Advertisment

சமூகத்திற்கு பயந்து பெற்றோர்கள் மகளுக்கு இடும் கட்டளைகள்

மகள்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அவர்கள் மனதில் இருக்கும் பயமும். பெற்றோர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மகள்களுக்கு இடும் சில கட்டளைகள் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
shriya

Image is used for representational purpose only

ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என நினைத்து கவலைப்படுவது சரிதான். பிறந்த குழந்தையை கையில் ஏந்தும் நொடியில் இருந்து அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க வேண்டும் என நினைக்கின்றனர். இருப்பினும் இந்த கவலையானது அவர்களை அளவிற்கு அதிகமாக கட்டுப்படுத்தி குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாகிறது. இது எல்லா பாலினத்திற்கும் பொருந்தும் என்றாலும் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை பெற்றோர்கள் அதிகமாக கட்டுப்படுத்துகின்றனர்.

Advertisment

ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு பெற்றோர் செய்தித்தாளை திறக்கும் போது அவர்கள் காண்பதெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் மட்டுமே. அரசாங்கம் எவ்வளவு வாக்குறுதிகளை அளித்தாலும் இந்த குற்றங்கள் குறைவதில்லை. இந்த செய்திகள் அவர்களின் இதயத்தில் பயத்தை உருவாக்கிறது. மகள்களின் வாழ்க்கையை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான ஒரு தூண்டுதலாகவும் இந்த செய்திகள் செயல்படுகிறது. அவளின் வாழ்க்கையை பற்றி கவலை கொண்டு அவளின் சுதந்திரத்தை பறித்துக் கொள்கின்றனர்.

1. நேரத்திற்கான கட்டுப்பாடுகள்:
பெற்றோர்கள் மகள்களை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான வழிகளில் ஒன்று அவர்களுக்கு நேரத்தில் கட்டுப்பாடுகள் வைத்திருப்பது. அவர்கள் மகள் எந்த இடத்தில் இருக்கிறாள், நண்பர்கள், பணி இடம் இவை அனைத்தையும் அவர்கள் கண்காணிக்கின்றனர். நேரத்தின் கட்டுப்பாடு காரணமாக, தன்னைச் சுற்றியுள்ள சூழலை விட நேரத்தைப் பற்றி அவள் அதிக கவனம் கொள்கிறாள். அவள் வீட்டிற்கு வர தாமதமானால், பெற்றோர்களால் அவள் கேள்வி கேட்கப்படுவாள் என்ற பயமும் அவளுக்கு அதிகரிக்கிறது. 

ஆனால், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் எந்த நேரத்திலும், எங்கும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே, மகள்களை பாதுகாப்பாக வைத்திருக்க நினைத்தால் அவர்களை அநீதியை எதிர்த்து போராடும் அளவிற்கு வலிமையானவர்களாக வளர்க்க வேண்டும். மகள்களை கண்டிப்பதை விட ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுத் தர வேண்டும்.

Advertisment

gargi

2. ஆடை கட்டுப்பாடுகள்:
ஒரு பெண் அணிந்திருக்கும் ஆடையை கட்டுப்படுத்துவது நம் சமூகத்தில் புதிதல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு அவர்கள் அணிந்திருக்கும் ஆடை காரணம் என தவறான கருத்து இந்த சமூகத்தில் பரவியுள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்கள் மகள்களை பாதுகாக்க ஆடையில் கட்டுப்பாடு விதிக்கின்றனர். சில பெற்றோர்கள் தங்கள் மகள்களை பாரம்பரிய உடைகளைத் தவிர வேறு உடைகளை அணிய அனுமதிப்பதில்லை. சில பெற்றோர் மேற்கத்திய ஆடைகளை அணிவதற்கான சுதந்திரத்தை தந்தாலும் அதற்கும் பல நிபந்தனைகள் போடப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு ஆடை காரணம் இல்லை ஆண்களின் எண்ணம் தான் அதற்கான காரணம் என்பதை சமூகத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளனர். ஒரு ஆண் அவனது பாலினம் காரணமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்றும் அவனை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள், அவனுக்கு தண்டனை அளித்தாலும் அதிலிருந்து எளிதாக வெளியே வந்து விடலாம் என்று நினைத்தால் ஒரு பெண் எந்த ஆடை அணிந்து இருந்தாலும் அவளை இது போன்ற எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து காப்பாற்றுவது கடினம்.

