பெரும்பாலான பெண்கள் தங்களுக்காக ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி மாலிகாவும் பல கஷ்டங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் பிறகு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது மட்டுமில்லாமல் பல பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களுடைய மகள் என்ற அடையாளத்தோடு இருந்த மாலிகா ஒரு Life Coach ஆக மாறி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பெரும்பாலான பெண்கள் வீட்டில் அவர்களை மிகவும் கவனத்தோடும், பாசமாகவும் வளர்ப்பதுண்டு. அப்படித்தான் மாலிகாவும் வளர்ந்துள்ளார். இருப்பினும் சிறுவயதில் அவர் உடல் எடையை குறைப்பதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளார். அதுவே அந்த வயதில் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. பெரும்பாலும் வீட்டிலேயே இருந்ததால் வெளி உலகம் தெரியாமல் வளர்ந்துள்ளார் மாலிகா. பிறகு கல்லூரியில் சந்தித்த நபர் தனக்கு நெருங்கிய நண்பரான பிறகு அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் மாலிகா.
திருமணத்திற்கு பிறகு தான் இவர் வெளி உலகத்தை சந்திக்க நேர்ந்ததால் பல எதிர்மறையான எண்ணங்கள் இவருக்கு வந்து கொண்டிருந்தது. அதனால் இவர் மகிழ்ச்சியாகவும் இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதிலும் சில சிக்கல்கள் இருந்தது. மருத்துவர்களை சந்திப்பது, கோயிலுக்கு செல்வது என வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது இவருக்கு இன்னும் கவலையை அதிகப்படுத்தியது. அதன் பிறகு இவரின் கணவர் நீ இந்த திருமணத்தில் மகிழ்ச்சியாகவே இல்லை என்று சொன்னபோது அதற்கான என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டார். அதன் பிறகு இருவரும் ஐரோப்பியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அந்த பயணத்தில் இவர் மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருந்தால் திரும்பி வந்த பிறகு இவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இவருக்கு கர்ப்பமாக இருந்த அந்த ஒன்பது மாதங்களும் பெரும்பாலும் எந்த உடல் ரீதியான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் மனரீதியாக, உணர்ச்சிரீதியாகவும் குழப்பத்திலேயே இருந்திருக்கிறார். குழந்தை பிறந்த 12 நாளிலேயே இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கு பலரின் மன அழுத்தத்தை அதிகரித்தது. அப்படித்தான் மாலிக்காவிற்கும் அது மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது மட்டும் இல்லாமல் postpartum depression அவரை பெரிய அளவில் பாதிக்க ஆரம்பித்தது. வீட்டில் உள்ள அனைவரும் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் அவரை அறியாமலேயே எதிர்மறையான சிந்தனைகள் அவருக்கு வந்து கொண்டிருந்தது. பிறகு தன்னையே நம்பி ஒரு குழந்தை இருக்கிறது என்றும் அந்த குழந்தைக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் எண்ணி பூஜா என்ற Life Coach இடம் ஆலோசனை பெற்றிருக்கிறார்.
பூஜா என்ற அந்த லைஃப் கோச்சை(life coach) சந்தித்த பிறகு தான் அவர் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பூஜாவின் வழிகாட்டுதல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் வாழ்க்கை மாறத் தொடங்கியது. ஊரடங்கு காலகட்டத்தில் க்ளப் ஹவுஸ்(Club House) என்ற ஒரு செயலி மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்றது. அதில் மாலிகாவை தமிழ் நிகழ்ச்சிகளை நடத்த அழைத்தனர். இவர் இதை செய்வதை பார்த்த பூஜா அவரின் திறமையை கண்டறிந்து இன்னும் அவருக்கு ஊக்கம் அளித்துள்ளார். அதனால் மாலிகா அவர் வாழ்க்கையை பூஜா மாற்றியது போல தானும் பல பெண்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று எண்ணி பல நிபுணர்களிடம் அதைப்பற்றிய கோர்சுகளை படித்து தன்னை மெருகேற்றி கொண்டார்.
தற்போது Evergrowth Academy ஆரம்பித்து பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். மேலும், இவர் இலவசமாக ஒரு மாஸ்டர் கிளாஸ் வழங்குகிறார். அதில் அடிப்படையான விஷயங்களை பெண்கள் கற்றுக் கொள்ளலாம். மேலும் 500 பெண்களுக்கு மேல் இவரின் வழிகாட்டுதலின் பிறகு பணரீதியாக சுதந்திரமாக இருப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர்.
பூஜா என்ற Life Coach இடம் சென்று தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் அதேபோல் பல பெண்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தத்தில் இருந்த ஒரு பெண் தற்பொழுது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு மற்ற பெண்களும் அவர்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வழிகாட்டி வருகிறார்.
மாலிகா SheThePeople Tamilஇல் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில் அவரின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் நிறைய வழிகாட்டுதல்களையும் கூறியுள்ளார். குறிப்பாக புதிதாக குழந்தை பெற்றிருக்கும் தாய்மார்களுக்கு நிறைய குறிப்புகள் வழங்கியுள்ளார். அவற்றைக் கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click here: Life tips for women - Maalica | Life Coach | Founder of Evergrowth Academy