Hema's Kitchenஇன் YouTube பயணம் தொடங்கிய கதை

தனது 40 வயதில் பல முயற்சிகள் செய்து பல தோல்விகளை எதிர்கொண்டு தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார் ஹேமா. அவரின் வாழ்க்கை பயணம் பல பெண்களுக்கு சிறந்த ஊக்கமாக இருக்கக்கூடும். எனவே, அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Hema's Kitchen

Thumbnail from Hema's Kitchen Youtube Channel

இந்த சமூகம் பெண்களின் வாழ்க்கையில் திருமணத்தை தான் இலக்காக கருதுகிறது. பெண்களும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு அவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என கருதுவதும் உண்டு. ஆனால் இந்த சிந்தனைகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் பல பெண்கள் குழந்தையை பெற்ற பிறகு தான் தங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தை தேட ஆரம்பிக்கிறார்கள். பலர் அந்த தேடலில் வெற்றியையும் அடைந்திருக்கிறார்கள். இப்படித்தான் YouTubeஇல் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் ஹேமாஸ் கிச்சன் உடைய உரிமையாளர் ஹேமா வாழ்க்கையில் பல கஷ்டங்களைத் தாண்டி தனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் 40 வயதில் தொழில் செய்ய ஆரம்பித்தார்.

Advertisment

சிறுவயதில் இருந்து பெரும்பாலும் வெளியுலகம் தெரியாமல் வளர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு தான் உண்மையான உலகத்தை சந்திக்கிறார். B.A History படித்து முடித்துவிட்டு ஹேமா காதல் திருமணம் செய்து கொண்டார். அவரின் கணவருக்கு அப்பொழுது 2500 ரூபாய் தான் சம்பளம். ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்தவுடன் சமாளிப்பதற்கு கஷ்டமாக இருந்ததால் கடன் வாங்கியும், நகைகளை விற்றும் அவரின் கணவர் மேலே ஏதாவது படித்து நல்ல வேலைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து படிக்க ஆரம்பித்தார். 
படித்து முடித்த பிறகு வாரம் முழுவதும் ஊரில் வேலை பார்த்துவிட்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சென்னைக்கு வேலை தேடி செல்வார். அதனால் ஹேமா அவருடைய கணவரை 35 வயது இருக்கும் பொழுது முழுசாக வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு சென்று வேலை தேடுமாறு கூறினார். ஹேமா இந்த முடிவை எடுத்ததற்காக அவரின் உறவினர்கள் அவர்களை அவமானப்படுத்த தொடங்கினர்.

Hema's Kitchen

ஆறு மாதம் வேலை தேடிய பிறகு ஹேமாவின் கணவருக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது‌‌. இரண்டு வருடம் பெங்களூரில் வேலை செய்த பிறகு ஹைதராபாத்தில் ஒரு வருடம் வேலை செய்தார். அதன் பிறகு 2009இல் அவர் சென்னைக்கு வந்தார். அதனால் ஹேமாவும் அவரின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.

தனது குடும்பத்திற்கு பணரீதியாக உதவிகள் செய்ய வேண்டும் என்று எண்ணி ஹேமா புதிதாக தொழில் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார். அதற்காக தனது கணவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றார். முதலில் அவர் புடவைகள் விற்கும் தொழிலை ஆரம்பித்தார். எதிர்பாராத விதமாக அந்த தொழில் வெற்றியடையவில்லை. அதன் பிறகு quilling தோடுகள் செய்யும் தொழிலை நடத்தினர். அதுவும் வெற்றி அடையவில்லை. மூன்றாவதாக வீட்டிலேயே ஒரு mess ஆரம்பித்தார். அது நன்றாக சென்றாலும் தனி ஆளாக அவரால் அதை சமாளிக்க முடியவில்லை.

