வேலை பார்ப்பவர்களுக்கு அவ்வப்போது விடுமுறை கிடைக்கிறது. ஆனால் வீட்டில் வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு எந்த விதமான விடுமுறைகளும் கிடைப்பதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் தான் அவர்களுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. இருப்பினும் வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. குடும்பத்திற்காக எவ்வளவு வேலை செய்தாலும் "வீட்ல சும்மா தான இருக்க" என்று கூறி அவர்களை அவ்வப்போது அவமதிப்பது உண்டு.
பெண்களுக்கு தான் நிறைய பொறுமை இருக்கிறது, அவர்களால் தான் பல வேலைகளை ஒன்றாக செய்ய முடியும் என்று பெண்களை புகழ்வது போல் கூறி அவர்களை இந்த சமூகம் ஏமாற்றி வருகிறது. இது போன்ற விஷயங்கள் சிறுவயதிலிருந்தே தொடங்கி விடுகிறது.
பெண்கள் எவ்வளவு தான் படித்திருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. திருமணம் ஆனவர்களில் 32 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். மற்றவர்கள் வீட்டை பார்த்துக் கொண்டு இல்லத்தரசிகளாக இருக்கின்றனர்.
இப்படி இருக்கையில் பெண்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் சில இல்லத்தரசிகளிடம் கேட்டோம். அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"மக்கள் என்னை வெறும் இல்லத்தரசி தான என்று கேட்பதை நிறுத்த வேண்டும். இதை என் குடும்பத்தினரே செய்யும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்களே நான் செய்வதை மதிக்காதது போல் இருக்கிறது. நான் எனது வேலையை விட்டு முழு நேரமாக வீட்டை பார்த்துக் கொள்ள முடிவெடுத்தேன். ஆனாலும் அதற்காகவும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் எனது துணை என்னை நக்கலாக பேசும் பொழுது வருத்தமாக இருக்கும்" என தன் மகனைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டில் இருக்கலாம் என முடிவு செய்த இல்லத்தரசி சகானா கூறியது.
இல்லத்தரசிக்கு என்ன வேண்டும்? மரியாதை
விஜி என்ற இரண்டு குழந்தையின் தாய், "நான் எனது வேலையை விட்டு எனது குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வீட்டில் இருக்க ஆரம்பித்தேன். ஒரு பேருக்கு தான் என்னிடம் வங்கி கணக்கிருக்கிறது. எனது கணவர் தான் வீட்டு செலவிற்காக பணத்தை எடுக்கிறார். அதை தவிர்த்து மற்ற அனைத்திற்கும் நான் அவரிடம் சென்று பணம் கேட்பதாக இருக்கிறது. இது என்னை தாழ்மையாக நினைக்க வைக்கிறது" என்று கூறினார்.
இல்லத்தரசிகளுக்கு என்ன வேண்டும்? பணரீதியான சுதந்திரம்
எனது துணை எனக்கு முன்பு எழுந்தாள் அவர் காபி கூட போட மாட்டார். நான் அவருக்குப் பிறகு இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து எழுந்தாலும் கூட நான் எழுந்து உணவு தயாரிப்பேன் என்று அவர் காத்துக் கொண்டிருப்பார். அடுப்பங்கரைக்கு சென்று உணவு செய்வதில் என்ன கஷ்டமோ தெரியவில்லை. ஒரு காபி அல்லது டோஸ்ட் கூட அவர் செய்வதில்லை" என்று கூறுகிறார் கிருத்தி. இவர் ஐடி வேலையை விட்டு முழு நேரமாக வீட்டை பார்த்துக் கொள்கிறார்.
இல்லத்தரசிகளுக்கு என்ன வேண்டும்? சமைப்பது பாலினத்திற்கான வேலை அல்ல, அது மனித வாழ்விற்கு தேவையான ஒன்று
இல்லத்தரசி சிந்து கூறுகிறார், "எனது கணவர் இந்த கோவிட் ஆரம்பத்தில் இருந்து வீட்டில் இருந்து தான் வேலை பார்க்கிறார். இருந்தும் அவர் வேலையில்லாத நேரங்களில் கூட குழந்தையை பார்த்துக் கொள்வதில்லை. கிரிக்கெட் பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்வது போன்ற விஷயங்களை தான் அவர் செய்கிறார். இதை தனது வேலை அழுத்தத்தை குறைப்பதற்காக அவர் செய்கிறார் என்று கூறுகிறார். ஏன் நான் வீட்டில் வேலை செய்வதில்லையா? நான் தனி ஆளாக குழந்தையையும் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் முழு நேரமாக பார்த்துக் கொள்கிறேன். அது கடினமான உழைப்பு இல்லையா? ஏன் அவரால் Netflix பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தையை கூட பார்த்துக் கொள்ள முடிவதில்லை".
இல்லத்தரசிகளுக்கு என்ன வேண்டும்? எனக்கான நேரம்:
கிருத்திகா தனது ஐடி வேலையை விட்டு முழு நேரமாக இல்லத்தரசியாக இருக்கிறார். "கர்ப்ப காலத்தில், குழந்தை பெற்ற பிறகு தற்பொழுது மாதவிடாயின் போது நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு எவ்வளவு வலிகள் இருந்தாலும் எனது கணவரும் அவரின் குடும்பத்தாரும் நான் ஒவ்வொரு வேலைக்கும் வகைவகையாக அவர்களுக்கு சமைத்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனது உடலில் ஏற்படும் வலிகள் அனைத்து பெண்களுக்கும் ஏற்படக்கூடிய வழிகள் என்று அதை நான் பொறுத்துக் கொள்ள வேண்டும், சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். நான் ப்ரொபஷனல் ஆக ஒரு வேலைக்கு செல்லாவிட்டாலும் உடம்பு சரியில்லாத நாட்களில் கூட ஒரு இரண்டு நாட்கள் ஓய்வுக்கு தகுதியற்றவளா?
இல்லத்தரசிகளுக்கு என்ன வேண்டும்? விடுமுறை:
இல்லத்தரசிகளின் உடம்பு பல சக்திகளை கொண்டுள்ளது போல் விடுப்பு இல்லாமல் வேலை பார்க்கும் படி இந்த சமூகம் கூறுகிறது. அவர்களும் சாதாரண மனிதர்கள் தானே. ஒரு பெண் வீட்டில் இருந்து குழந்தையையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. நாம் முதலில் அவர்களை ஏளனமாக நினைக்க கூடாது. இல்லத்தரசியாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் அனைத்து பெண்களுக்கும் மரியாதை, பாராட்டு, ஆதரவு மற்றும் அக்கறையை கொடுக்க வேண்டும்.