சமந்தா சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை பற்றி இணையத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களிடம் மீண்டும் பணியை தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது உடல் நிலையை பற்றி வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு முன் சமந்தா அவரின் விவாகரத்தை அறிவித்த பின் நிறைய ஊடக பேச்சுக்கு உள்ளானார். ஆனால் அதை எல்லாம் கடந்து மீண்டும் அவர் இயல்பு நிலைக்கு வந்தது போல இந்த முறையும் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டுமென ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண் உழைத்து தனக்கான ஒரு தொழிலை உருவாக்கிக் கொள்வதற்கு நிறைய தடைகள் உள்ளன. ஒரு பெண்ணின் வாழ்வில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது அவள் தொழில் தான். அதனைத் தொடர்ந்து அவளின் கனவுகளும், லட்சியங்களும் ஒரு மாயையாக மாறிவிடுகிறது. பெண்ணின் சம்பளம் குடும்பத்திற்கு உதவியாக இருந்தாலும் அவள் வேலைக்கு செல்வது அவள் சுயநலத்திற்காக தான் என கூறப்படுகிறது. இந்த சமூகத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மிகவும் குறைவு.
பெண்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு திரும்பும் போது அவர்களை பலவீனமாக பார்க்கிறார்கள். எனவே, பெண்கள் அவர்களின் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக ஓய்வு எடுப்பது சில சமயங்களில் முடியாமல் போகிறது.
எனவே ஒரு பெண் இது போன்ற சூழ்நிலைகளை கடந்து வேலைக்கு திரும்பும்போது மற்ற பெண்களுக்கும் அது ஒரு ஊக்கமாக இருக்கிறது.
சமந்தா வேலைக்கு திரும்புகிறார்:
சமந்தா அவர்களின் உடல்நிலை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இணையத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அவருக்கு மையோசைடிஸ் (Myositis) இருப்பதாக கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக அதில் தெரிவித்திருந்தார். அவருக்கு இந்த நிலை கடினமாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டார். இதனை அடுத்து அவர் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தற்போது சமந்தா யசோதா படம் ப்ரமோஷனுக்காக மீண்டும் அவர் வேலைக்கு திரும்பியது சாதாரணமாக ஒரு நடிகர் அவர் வேலையை செய்வது போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால், சமந்தா போன்ற கலைஞர்களால் நம் கற்பனை செய்வதை விட அதிகமான மக்களை ஊக்குவிக்க முடியும். வழக்கமாக ஒரு பெண் வீட்டில் மற்றும் வேலையில் பாலியல் ரீதியாக போராட வேண்டி உள்ளது. எனவே, சமந்தா போன்றவர்கள் இந்த தடைகளை வென்று வருவது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும்.
சமீபத்தில் வெளியான ஒரு நேர்காணலில் கூட "நான் என்னோட போஸ்ட்ல சொன்ன மாதிரியே "Some days are good days, some days are bad days". நான் என்னோட வாழ்க்கையில ஒரு ஸ்டெப் ஆவது முன்னாடி எடுத்து வைக்க முடியுமான்னு யோசிச்சு இருக்கேன். ஆனா இப்போ திரும்பி பார்த்தா நான் ரொம்ப தூரம் வந்து வந்திருக்கேன்னு எனக்கு புரியுது. என்ன மாதிரி நிறைய பேரு உங்க வாழ்க்கையில நிறைய பேஸ் பண்ணிக்கிட்டு இருப்பீங்க."I'm here to fight". நான் இதுல இருந்து கூடிய சீக்கிரம் சரியாயிடுவேன். இதுல இருந்து ஜெயிச்சு வருவேன்" என்று மனம் உருக கூறி இருக்கிறார். அதேபோல் சில பத்திரிகைகளில் அவருக்கு உயிரை பாதிக்கும் அளவிற்கு பெரிய நோய் என குறிப்பிட்டுள்ளது அவருக்கு வருத்தம் அளிப்பதாக கூறி அவருக்கு உயிரை பாதிக்கும் அளவிற்கு பெரிய நோய் அது இல்லை என்றும் விரைவில் முழுமையாக குணமடைந்து வருவேன் என்றும் கூறியுள்ளார்.