Advertisment

பெண்ணியத்தை(feminism) பற்றிய கட்டுக்கதைகள்

நம் சமூகத்தில் பெண்ணியத்தை பற்றி நிறைய கட்டுக்கதைகள் உள்ளது. இதைப் படித்து பெண்ணியத்தை பற்றியும் அதனை சுற்றியுள்ள கட்டுக்கதைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
gender equality

Image is used for representational purpose only

பெண்ணியம் என்ற வார்த்தை எப்பொழுதும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. பெண்ணியம் என்றால் என்ன? அது ஆண்களுக்கு எதிரான ஒரு தொடக்கமா? பெண்ணியவாதிகளுக்கு ஆண்களை பிடிக்காதா? பெண்ணியம் பெண்களை ஆண்களை விட உயர்த்த நினைக்கிறதா? இது அனைத்திற்கும் பதில் இல்லை. அப்பொழுது பெண்ணியம் என்றால் என்ன? சாதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பெண்ணியம் எல்லா பாலினத்தவருக்கும் சம உரிமையை தர வேண்டும் என்பது. இது பெண்களுக்கான போராட்டம் அல்ல மனிதர்களுக்கான போராட்டம்.

Advertisment

பெண்ணியத்தை பலர் தவறாகவே புரிந்து கொள்கின்றனர். சிலர் நான் பெண்ணியத்தை நம்பவில்லை என்று கூறி என்பதற்கு பதிலாக நான் பாலின சமத்துவத்தை ஆதரிக்கிறேன் என்று கூறுவர். ஆனால் அது இரண்டும் ஒன்றுதான் என புரிந்து கொள்ள தவறிகின்றனர்.

இதைபோல், பெண்ணியத்தை சுற்றியுள்ள சில கட்டுக்கதைகளை இங்கு நாம் உடைப்போம்.

1. பெண்ணியம் ஆணாதிக்கம் போன்றது:

Advertisment

பெண்ணியம் பெண்களுக்கு சம உரிமையையும், வாய்ப்புகளையும் தர வேண்டும் என்று கூறுகிறது. இது ஆண்களை விட பெண்கள் உயர்ந்திருக்க வேண்டும் என்றும் ஆண்களை அடிமையாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை. மாறாக பெண்களுக்கு தர வேண்டிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் அவர்களுக்கு தர வேண்டும் என போராடுவது.

2. பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள்:

பெண்ணியம் எப்பொழுதும் பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது எல்லா ஆண்களும் ஆணாதிக்கவாதிகள் என்று கூறவில்லை. பெண்ணியம் ஆண்களை வெறுக்கவில்லை. ஆனால் ஆணாதிக்கம், ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் போன்ற சமூக விதிகளை எதிர்க்கிறது. பெண்கள் ஆண்களுக்கு தாழ்ந்தவர்கள் என்ற கருத்தை அது மறுக்கிறது.

Advertisment

3. பெண்ணியம் ஆண்களுக்கு கேடு:

பல ஆண்கள் பெண்ணியம் என்ற சொல்லை கேட்டாலே அவர்களுக்கு அது ஆபத்து என நினைக்கின்றனர். ஆனால், பெண்ணியத்தின் நோக்கம் பெண்களின் சம உரிமைக்காக போராடுவதும், ஆண்களுக்கு விதிக்கப்பட்ட பாலின விதிகளை உடைப்பதும் தான். அதாவது பெண்ணியம் எல்லா தரப்பிலான வேறுபாடுகளை, சமூக விதிமுறைகளை உடைப்பது.

4. பெண்கள் தான் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும்:

Advertisment

பாலின சமத்துவத்தை விரும்பும் ஒருவர் பெண்ணியவாதியாவார். இன்றைய காலகட்டத்தில் பல ஆண்கள் பெண்ணியவாதிகளாக இருந்து, பெண்களுக்கும், பாலின சமத்துவத்திற்கும் அதிக அளவில் ஆதரவளித்து வருகின்றனர்.

stop patriarchy

5. பெண்ணியவாதிகள் திருமணத்திற்கு எதிரானவர்கள்:

Advertisment

திருமணம் செய்து கொள்வது தனிப்பட்ட மனிதரின் விருப்பம். அதற்கும் பெண்ணியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணியவாதைகளும் திருமணம் செய்து கொள்வர். ஆனால் அவர்கள் இந்த நஞ்சு வாய்ந்த திருமண உறவுகளை எதிர்க்கிறவர்கள்.

6. பெண்ணியவாதிகளுக்கு தாய்மை பிடிக்காது:

குழந்தை பெற்றுக் கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். பெண்ணியவாதிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள் அல்ல. அவர்கள் குழந்தைகளை எந்த ஒரு பாலின பாகுபாடும் இல்லாமல் வளர்க்க நினைப்பார்கள்.

Advertisment

7. பெண்ணியவாதிகள் பெண்களின் குணத்தை ஆதரிப்பதில்லை:

பெண்ணியவாதிகள் எப்பொழுதும் மேற்கத்திய ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் நம் இந்திய உடைகளிலும் இருக்கலாம். அவர்களுக்கு நகை அணிந்து கொள்வது, சமைப்பது, குடும்பத்தை பாதுகாப்பது பிடித்திருக்கலாம். ஆனால் இது அனைத்தும் அவர்கள் விரும்பும் போது செய்ய வேண்டும். மற்றவர்கள் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

8. பெண்ணியவாதிகள் அவர்களின் சலகுகளை தவறாக பயன்படுத்துகின்றனர்:

Advertisment

பெண்ணியத்திற்கு இந்த சமூகத்தில் பெண்களையும் ஆண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். பல முறை பெண்கள் அவர்களின் பாலினத்தை வைத்து மட்டுமே நிராகரிக்கப்படுகின்றனர் மற்றும் வாய்ப்புகளும் குறைவாக வழங்கப்படுகிறது. இன்னும் நம் சமூகத்தில் பாலினத்தின் அடிப்படையில் சம்பளம் கொடுப்பதும், சமமாக நடத்தாமல் இருப்பதும் அதிகமாகவே உள்ளது. இது போன்ற காரணங்களினால் பெண்கள் அவர்களின் உரிமைக்காக போராடுகின்றனர்.

feminism⁠⁠⁠⁠⁠⁠⁠

9. பெண்ணியவாதிகள் எப்போதும் கோபமாக தான் இருப்பார்கள்:

பெண்ணியத்தைப் பற்றிய பெரிய கட்டுக்கதை இதுதான். பெண்ணியவாதிகள் பேசுவதற்கும், அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கும் தயங்குவதில்லை. அவர்கள் கனவுகளை கொண்டு சுதந்திரமாக வாழ நினைப்பவர்கள். எப்பொழுது இந்த சமூகம் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்காமல் தடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள் அதற்காக குரல் கொடுக்கத்தான் வேண்டும். இப்படி குரல் கொடுப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, இது போன்ற அநியாயங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் சேர்த்து தான்.

பெண்ணியம் வேறு ஒன்றும் இல்லை, பாலின சமத்துவம் மட்டுமே. ஆணாதிக்கம் இருக்கும் வரை பெண்ணியம் இருப்பதும் அவசியமாகிறது. இங்கு ஆணாதிக்கம் தான் எதிரியே தவிர ஆண்களும், பெண்களும் சமமானவர்கள். இந்த ஆணாதிக்கத்தை எதிர்த்து சமத்துவதற்காக போராட நிறைய மக்கள் ஆதரித்தால் பாலின சமத்துவத்தை பெறலாம்.

feminism பெண்ணியம்
Advertisment