Advertisment

சமூக விதிகளும், ஆண்களின் மனநல ஆரோக்கியமும்

author-image
Devayani
New Update
danush

நவம்பர் 19 அன்று சர்வதேச ஆண்கள் தினத்தை கொண்டாட உள்ள நாம் ஆண்களின் பிரச்சனை மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் பேசுவது அவசியம்.

Advertisment

சமூகத்தில் உள்ள பல பாலின பாகுபாடுகள் போல மனநல பிரச்சனைகளுக்கும் பாலின அடிப்படையில் கருத்துக்கள் வேறுபடுகிறது. சமூகம் என்ன நினைக்கும் என்பதை நினைத்து ஆண்கள் மனநிலை பிரச்சினையை பற்றி பேசுவதில்லை. குறிப்பாக ஆண்கள் மனநல பிரச்சினையை பற்றி பேசினால் அவர்களை இந்த சமூகம் பலவீனமாக நினைக்கிறது.

ஒரு ஆண் சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளும் பொழுதே அவர்கள் ஒரு ஆண் என்ற கர்வத்தோடு அங்கீகரிக்கப்படுகின்றனர். ஆண்கள் என்றால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும், இப்படித்தான் மற்றவர்களோடு பழக வேண்டும், அவர்கள் வாழ்க்கையில் எந்த மாதிரியான முடிவுகளை அவர்கள் எடுக்க வேண்டும் என அனைத்திற்கும் இந்த சமூகம் விதிமுறைகளை விதித்துள்ளது.

தங்கள் மனைவியின் பெற்றோரின் வீட்டில் வாழ, வீட்டை பார்த்துக் கொள்ளும் அப்பாக்களாக அல்லது அவர்களை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு நிறைய தடைகள் உள்ளன. மேல் கூறிய ஏதோ ஒன்றை எந்த ஒரு ஆண் செய்தாலும் அவர்களை இந்த சமூகம் கேவலமாக பார்க்கிறது. 

Advertisment

இங்கு எத்தனை ஆண்கள் அவர்கள் அன்புக்குரியவர்களிடம், நண்பர்களிடம் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், அவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை இல்லாமல் மனம் விட்டு புலம்பி அழ முடியும்? ஒரு இந்திய குடும்பத்தில் எத்தனை ஆண்களால் அவர்கள் செய்யும் வேலை அவர்களுக்கு மன அழுத்தத்தை தருவதாகவும், மனசோர்வை தருவதாகவும் கூறி அவர்கள் வேலையை விட நினைப்பதாக சொல்ல முடியும்? அப்படி அவர்கள் கூறினாலும் அதற்கு பெரும்பாலும் அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளை கூறி இந்த முடிவையும் மறுத்து விடுகின்றனர்.

'ஆண்' தான் இந்த ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்திற்கு மிகவும் விருப்பமான பாலினம். ஆனால் அவர்களுக்கு அந்த அங்கீகாரம் சாதாரணமாக கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த சமூகம் இலவசமாக சலுகைகளை தருவதில்லை, அதற்கு கடனாக அவர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு விதி புத்தகத்தையே வழங்குகிறது. இந்த விதி புத்தகத்தின் படி நடந்து கொண்டால் மட்டுமே அவர்களை உண்மையான ஆண்கள் என ஒப்புக்கொள்கிறது.

பிப்ரவரி 2021 இந்தியாவில் முதல் தேசிய மனநல ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது. அதில் ஒன்பது மாதத்திற்கு பிறகு வெளியிட்ட அறிக்கையில் தொடர்பு கொண்டவர்களில் 70% பேர் ஆண்கள் என்று கூறப்பட்டது. மேலும் ஒரு மனநல மருத்துவரை கண்டு ஆலோசனை பெறுவதற்கு பதிலாக, தங்களின் அடையாளம் பெரிதும் தெரியாதவர்களிடம் உதவி பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள்.

Advertisment

நச்சுத்தன்மை வாய்ந்த இந்த ஆணாதிக்கம் ஆண்களின் மனநல பிரச்சனையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமூகத்தை பொறுத்தவரை மன அழுத்தம், மனசோர்வு, பதட்டம் இவை எல்லாம் ஒரு ஆணுக்கு ஏற்படாது. மேலும் பலர் “மன அழுத்தம் என்று ஒன்று இல்லவே இல்லை, அது வெறும் போலியான நாடகம்” எனவும் நினைக்கின்றனர். ஒன்று இல்லை என்று நம்பும் ஒருவரிடம் அதற்கான உதவியை பெற்றுக் கொள்ளுங்கள் என்று எப்படி கூற முடியும்.

இந்த ஆண்கள் தினத்திலிருந்து நம் வாழ்வில் உள்ள ஆண்களின் மனநலத்தை கருதி அவர்களை தயக்கமின்றி இதைப்பற்றி பேச ஊக்குவிக்க வேண்டும். இது அனைவருக்கும் ஏற்படும் என்றும் அதற்கான உதவியை நாட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம். மனநல பிரச்சனை என்பது எந்த பாலினத்தவருக்கும் வரலாம். எனவே, அந்த சூழ்நிலையில் உள்ள ஒருவர் அதனை களங்கமாகவும், அவமானமாகவும் நினைக்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வோம்.

mental health
Advertisment