் ரயில் பயணத்தை விரும்புவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கக்கூடும். ஏனென்றால் இது பல வகையான ரயில்கள் பற்றியும் அதன் பின் உள்ள வரலாற்றை கூறுகிறது. இதை National Geographicயில் நீங்கள் பார்க்கலாம்.

The Great Indian Railways

Advertisment

5. Beyond All Boundaries:
இந்தியா என்பது கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் உள்ள நாடு என்பதை நாம் அறிவோம். இந்த ஆவணப் படத்தை சுஷ்ருத் ஜெயின்(Sushrut Jain) விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை காட்டுவதற்காக எடுத்துள்ளார். 2013ல் இந்த ஆவணப் படம் வெளியாகி உள்ளது. இதில் கிரிக்கெட்டின் மேல் இந்த நாடு எவ்வளவு பிரியத்தை கொண்டு இருக்கிறது என்பதையும், ஏன் இந்தியர்கள் கிரிக்கெட்டின் மீது இவ்வளவு ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. இது மூன்று தீவிர ரசிகர்கள் எப்படி இந்த விளையாட்டுக்கு உண்மையாக இருந்தது மட்டுமில்லாமல் பல தியாகங்களை செய்துள்ளனர் என்பதை காண்பிக்கிறது. இதை நீங்கள் YouTubeல் பார்க்கலாம்.

6. The World Before Her:
இந்த ஆவணப் படம் நிஷா பஹுஜா(Nisha Pahuja) என்பவரால் படமாக்கப்பட்டது. மேலும் இது தான் பார்ப்பதற்கு உணர்வுபூர்வமாக இருக்க கூடும். இது இரண்டு இந்திய பெண்களின் வாழ்க்கையை விளக்குகிறது. மேலும் அவர்களுக்கு இருந்த விதிமுறைகளுக்கும், நவீன கண்ணோட்டத்திற்கும் இடையேயான போராட்டத்தை காட்டுகிறது. இது 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்தியாவில் பெண்கள் எதிர் கொண்ட ஆணாதிக்க சவால்களை பற்றி படமாக்கப்பட்டுள்ளது. இதை Prime Videoவில் நீங்கள் பார்க்கலாம்.

documentaries Indian documentary documentary on India
Advertisment