கள்ளக்குறிச்சியில் ஒரு கிராமத்தில் பிறந்து தமிழ் மீடியத்தில் படித்து வளர்ந்துள்ளார் லட்சுமி ராமச்சந்திரன். பள்ளி படைப்பை முடித்துவிட்டு B.Com இளங்கலை பட்டத்தையும் அவர் பெற்றார். அவரின் கிராமத்தின் வழக்கம் படி 21 வயதில் பெரும்பாலும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி லட்சுமிக்கும் 22 வயதில் திருமணம் ஆனது. அதன் பிறகு அவருக்கு ஒரு மகளும், மகனும் பிறந்துள்ளனர்.
கணவருக்கு ராஜஸ்தானில் வங்கியில் பணியாற்றும் வேலை கிடைத்தது. அதனால் குடும்பத்தோடு ராஜஸ்தானுக்கு செல்ல நேரிட்டது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர்களுக்கு ராஜஸ்தானில் மொழி சிக்கல்கள் இருந்தது. இருப்பினும் ஐந்து, ஆறு வருடங்களுக்கு அங்கு இருந்ததால் அந்த மொழியையும் கற்றுக் கொண்டனர். பெரும்பாலும் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை அவரின் கணவருக்கு டிரான்ஸ்பர்(transfer) கிடைக்கும். அதனால் பல இடங்களுக்கு இவர்கள் குடும்பத்தோடு மாறிக்கொண்டே இருந்தனர்.
பல ஆண்டுகள் கழித்து வாழ்க்கையை திரும்பி பார்த்தால் தனது கணவனுக்கு நிறைய பிரமோஷன் கிடைத்திருந்தது, குழந்தைகளும் படிப்பில் முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால், லட்சுமி மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பதை போல் உணர்ந்தார். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ஒரு பெண்ணிற்கு இது போன்ற வாழ்க்கை திருப்தி அளிக்கவில்லை. கணவர் டிரான்ஸ்பர் ஆகி செல்லும் ஊர்களில் இவர் ஒரு ஆசிரியராக இருந்து அங்குள்ள பள்ளிகளில் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து வந்தார்.
வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருந்தது, வேலையில் இருந்து கணவரும் ஓய்வு பெற்றார். மகளும், மகனும் நல்ல வேலைக்கு செல்கின்றனர். பேரப்பிள்ளைகளையும் இவர்கள் பார்த்து விட்டனர். இருப்பினும் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ? என்ற பயம் அவருக்கு இருந்தது. இந்த சமூகம் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட விஷயங்களுக்குள் நாம் அடங்க கூடாது என்றும் நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் உணர்ந்தார்.
குடும்பத்தை இத்தனை ஆண்டுகளாக தனது பொறுமை மற்றும் அன்பின் மூலமாக வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் தான் யார், தான் இந்த குடும்பம் மட்டுமா என்ற யோசனை இவருக்கு வந்தது. சமுதாயத்தில் அவருடைய பங்கு என்ன என்பதை யோசித்தார்.
ஒரு நாள் LICக்கு ஒரு வேலை ஆக சென்ற பொழுது அங்கு பாரதியாரின் கவிதை ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அப்பொழுது அங்குள்ளவரிடம் 55 வயது உடையவருக்கு இங்கு வேலை கிடைக்குமா என்று கேட்டார். அதற்கு அந்த டெவலப்மெண்ட் ஆபீஸர் நிச்சயமாக கிடைக்கும் என்று கூறினார். பிறகு ஒரு பரிட்சை எழுதி LIC லைசென்ஸ் பெற்று வேலை பார்க்க ஆரம்பித்தார்.
தமிழ் மீடியத்தில் படித்த எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு செல்லும் பொழுது தாழ்வு மனப்பான்மையுடனே செல்கின்றனர் என்பதை உணர்ந்த லட்சுமி கல்லூரிகளுக்கு சென்று முதன்மை ஆசிரியரை சந்தித்து முதலாம் ஆண்டில் உள்ள மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ்(Bridge course) என்ற பெயரின் மூலம் தன்னம்பிக்கையை தர வேண்டும் என்று கூறி அவர்களை ஒற்றுக்கொள்ள வைத்தார். அதன் மூலம் நிறைய மாணவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்துள்ளார்.
வாழ்க்கையில் எதுவுமே சுலபமாக கிடைக்காது. அனைத்திற்கும் முயற்சி முக்கியமானது. தினம் தோறும் புது புது விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவருக்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறையவே இருந்தது. தனது 50 வயதில் MBA corresஇல் படித்து பரீட்சை எழுதி அதில் தேர்வு பெற்றுள்ளார் மற்றும் இந்தியன் இன்டிட்யூட் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற மும்பையை சேர்ந்த ஒரு இன்ஸ்டிட்யூட்டில் மூன்று ஆண்டுகள் படித்துள்ளார். அதன் மூலம் இருநூறு கிளைண்டுகளுக்கு பணரீதியான விஷயங்களை எடுத்துக் கூறி எல்ஐசி முகவராக உள்ளார்.
படிப்பதும் படித்ததை வாழ்க்கையில் இம்ப்ளிமென்ட் செய்வதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். நேரத்தை வீணாகாமல் இந்த சமூகத்திற்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். மேலும் நாம் செய்ய நினைக்கும் விஷயங்களுக்கு நிறைய தடைகள் இருக்கும் என்றும் எதிரிகள் வெளியில் இருப்பதை விட வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள் என்றும் கூறுவதோடு மட்டுமல்லாமல் இதை அனைத்தையும் கடந்து வந்து வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் ஜோஷ் டாக்கில் கூறுகிறார்.