Advertisment

Sew with Shama YouTube சேனலில் எளிமையாக தைக்க கற்றுத் தருகிறார் Shama

Sew with Shama என்ற YouTube சேனலை ஆரம்பித்து ஷாமா என்பவர் அவரின் திறமையினால் ஒரு ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்டை(fashion institute) ஆரம்பித்துள்ளார். அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Sew with Shama

Image of Shama

ஒருவர் தனக்கு பிடித்த விஷயத்தில் அவரின் திறமைகளை மெருகேற்றிக் கொண்டு அதை செய்தால் அவர்களுக்கு பிடித்த ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியம் என்பதற்கு ஷாமா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. திருமணத்திற்கு பிறகு வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்ட ஷாமா தற்போது ஒரு ஃபேஷன் டிசைனிங் இன்ஸ்டிட்யூட்( Fashion Designing Institute) ஆரம்பித்து மற்றவர்களுக்கு கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

Advertisment

தனக்கான பேஷனை(passion) கண்டுபிடித்து நேரத்தை சரியாக செலவழிக்க வேண்டும் என்று எண்ணிய ஷாமா அவருக்கு தைக்க பிடிக்கும் என்பதால் அதை பற்றி நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். சாதாரணமாக தனக்கு தெரிந்ததை வீட்டில் இருந்து தைக்காமல் தனது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக முறையாக அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணி ஒரு ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படித்துள்ளார். அவருக்கு இருந்த ஆர்வத்தினால் அதைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

Sew with Shama

மேலும் இவர் கிளாசுக்கு செல்லும் பொழுது அனைவரும் இவரின் உடை பற்றி நேர்மறையான கருத்துக்களை கூறுவதோடு அவர் அணிந்திருக்கும் உடையில் கலர் காம்பினேஷன்(color combination), நெக் டிசைன்(Neck design) போன்ற விஷயங்களை பாராட்டி அவரிடம் டிப்ஸ் கேட்க ஆரம்பித்தனர். அவர் வகுப்பில் சொல்லித் தருவதை மட்டும் பயிற்சி செய்யாமல் வித்தியாசமாக நிறைய முயற்சி செய்து பார்ப்பார். மேலும் சொல்லிக் கொடுப்பதை ஈசியாக புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவரிடமிருந்தது. அவர் தனது பேஷனை(passion) சரியாக தேர்ந்தெடுத்ததால் அதில் அவருக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

Advertisment

அனைவரும் இவரிடம் நிறைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். அதனால் இவர் ஒரு YouTube சேனல்(Sew with me) ஆரம்பித்து அதில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று முடிவை எடுத்தார். மேலும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான முறையில் தைப்பதற்கு கற்றுத் தந்தார். சாதாரணமாக சல்வார் போன்ற விஷயங்களை கூட நிறைய வித்தியாசங்கள் கொடுத்து கலர் காம்பினேஷன்(color combination) போன்ற பல பயனுள்ள தகவல்களை தனது வீடியோக்களின் பகிர்ந்து கொண்டார். அதனால் subscribers இவருக்கு அதிகமாக தொடங்கியது.

Sew with Shama

பலர் இவரை நேரில் பார்த்து தையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் இவர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப Sew with Shama Institute of Fashion Designing ஆரம்பித்து மக்களுக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். முதலில் அவர் ஆங்கிலத்தில் Sew with me என்ற YouTube சேனலை தான் ஆரம்பித்தார். அதன் பிறகு தான் தமிழில் Sew with Shama என்ற சேனலை ஆரம்பித்தார். இவர் தமிழில் வீடியோக்கள் போட ஆரம்பித்த பிறகு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

ஆனால் இந்தப் பயணம் அவருக்கு எளிதானதாக இல்லை. அவர் ஆரம்பித்த உடனே இந்த வளர்ச்சியை அடையவில்லை அதற்காக இவர் கடுமையாக உழைத்தார். பல நாட்கள் ஒழுங்காக உறங்காமல் நிறைய தேடி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இந்த தொழிலில் தனது அறிவை தினமும் அவர் வளர்த்துக் கொண்டே இருந்தார். அதனால் ஒரு தையல் மெஷினில் ஆரம்பித்த அவரின் பயணம் தற்பொழுது 40 மெஷின்களுக்கும் மேல் வளர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை அவர் எடுத்து வருகிறார்.

Sew with Shama

பல இடங்களில் தைக்க சொல்லித் தரும்போது பல விஷயங்களை மறைத்து சொல்லாமல் விட்டு விடுவார்கள். ஆனால் ஷாமா தனக்கு தெரிந்த அனைத்தையும் அவரின் மாணவர்களுக்கு சொல்லித் தருவதால் அவர்களும் இவரை போல் நன்றாக தைத்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்திலும் இவர் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்தார். இவரின் ஆன்லைன் வகுப்புகளில் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Advertisment

ஒரு மனிதன் எப்பொழுது தனக்கு எதன் மீது ஆர்வம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்காக உழைக்கிறானோ அப்பொழுதுதான் அவன் வெற்றி அடைகிறான். அதனால் உங்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதில் கவனமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்‌.

ஆரம்பத்திலிருந்து அவர் ஒரு நாளை எப்படி செலவிட வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்து வைத்து அதன்படி நடந்து கொள்கிறார். வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு தொழிலை நடத்துவது எளிதான காரியம் அல்ல. இருப்பினும் நேர மேலாண்மையை நாம் கற்றுக் கொண்டால் அதை செய்ய முடியும். அப்படி இவர் அடுத்த நாளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக அதன் முதல் நாளே யோசித்து அதன்படி செயல்பட்டு வருவதும் இவரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகும்.

inspiring story Sew with Shama Sew with Shama Institute of Fashion Designing
Advertisment