உங்கள் காதல் உறவில் பயம் உள்ளதா?

author-image
Devayani
Nov 01, 2022 17:29 IST
fear in relationship

உறவுகளில் இருக்கும் முக்கியமான சிவப்பு கொடிகளில் ஒன்று பயம். இது பலமுறை ஒரு சாதாரண உணர்ச்சி என புறக்கணிக்கப்படுகிறது. உறவுகளில் பயம் கருத்து வேறுபாடுகள், தவறான தகவல் பரிமாற்றம் இதனின் விளைவாக இருக்கலாம். ஆனால் அதை புறக்கணிக்க முடியாது. ஏனெனில், எந்த காரணத்திற்காக இருந்தாலும் பயத்தின் உணர்வு ஒரு உறவை எதிர்மறையாக பாதிக்கும். இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள். நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள்? சொல்லப்பட்ட நபர் உங்கள் வாழ்க்கை துணையாக இருந்தால் நீங்கள் தவறான உறவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Advertisment

நம் சமூகம் உறவுகளில் பயம் என்ற ஒரு உணர்ச்சியை சாதாரணமாக்கிவிட்டது. ஒரு உறவில் பெண் ஆணுக்கு பயப்படுவதை இயல்பான வழக்கமாக கருதப்படுகிறது. தம்பதியினர் இடையே இதற்கான காரணத்தை யாரும் கண்டுபிடிக்க முயற்சிப்பதில்லை. பயம் ஒரு உறவை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் யாரும் புரிந்து கொள்வதில்லை.

உறவுகளில் பயம் இருப்பது பாலின வேறுபாட்டை குறிக்கிறது. இதுற்கு பாலின சமத்துவ இன்மையால் சிதைக்கப்பட்ட உறவுகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். சமூகத்தில் ஆண்கள் ஆத்திக்கம் செலுத்துபவர்களாக இருப்பதால் அவர்கள் விரும்பியதை பெறுவதற்கான பாக்கியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சில ஆண்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை வைத்து பெண்களை தாழ்த்தப்பட்டவர்களாக நடத்துகிறார்கள். அது பயத்தின் சூழலை உருவாக்கி பெண்களை அவர்கள் சொல்வதைக் கேட்க கட்டாயப்படுத்துகிறது. குறிப்பாக இந்த பயம் திருமணங்களில் பெண்களை ஆண்களுக்கு அடிபணிய செய்ய பயன்படுத்தப்படுகிறது. 

சிறுவயதில் இருந்து பெண்கள் தங்கள் வீட்டிலும், வெளியிலும் ஆண்களுக்கு பயப்பட வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது. ஆண்கள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்க கூடும் என்று தான் பெண்களை கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அவர்களை தண்டிக்க ஆண்களுக்கு உரிமை உண்டு என்றும் அதனால் ஆண்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு ஆணின் அதிகாரத்தை எதிர்த்து ஒருபோதும் பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது. ஒரு பெண் ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டால் அவள் அடி வாங்காமல் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறது. அதுவே ஆண்களின் விருப்பத்தை புறக்கணித்தால் அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்றே அர்த்தம்.

Advertisment

ஒரு உறவில், பயத்தின் அடிப்படையில் ஏன் ஆண்களின் கோரிக்கைகளை பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவள் ஏன் ஒரு ஆணின் கோபத்தை தாங்கிக் கொள்ள வேண்டும்? அவள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்றால் தன்னை அடிப்பாரோ அல்லது ஏதேனும் தீங்கு விளைப்பாரோ என்ற பயத்திலேயே அவள் ஏன் வாழ வேண்டும்? அவள் ஏன் ஆண்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும்?

உங்களில் சிலர் கணவனும் மனைவிக்கு பயப்படுவதுண்டு, அவர்களும் தாக்கப்படுவது உண்டு என்று கூறலாம். அதுவும் முற்றிலும் உண்மை. அதையும் ஒரு சமமான தவறாக கருதி தடுக்க வேண்டும். ஆனால், ஆண்களை விட பெண்கள் அன்றாட வாழ்வில் அதிக பயப்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஒரு கணக்கெடுப்பின்படி, 53 சதவீத பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அஞ்சுகின்றனர் மற்றும் கிட்டத்தட்ட பாதி பெண்கள் உடல்ரீதியான தாக்குதலுக்கு அஞ்சுகின்றனர்.  மேலும் கணக்கெடுக்கப்பட்ட ஆண்களில், 34 சதவீதம் பேர் மட்டுமே இத்தகைய அச்சங்களைக் கொண்டிருக்க ஒப்புக்கொண்டனர். 

உறவுகளில் இருந்து பயத்தை நீக்க முதலில் எந்த தீங்கும், அதை விளைவிக்கும் பழக்கமும் நியாயமற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆணும், பெண்ணும் அவர்களின் துணைக்கு தீங்கு விளைவிப்பது நியாயமாகாது. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது குற்றமாகும். அது ஆண் செய்தாலும் குற்றமே, பெண் செய்தாலும் குற்றமே. இரண்டாவதாக, ஒரு மனிதன் தனது கோரிக்கைகள் நியாயமானதா? இல்லையா? என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, ஆண்கள் அவர்களின் கோபப் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும் அதுமட்டுமின்றி பெண்களை தாழ்த்தப்பட்டவர்களாக கருதக்கூடாது. ஒரு நபர் பிறருக்கு தீங்கு விளைவித்தால் அது அன்புக்குரியவர்களுக்கு மட்டுமல்ல பொதுவான மக்களுக்கும் ஆபத்தாக மாறுகிறது.

எனவே, பயம் உங்கள் உறவுகளை ஆள்வதை நிறுத்துங்கள், உறவில் இருப்பவர்களோ அல்லது வெளியில் இருப்பவர்களோ நமக்கு தீங்கிழைக்க நினைத்தால் அவர்களை புறக்கணித்து வேண்டும். நம்மை துன்புறுத்தும் உரிமையை அவர்களுக்கு வழங்காமல் இருக்க வேண்டும்.

#relationship