"சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அன்பான ஒரு குடும்பம் இருந்தாலும் ஏதோ ஒன்று இல்லாதது போல உணர்வு இருந்து கொண்டே இருந்தது. மேலும் இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில் எனது குடும்பத்தை தாண்டி நான் யார் என்ற அடையாளம் இல்லாமல் போவதை நான் உணர்ந்தேன். பல ஆண்டுகளாக என் குடும்பத்தில் எனக்கான ஒரு பொறுப்பு இருந்தது, அதை நான் முழுமையாக செய்திருக்கிறேன். மேலும், எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்". பல ஆண்டுகளாக மது குவாலி போன்ற பெண்கள் எப்படி இருந்து வருகின்றனர் என்பது அவர் கூறுவதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
மது கொய்வால் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண். மது வளர்ந்த அந்த சிறிய கிராமத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்லவில்லை, அப்படி சென்றாலும் பாதியிலேயே படிப்பதை நிறுத்தி விடுகின்றனர். மதுவின் கதையும் அப்படித்தான். அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது பல காரணங்களுக்காக படிப்பதை நிறுத்திக் கொண்டார். "நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது படிப்பதை விட்டு விட்டேன். நான் வாழ்ந்த அந்த சமூகத்தில் படிப்பது அவ்வளவு முக்கியமான ஒன்றாக கருதப்படவில்லை. எனது வீட்டிற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இடையே நிறைய தூரம் இருந்தது. என்னை போல் பல பெண்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
சிறுவயதிலேயே திருமணமாகி, குழந்தைகளைப் பெற்று தன்னை சுற்றி உள்ள பெண்களை போல இவரும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். கனவு காண்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் வளர்ந்தார். பிறகு இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று கூறுகையில் சமூகத்தில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற என் பார்வை மாறியது. மேலும், வீட்டை பார்த்துக் கொண்டு, வீட்டு வேலை செய்வதை விட இன்னும் நிறைய செய்ய முடியும் என்று நான் யோசித்தேன்.
வேலை செய்யும் ஒரு பெண்ணாக வாழ்க்கை எப்படி மாறியது?
இவரது குழந்தைகள் இவரின் இந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்தனர். அவரின் குழந்தைகள் அவரின் திறமையை புரிந்து கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை எடுத்தனர். மதுவை அவருக்காக நிறைய கனவுகள் காண சொன்னனர். அப்பொழுதுதான் மதுவிற்கு மீண்டும் பள்ளிக்கு சென்று அந்த அடிப்படையான கல்வி அறிவை பெற்ற பிறகு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
30 வருடங்களுக்குப் பிறகு மது மீண்டும் படிக்க சென்றார். கடினமாக படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மேலும் "எனக்கு கற்றுக் கொடுப்பதற்காக ஒரு ஆசிரியர் வருவார், அப்பொழுதுதான் நான் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன்" என்று பெருமிதமாக கூறுகிறார்.
பிறகு மஞ்சரி பவுண்டேஷன் மூலமாக எல்ஐசி ஏஜென்ட் ஆகுவதற்கான ஒரு பரிட்சையை எழுத முடிவெடுத்தார். முதலில் அந்த பரிட்சையில் தோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது முயற்சியிலேயே அதில் தேர்ச்சி பெற்றார். அப்பொழுதே 12 ஆம் வகுப்பு வரை முடித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஏஜென்சியை தொடங்கினார்.
"நான் தொழில் நடத்துவதை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். மேலும், தினமும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். அதை எனது வேலையில் செயல்படுத்தி பார்க்க ஆர்வமாக உள்ளேன்".
யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எதையும் செய்யலாம்:
மது தனது வாழ்க்கையை 50 வயதில் மாற்றினார். மேலும், பெண்களுக்காக அவர் ஆலோசனை கூறுகையில் “ஒருவர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் தான் ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்ற யோசனை தவறு. நாம் எந்த வயதிலும் எதையும் புதிதாக தொடங்கி, அதற்காக உழைத்து வாழ்க்கையில் நமது நோக்கத்தை கண்டுபிடிக்கலாம்”. மேலும் பண ரீதியான சுதந்திரம் எந்த வயதிலும் பெறலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தற்போது தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கிறார். “பெண்கள் அனைவரும் கல்வி அறிவை பெற வேண்டும். படிப்பு எவ்வளவு அற்புதங்களை செய்யும் என்பதை நான் புரிந்து கொண்டேன் மற்றும் அனைத்து பெண்களுக்கும் சுதந்திரமாக இருக்கக்கூடிய தகுதி இருக்கிறது. எனவே, யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்க வேண்டும்” என்று ஆலோசனை கூறுகிறார்.