Advertisment

myHarvest Farms மூலம் இயற்கை விவசாயம் செய்து வரும் அர்ச்சனா ஸ்டாலின்

myHarvest Farms மூலம் இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வாங்கி வருகிறார் அர்ச்சனா ஸ்டாலின். அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
my harvest farm founder archana

Images of Archana

தேனி மாவட்டத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்த அர்ச்சனா ஸ்டாலின் தற்போது myHarvest Farms என்ற பிராண்டை உருவாக்கி அதன் மூலம் இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளையும் மற்ற பொருட்களையும் வழங்கி வருகிறார். பாரம்பரியமான முறையில் விவசாயம் செய்து மக்களுக்கு உண்மைய அளிக்கக்கூடிய உணவுகளை உற்பத்தி செய்து வருவது மட்டுமல்லாமல் மற்ற விவசாயிகளும் மீண்டும் பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்பும் வகையில் இவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

Advertisment

இவர் அண்ணா யுனிவர்சிட்டியில் படித்துவிட்டு பெரும்பாலான இளைஞர்களை போல ITஇல் வேலை செய்துள்ளார். இவர் படித்து முடித்த சில நாட்களிலேயே இவருக்கு திருமணம் ஆனது. கல்லூரியில் சந்தித்து காதலித்த நபரையை காதல் திருமணம் செய்து கொண்டார். வீட்டில் அதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் ஆறு மாதம் அதற்காக போராடி தனக்கு பிடித்தவரையே திருமணம் செய்துள்ளார். தற்போது இவரும் இவரின் கணவர் ஸ்டாலினும் சேர்ந்து தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

my harvest farm founder archana

இவர் எப்பொழுதும் தேடல்கள் நிறைந்த ஒரு நபராகவே இருந்திருக்கிறார். அதனால் இவர் ஒரு செல்லோஷிபகாக பதிவு செய்திருந்தார். அதில் தேர்வு பெற்ற பிறகு இந்தியா முழுவதும் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஊக்கவிக்கும் மனிதர்களை சந்திப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. பல ஊக்கவிக்கும் வாழ்க்கை கதைகளை உடைய மனிதர்களை சந்தித்த பிறகு தனது வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை யோசிக்க தொடங்கினார். அவர்களைப் போன்று ஏதாவது செய்ய வேண்டும் என்றும் விரும்பினார்.

Advertisment

அதனால் இவர் விருதுநகருக்கு வந்த பிறகு அங்கு ஒரு குளம் தூர்வாராமல் சாதாரண நிலத்தைப் போலவே காட்சியளித்தது. அதை தூர்வாரலாம் என்று எண்ணினார். அப்பொழுது நிறைய மக்களிடம் உதவி கேட்டு அவர்களின் ஆதரவை வாங்கி அந்த குளத்தை வெற்றிகரமாக ஒன்பது நாளில் தூர்வாரி விட்டனர். சில நாட்கள் கழித்து ஒரு நான்கு நாள் நல்ல மழை பெய்தது. அப்பொழுது அந்தக் குளம் நிரம்பி இருந்ததை பார்ப்பதற்கு இவருக்கு மன மகிழ்ச்சியை அளித்தது. 

my harvest farm

ஒருமுறை அவரின் கணவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட பொழுது தான் இனி நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று எண்ணி வீட்டிலேயே மாடி தோட்டம் வைத்து வீட்டிற்கு சமைப்பதற்கு தேவையான பொருட்களை விளைவிக்க ஆரம்பித்துள்ளனர். இவர் விவசாயிகளிடம் இயற்கையாக விவசாயம் செய்யுங்கள் என்று கூறிய போது யாரும் அதை கேட்பதாகவும் இல்லை, அதில் லாபம் வரும் என்றும் நம்பவில்லை. அதனால் அர்ச்சனாவே அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து இதை நிரூபிக்கலாம் என்று எண்ணி இயற்கை விவசாயம் செய்ய தொடங்கியுள்ளார். 

Advertisment

இப்படி ஆரம்பித்த இந்த விஷயம் தற்போது 120க்கும் மேலான விவசாயிகள் இவரின் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். விவசாயிகள் என்றால் எப்பொழுதும் நாம் வயதானவர்களை தான் கற்பனையில் வைத்துக் கொள்வோம். ஆனால் இவருடன் இணைந்து விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் இளைஞர்களாக தான் இருக்கின்றனர்.

மேலும் இவர் அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மக்கள் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்றும் எண்ணி பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இதனைப் பற்றிய பாடங்களும் எடுத்து வருகிறார். 

my harvest farm

Advertisment

ஆரம்பத்தில் தொழில் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தவர் ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து முன்னேறி உள்ளார். மேலும் myHarvest Farms மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு தேவையான காய்கறிகளை பிரெஷ் ஆக பறித்து வீட்டிற்க்கே டெலிவரி செய்து வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகின்றனர. அவர்கள் இதற்காக தரும் பணமும் விவசாயிகளுக்கு சென்றடைகிறது. நியாயமான விலையில் ஆரோக்கியமான பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும், அர்ச்சனா நமக்கு ஏதாவது பிடித்திருக்கிறது என்றால் நாம் தான் அதற்காக குரல் கொடுத்து, அதை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார். பெண்கள் பணரீதியாக சுதந்திரமாக இருப்பதை முக்கியமென்றும் அதற்காக ஏதோ ஒரு திறமையை வளர்த்துக் கொண்டு பணரீதியாக சுதந்திரமாக இருப்பதற்கு தேவையான விஷயங்களை செய்து கொள்ள வேண்டும் என்றும் பெண்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.

inspiring story Archana Stalin myHarvest Farms
Advertisment