Advertisment

3. திருமண அழுத்தம்:
சமூக விதிப்படி ஒரு பெண்ணை பாதுகாக்க சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவளுக்கு திருமணம் முடிந்த நொடியிலிருந்து அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு கணவனிடம் சென்று விடுகிறது. திருமணம் ஆகாத ஒரு பெண் தனிமையில் இருந்தால் அவள் பாலியல் செயலுக்கு தயாராக இருப்பதாகவும், தேவையற்ற ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் அபாயம் உள்ளதாகவும் இந்த சமூகம் நினைக்கிறது.

ayali⁠⁠⁠⁠⁠⁠⁠

இத்தகைய நிகழ்வுகளால் பெற்றோர்கள் மகள்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர். அவளுக்கு ஆசை, கனவுகள் இருந்தாலும் சொந்த வீட்டிலேயே ஒடுக்கப்பட்டவர்களாக நடத்துகின்றனர். பெற்றோர்கள் தங்கள் சம்மதத்தையும், லட்சியத்தையும் மதிக்காத போது அவர்கள் உதவியற்றவர்களாக உணர்கின்றனர்.

Advertisment

4. வேலைக்கு செல்வதற்கான சுதந்திரம் இல்லை:
பெற்றோர்கள் தங்கள் மகள்களை வேலைக்கு செல்ல அரிதாகவே அனுமதிக்கிறார்கள். பெற்றோர்கள் பெண்களுக்கு கல்வி வழங்குவதும், பணக்கார குடும்பத்தில் அவர்களை திருமணம் செய்து வைப்பதுடன் அவர்களின் கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு வேலை செய்யாமல் இருப்பதை சுயநலமாகவும், பணத்தின் மேல் பேராசை கொண்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். நிறைய குடும்பங்கள் வேலைக்கு செல்லும் பெண்களை மருமகளாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில், அவர்கள் ஆணாதிக்க விதிமுறைகளுக்கு இணங்க மறுப்பார்கள். பெற்றோர்களும் இதுபோன்ற வலையில் விழுந்து மகளை கட்டுப்படுத்துகின்றனர். 

5. சரியான தொழிலை தேர்ந்தெடுப்பது:
சில பெற்றோர்கள் மகள்களை வேலைக்கு அனுமதித்தாலும் அவர்கள் என்ன வேலை செய்யலாம், என்ன வேலை எல்லாம் செய்யக்கூடாது என பெற்றோர்களே தீர்மானிக்கின்றனர். உதாரணத்திற்கு அவள் ஒரு பத்திரிக்கையாளராக வேண்டும் என்றால் அதற்கு நிறைய தடைகள் உள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் பலர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றும், அந்த துறையில் வேலை செய்து கொண்டே குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாது என்றும், இந்த மாதிரி வேலைகள் ஆண்களுக்கு தான் சரியாக இருக்கும் பெண்கள் அதை செய்வது ஆபத்து என்றும் கூறி அந்த வேலையை செய்ய விடாமல் தடுத்து விடுகின்றனர். 

பெற்றோர்களாக அவர்களின் பயம் நியாயமானதாக இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நாம் உருவாக்கியுள்ளோம் என்பதை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும். 

Advertisment

the great Indian kitchen

6. வீட்டு வேலை செய்வது முதன்மையாக கருதப்படுகிறது:
சமூகத்தின் படி ஒரு பெண்ணின் முதன்மை கடமையாக கருதப்படுவது சமைப்பது, சுத்தம் செய்வது மற்றும் பரிமாறுவது. அவர்களின் குணத்தையும், தகுதியையும் அவர்கள் வீட்டு வேலை செய்யும் விதத்தை வைத்து தான் மதிப்பிடுகிறார்கள். எனவே, தங்களின் மகளை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் அவர்களுக்கு வீட்டு வேலையை கற்றுத் தருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் வீட்டு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்றாலும் பெண்கள் வீட்டு வேலை செய்வதில் நிபுணராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பெற்றோர்கள் அவள் படிப்பு, வேலையை விட வீட்டு வேலை செய்ய கற்றுக் கொள்வது தான் முக்கியமான கருதுகின்றனர். 

ஆனால் பெற்றோர்கள் தங்கள் மகள்களை சரியான மனைவியாக்கும் முயற்சியில், ஆணாதிக்க ஒடுக்குமுறையின் அடுத்த இலக்கை உயர்த்துகிறார்கள் என்பதை உணரவில்லை.

Advertisment

அன்பான பெற்றோர்களே, ஆணாதிக்க சமூகத்தில் ஒரு மகளை வளர்ப்பதில் உங்கள் மன அழுத்தத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் தயவு செய்து உங்கள் மகள்களின் லட்சியங்களையும் அடிப்படை உரிமைகளையும் பறிக்காதீர்கள். சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் அநீதிகளைப் புரிந்துகொண்டு உங்கள் மகள்களை தைரியசாலியாகவும், வலிமையானவர்களாகவும் வளர்க்க வேண்டும். பறவை என்பது பறப்பதற்குரியது. வேட்டைக்காரன் அதை வேட்டையாடி விடுவான் என்ற பயத்தில் வாழ்நாள் முழுவதும் அதைக் கூண்டில் அடைத்து வைக்க முடியாது.

society
Advertisment