Advertisment

அன்றாட வாழ்வில் உள்ள ஆணாதிக்கம்

author-image
Devayani
New Update
tharamani

ஆணாதிக்கம் என்ற சொல்லை கேட்டால் என்ன நினைவிற்கு வரும்? ஒரு ஆண் பெண் மீது செலுத்தும் ஆத்திகம் என எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளுக்கு முன் இருந்தே கலாச்சாரமும், சமூகமும் ஆண்களுக்கு ஆணாதிக்கம் மூலம் பல சலுகைகளை வழங்குகிறது. குடும்பம், தொழில், சமூகம் போன்றவற்றில் ஆண்கள் தான் இப்பொழுதும் தலைவராக இருப்பார்கள். நம் அன்றாட வாழ்க்கையில் ஆணாதிக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. 

Advertisment



ஆம்! நம் கலாச்சாரமும் ஆணாதிக்கம் வாய்ந்ததாக தான் இருக்கிறது. அதாவது, ஆண்கள் பெண்களை ஆளுகிறார்கள். பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் ஆண்களே முடிவு எடுக்கிறார்கள். ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற ஆணாதிக்க விதிமுறைகளை முறியடிக்க இன்னும் நிறைய போராட வேண்டி உள்ளது. சமூகத்தில் பரவி இருக்கும் ஆணாதிக்கத்தையும் அது பெண்களின் வாழ்க்கையில் என்ன சவால்களை தருகிறது என்பதையும் பார்ப்போம்.



வீட்டு வேலைகள்:

இந்த சமூகம் வேலைகளை ஆணுக்கான வேலை, பெண்ணுக்கான வேலை என பிரித்து வைத்திருக்கிறது. "ஆண்கள் வீட்டு வேலைகள், சமைப்பது, சுத்தம் செய்வது இது போன்ற வேலைகளை செய்ய வேண்டியதில்லை" என்ற சொற்றொடர் பின் உள்ள அர்த்தம் "பெண்கள் தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும், வேலைக்கு சென்றாலும் அனைத்து வீட்டு வேலைகளையும் பெண்கள் தான் செய்ய வேண்டும், இது அவர்களது கடமை". இதை அனைவரும் நம் வாழ்வில் ஒருமுறையாவது கேட்டிருப்போம் அல்லது அனுபவித்திருப்போம்.

ஒருவேளை பெண்கள் இதை செய்ய தவறினால், அவர்கள் உரிமைக்காக குரல் கொடுத்தால் இந்த சமூகம் அவர்களை அவதூறாக பேசும். 



பெண்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது:

Advertisment

தடைகளை மீறி ஒரு பெண் முன்னேறினாலும் இந்த சமூகத்தில் அவர்களுக்கு சமமான மரியாதையும், சம்பளமும் தருவதில்லை. ஆணும், பெண்ணும் ஒரே வேலையை செய்தாலும் பெண்களுக்கு சம்பளம் ஆண்களை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. இதுபோன்ற பாகுபாடுகள் கூலி வேலை செய்யும் பெண்கள் முதல், நடிகர்கள், விஞ்ஞானிகள் வரை அனைத்து துறைகளும் இருக்கிறது. எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது என்பது தான் உலகளாவிய உண்மை.



பெண்கள் வெளியே செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன:

பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நாம் பெரும்பாலும் "ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்து சேரு" என்று கூற்றை கேட்டிருப்போம். அதேபோல் வெளியே செல்லும் முன் அம்மா, அப்பா என இருவருடைய அனுமதியையும் பெற வேண்டும். "எங்க போற", " யார் கூட போற",  "எத்தனை பேர் வராங்க" இது போன்ற பல கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் விடையளித்தாலும் பல சமயங்களில் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இது எல்லாம் பெண்களின் பாதுகாப்பிற்காக என்று கூறினாலும் பெண்களை வெளியே விட பயப்படுவதற்கான காரணம் வெளியே நாய்கள், பேய்கள் இருக்கும் என்பதற்காக அல்ல ஆண்கள் இருப்பதற்காக.  ஆண்களிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள். அப்பொழுது, ஆண்களை கண்டித்து விதிமுறைகள் வழங்கப்பட வேண்டுமா? அல்லது பெண்களை வீட்டில் அடக்கி வைக்க வேண்டுமா? இருவருமே சுதந்திரமாக வெளியே செல்ல வேண்டும் எனில் எந்த தவறும் செய்யாத பெண் பிள்ளைகளை கண்டிப்பதற்கு பதிலாக, ஆண்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லி வளர்க்க வேண்டும். 



காலம் மாற்றத்திற்கு ஏற்ப இங்கு நிறைய விஷயங்கள் மாறி உள்ளது. அதேபோல், தற்போது முன்பை விட இந்த சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு பிடித்ததை, அவர்கள் விரும்புவதை செய்கிறார்கள். ஆனால் இந்த சுதந்திரம் முழுமையானது அல்ல. இவையெல்லாம் ஒரு பெண்ணின் திருமணம் வரை தான்.  திருமணத்திற்கு பின் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆணாதிக்கம் தான் முடிவு செய்கிறது. சமூகத்தில் ஆணாதிக்கம் பரவி இருக்கும் வரை, பெண்கள் ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கும் வரை, பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்காது. பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் நம் முதலில் இந்த ஆணாதிக்க மனநிலையை மாற்ற வேண்டும்.

ஆணாதிக்கம்
Advertisment