Advertisment

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏழு வழிகள்

author-image
Devayani
New Update
mental health

மன ஆரோக்கியம் (mental health) என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வில் அடித்தளமாகும். ஏனெனில், நமது மனநிலை நாம் வாழ தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நமது நல் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று. இது இரண்டும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. மன ஆரோக்கியம் நமது முழு ஆரோக்கியத்தில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் உணர தவறுகிறோம்.

Advertisment

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பயிற்சி செய்து கவனிப்பது போல, மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள சில பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மன ஆரோக்கியத்தை கவனிப்பது மூலம் நம் வாழ்வை செழுமையாக மாற்ற முடியும்.
மனநல பாதிப்பின் பின் விளைவுகளை கையாள்வதற்கு பதிலாக, அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பே அதை நாம் தடுக்க வேண்டும். அதற்கு மனநலத்தை ஆரோக்கியமாக வைக்கக்கூடிய சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிம் செல்வது, நடைப்பயிற்சி செய்வது போல, மன ஆரோக்கியத்தை பாதுகாக்க நம் அன்றாட வாழ்வில் சில பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். இந்த உதவி குறிப்புகள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவும்.

1.  தியானம் மற்றும் சுவாச பயிற்சி:
தியானம் நமக்கு அதிக தெளிவையும், கவனத்தையும் தரும். அது நம்மை நிகழ்கால தருணத்துடன் இணைக்க உதவுகிறது. மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற எதிர்மறை சிந்தனை முறைகளை குறைக்க உதவுகிறது. அது மட்டும் இன்றி அன்றாட சவால்களை சமாளிக்க தேவையான மன சமநிலையை வழங்குகிறது என ஆராய்ச்சி கூறுகிறது. அடிக்கடி தியானம் செய்பவர்கள் சிறந்த மனநிலையை அனுபவிக்கிறார்கள், சிறப்பாக கவனம் செலுத்த அவர்களால் முடிகிறது மற்றும் சிறந்த தூக்கத்தையும் அவர்கள் பெறுகிறார்கள்.

2. உடல் பயிற்சி:
மனமும், உடலும் ஒன்றாக இருக்கும் பொழுது வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில உடல் அசைவுகள் மூலம் மன ஆரோக்கியம் ஊக்கத்தை பெறுகிறது. உடல் பயிற்சி மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்கள் மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சியை வழங்குகிறது. உடல் அசைவுகள் ஜிம்மிங், நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், யோகா, ட்ராம்போலைன் போன்றவற்றை குறிக்கிறது. வீட்டிற்குள் 15 நிமிடம் நடப்பதும் இதில் அடங்கும்.

Advertisment

3. வழக்கமான செக்கப்(check up):
நாம் மன அழுத்தத்தை குறைக்க வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறோம். ஆனால் மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள தினமும் நாம் சுய செக்கப் (self checkup) செய்ய வேண்டும். இது நமது ஆற்றல்கள், வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்கு தேவையான கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறது. ஜர்னலின் மற்றும் சுய சிந்தனைகளை எழுதுவது ஆகிய சில எளிய பழக்கங்கள் பயனுள்ள வழிகளாகும். நாம் நமது மனம் மற்றும் உடலை தவறாமல் தினமும் கண்காணிக்கும் பொழுது அது நமது மன ஆரோக்கியத்தில் ஒரு சிறிய மாற்றம் வந்தாலும் அதனை உடனே கண்டறிய உதவும்.

4. இலக்குகளை அமைத்தல்:
இலக்குகள் நாம் எதை நோக்கி செல்கிறோம் என்றும், ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருப்பதையும் உறுதி செய்கிறது. இலக்குகள் அமைப்பது மூலம் அதை நோக்கி செயல்பட மனதிற்கு பயிற்சி அளிக்கிறோம். அதன் மூலம் மனமும் ஒரு ஆழ்ந்த அர்த்தமுள்ள உற்பத்தி செயலில் ஈடுபடுவதை உறுதி செய்கிறது. நமது எண்ணங்களும் இலக்குகளை நோக்கி செயல்பட தொடங்குகிறது. ஒரு பெரிய இலக்கை முடிவு செய்த பின் அதை அடைவதற்கு தினமும் சிறிய முயற்சி எடுக்க வேண்டும். ஒரு விஷயத்தை தேர்வு செய்து அதற்காக தினமும் கவனம் செலுத்தி அதை முடிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது நம் மனம் வேறு தேவையில்லாத சிந்தனைகளை யோசிக்காமல் அந்த இலக்கை அடைவதற்காக மட்டுமே நம் சிந்தனைகள் செயல்படுத்துகிறது.

5. உங்களுக்கு நல்லது நினைக்கும் நண்பர்கள் மற்றும் நபர்கள் உங்களை சுற்றி இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்:
நமது மன ஆரோக்கியம் நம்மை சுற்றியுள்ள நபர்களை பொறுத்தது. நம்மை சுற்றியுள்ள ஆற்றல்களை நமது ஆழ்மனது ஏற்றுக் கொள்கிறது. அதனால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆற்றல்களுடன் நம்மை சுற்றிக் கொள்வது மன ஆரோக்கியத்தை உயர்த்துகிறது. நல்ல எண்ணங்கள் உடைய மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்றால் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நமது அணுகுமுறையும், கண்ணோட்டமும் மாறுகிறது.

Advertisment

6. உங்களுக்கு விருப்பம் உள்ள வேலையை செய்யுங்கள்:
நாம் வேலையில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் நாம் செய்யும் வேலையும், அந்த சூழலும் மகிழ்ச்சியற்றதாக இருந்தால் அது மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கக் கூடும். எனவே, நம் மனதிற்கு பிடித்த வேலையை செய்தால் நமது மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த வேலையை செய்ய தொடங்குங்கள், அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள், அது உங்களுக்கு பயனளிக்கும்.

7. சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுங்கள்:
பிறருக்கு உதவுவது அழகான ஒரு செயல். பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் தன்னார்வ தொண்டு செய்வது உங்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமாக இருக்கும். ஏனெனில், மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்வது தானாகவே நம்மை ஒரு சிறந்த நிலையில் வைக்கும். இது நீங்கள் மனித நேயத்துடன் இருப்பதையும், பூமியில் உள்ள மற்ற உயிர்களுக்கு பயனுள்ள ஒன்றை செய்வதையும் உறுதி செய்து உங்களை அன்பினால் நிரப்பும். ஒரு சிறிய கருணை செயல் கூட நல்வாழ்வு மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும்.

நாம் அனைவரும் சிறந்த வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறோம். அதற்காக சில சமயம் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வது மூலம் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொள்ள நினைக்கிறோம். நம் மன அழுத்தத்தை சரி செய்யாமல் இருப்பது நமது வாழ்க்கையை பாதிக்கும். சில சுய கவனிப்பு(self care) முறைகளை பின்பற்ற வேண்டும். சுய அன்பும்(self love), கவனிப்பும் சுயநலமாகாது. சுய அன்பு நமது மன ஆரோக்கியத்தை ஊக்கவிக்க முக்கியமான ஒன்றாகும். எனவே, உங்களை நேசிக்க தொடங்குங்கள். ஏனென்றால், நீங்கள் அந்த அன்பிற்கு தகுதியானவர்.

mental health
Advertisment