Advertisment

Some More Foods என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் தீபா

மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பிசர்வேட்டிவ்ஸ் இல்லாத நல்ல ஆரோக்கியமான உணவை தர வேண்டும் என்று தீபா ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அவரின் வாழ்க்கை பயணம் மற்றும் தொழில் முனைவு பயணத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Some More Foods

திருப்பூரில் பிறந்து வளர்ந்த தீபா முத்துக்குமாரசாமி Some More Foods என்ற பிராண்டை ஆரம்பித்து அதில் பிசர்வேட்டிவ்ஸ் இல்லாத உணவு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறார். அவரின் குடும்பத்தில் பெரும்பாலும் பெண்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் தீபாவின் தந்தை அவரின் ஆர்வத்தை புரிந்து கொண்டு சென்னையில் படிப்பதற்காக அனுப்பி வைத்தார். சென்னையில் படித்து முடித்த பிறகு தீபா பெங்களூருக்கு வேலைக்காக சென்று இருந்தார். இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் எதையும் எப்படி கையாள்வது என்பதை அவருக்கு கற்று தந்தது. பிறகு பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு திருமணம் ஆனது.

Advertisment

அவரின் கணவர் ஒரு தொழில் முனைவராவார். குழந்தை பிறந்த பிறகு தான் தீபா ஒரு தொழில் முனைவராக மாறியிருக்கிறார். குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான உணவு தர வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே அவரின் குழந்தைக்கான உணவை தயாரிக்க ஆரம்பித்தார். அவரின் குழந்தைக்காக பக்கத்தில் உள்ள ஒரு ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடையிலிருந்து மூலப்பொருட்களை(raw materials) வாங்கி ஒரு ஹெல்த் மிக்ஸ்(health mix) தயாரித்து உள்ளார். அந்த ஹெல்த் மிக்ஸை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாங்கி பயன்படுத்தி பார்த்தனர். அவர்களின் குழந்தை அதை விரும்பி உண்ணுவதால் அவரை இந்த ஹெல்த் மிக்ஸை தொடர்ந்து செய்து தருமாறு கேட்டனர்.

அப்பொழுதுதான் தீபாவிற்கு மக்களுக்கு இது உதவியாக இருப்பதால் இதை தொழிலாக செய்து வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற யோசனை வந்தது. அதனால் அவராகவே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் நிறைய கடைகளில் குழந்தைகளுக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதை தீபா அறிந்து கொண்டார். அதனால் குழந்தைகளுக்கு எந்த ஒரு கெட்ட பொருளும் இல்லாத ஆரோக்கியமான உணவை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

Some More Foods

Advertisment

2013 Some More Foods என்ற பிராண்டை உருவாக்கினார். ஹெல்த் மிக்ஸ் தான் முதல் ப்ராடக்ட் ஆக இருந்தது. இவர் எந்த கடையில் மூலப் பொருட்களை வாங்கினாரோ அந்த கடை மூலமாகவே நிறைய ஆர்கானிக் கடைகள் பற்றி தெரிந்து கொண்டு அதில் அவர்களின் பொருளை விற்கத் தொடங்கினார். அதன் மூலம் நிறைய ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு இவரின் பொருள் சென்றடைந்தது.

இவர் Food and Nutrient படித்திருந்ததால் அவர் படித்ததை வைத்து இந்தத் தொழில் செய்வதற்கு உதவியாக இருந்தது. மேலும் திருப்பூரில் உள்ள டாக்டர்களிடம் சென்று அவர்களிடம் இந்த பொருள் பற்றி கூறி அவர்களை உபயோகித்து பார்க்குமாறு கூறினார். அவர்கள் உபயோகித்து பார்த்த பிறகு அவர்களிடம் வரும் பெற்றோர்களுக்கும் மற்ற மருத்துவ நண்பர்களுக்கும் அதனை பகிர்ந்து ஆதரவளிக்க தொடங்கினர். 

அதன் பிறகு குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக நல்ல உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக பஸ்ட் ஸ்பூன்(First Spoon) என்ற பிராண்டை உருவாக்கினார். டாக்டர்கள் தந்த ஆதரவினாலும், மக்களின் வரவேற்பினாலும் பல மருத்துவமனைகளிலும், கடைகளிலும் இவரின் பொருட்கள் விற்கப்பட்டது.

Advertisment

Some More Foods

ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் சவால்கள்:

ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் செய்வது அவருக்கு ஒரு சவாலாக இருந்தது. பல பெண்கள் தாங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதை தங்களால் முடியாது என்று நினைத்து அவர்களை குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு அதை செய்யாமல் விட்டு விடுகின்றனர். ஆனால் தீபா மார்க்கெட்டிங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு அதிலும் நிபுணராக மாறியிருக்கிறார். 

Advertisment

இவர் தொழில் ஆரம்பித்த போது வீட்டில் இவரை ஆதரிக்க தயங்கினார்கள். ஏனென்றால் குழந்தைகளுக்காக உறவு பொருட்கள் தயாரிப்பது என்பது பெரிய பிராண்டுகளுடன் போட்டியிடுவது போல இருக்கும் என்றும் அதில் இவரால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தீபா தனக்கு பிடித்ததை செய்வதை பார்த்து அவரின் குடும்பமும் ஆதரவளிக்க தொடங்கியது.

அதேபோல் ஆரம்பத்தில் முதலீடு செய்வதற்கும் எந்த ஆதரவும் அவருக்கு இல்லை. அதனால் இவர் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது போன்ற பல வேலைகளை செய்து பணத்தை திரட்டி அதிலிருந்து தொழிலை ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்துள்ளார்.

Some More Foods⁠⁠⁠⁠⁠⁠⁠

Advertisment

பெண்களுக்கான ஆலோசனை:

தொழில் முனைவோருக்கு நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும். எதிர்மறையான விஷயங்களை கண்டு கொள்ளாமல் நேர்மறையான எண்ணங்களை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். பிரச்சனைகளை கண்டு தயங்காமல் அதை முறியடித்து வளர வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறார். பிரச்சனைகள் வரும் போது மனசு உடைந்து போகாமல் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார். 

தற்போது இவரின் பொருட்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனையாகி வருகிறது. அது மட்டும் இன்றி பல பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பதற்காகவும், தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருவதற்காகவும் இவர் பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First Spoon Some More Foods
Advertisment