Advertisment

இப்படி இவர் ஆரம்பித்த மூன்று தொழிலும் அவருக்கு தோல்வியை தந்தது. 2015இல் தனது சமையல் குறிப்புகளை Facebookஇல் பதிவிட ஆரம்பித்தார். அதேபோல் யூட்யூபிலும் வீடியோக்கள் பதிவிடலாம் என முடிவெடுத்தார். ஆனால் கேமராவுக்கு முன்பு முகத்தை காட்டுவதற்கு ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. 2017இல் YouTubeஇல் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். ஹேமாவின் கணவர் தான் வீடியோக்களை எடிட் செய்து கொண்டிருந்தார். அவரின் கணவர் தினமும் வேலைக்கு சென்று வந்த பிறகு இரவு நேரங்களில் வீடியோக்களை எடிட் செய்து கொண்டிருந்தார். அதனால்  Hema's Kitchenஇல் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீடியோ போட முடிந்தது.

ஆரம்பத்தில் அவரிடம் இருந்த பொருட்களை வைத்து வீடியோக்கள் பதிவிட்டு கொண்டிருந்தார். இவரின் பாத்திரங்கள் பழையதாக இருந்ததை பார்த்து மக்கள் கமென்ட்களில்(comment) அதைப் பற்றி கேட்க ஆரம்பித்தனர்.‌ ஆனால், புதிதாக பாத்திரங்கள் வாங்குவதற்கு கணவரிடம் பணம் கேட்க சிறிது தயக்கமாக இருந்தது. இருப்பினும் அவர் பணம் கேட்ட பொழுது அவரின் கணவர் அவருக்கு ஆதரவாக இருந்தார்.
தனது கணவருக்கு வேலையை முடித்து விட்டு வந்து எடிட் செய்வதற்கு கடினமாக இருந்ததால் ஹேமாவே அதை கணவரின் உதவியால் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். வீடியோ எடுப்பது, எடிட் செய்வது மற்றும் லைட்டிங் பற்றி முழுமையாக கற்றுக் கொண்டார்.

Hema's Kitchen

ஒரு வருடத்திற்கு பிறகு Hema's Kitchenஇல் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணி எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு பிரச்சனைக்கான தீர்வை இவர் கொண்டு வந்தார். எல்லா பெண்களுக்கும் தினமும் என்ன சமைப்பது என்ற குழப்பம் இருக்கும். இந்த குழப்பத்தை தீர்த்து வைக்கும் வகையில் ஏழு நாட்களுக்கு ஏழு வகையான சட்னி, 7 நாட்களுக்கு ஏழு வகையான குழம்பு, ஏழு நாட்களுக்கு ஏழு வகையான சாப்பாடு என ஒரு வாரத்திற்கு ஏழு நாட்களுக்கு என்ன செய்யலாம் என்பதை தனது வீடியோக்களில் பதிவிட ஆரம்பித்தார். அதன் பிறகு அவரின் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கிடைத்தனர்.

Advertisment

இப்பொழுது அவர் பிரபலமான YouTuberஆக இருந்து வருகிறார். இந்த வெற்றி அவருக்கு ஒரே நாளில் கிடைக்கவில்லை. பல வருட முயற்சிகளுக்குப் பிறகு, பல தோல்விகளுக்கு பிறகு, பல கிண்டல்கள் அவமானங்களை கடந்து அவர் சாதித்துள்ளார். மேலும் நம்ம ஊரு ஷாப்பிங் என்ற தளத்தின் மூலம் சாம்பார் பொடி, இட்லி பொடி போன்ற விஷயங்களை விற்றும் வருகிறார்.

இவர் Hema's Kitchen ஆரம்பித்தபோது YouTubeஇல் பணம் சம்பாதிக்க முடியும் என்பதே இவருக்கு தெரியாது. இருப்பினும் தனக்கு பிடித்த விஷயத்தை செய்து அதை மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் YouTube சேனலை ஆரம்பித்துள்ளார். தற்பொழுது ஒரு மில்லியன் subscribers  மேல் பெற்றுள்ளார்.

cooking chanel tamil cooking youtube channel Hema's Kitchen