பெண்கள் தொழில் செய்வது புதிதல்ல. நாம் எண்ணற்ற பெண் தொழில் முனைவோர்களால் சூழப்பட்டுள்ளோம். சிறிய முதல் பெரிய அளவிலான தொழில் வரை பெண்கள் முன்னெடுத்து நடத்துகின்றனர். அப்படி இருந்தும் இந்தியாவில் மொத்த தொழில் முனைவோர் எண்ணிக்கையில் 13.76 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். நாம் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் வாய்ப்புகள் வழங்குமாறு குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். அதேபோல் முன்பை விட தற்போது பெண்களுக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனாலும், தொழில் முனைவோரின் சதவீதத்தில் பெண்களின் பங்களிப்பு ஏன் அதிகரிக்கவில்லை?
பெண்கள் தொழில் செய்வது சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், எந்த மாதிரியான விளைவுகள் அது ஏற்படுத்தும் என்பதையும் நாம் பார்ப்போம்.
1. பெண்கள் வேலையை உருவாக்குபவர்களாக இருப்பார்கள்:
ஆம், ஒரு வணிக யோசனை சிந்தனையில் ஈடுபட்டு அதை விரிவுபடுத்துவது மூலம் பெண்கள் அவர்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். வேலை செய்யும் இடங்களில், சமூகத்தில் மற்றும் வாய்ப்புகள் வழங்குவதில் பாலின பாகுபாடுகள் குறைவதை நாம் பார்க்க முடியும். இதுவரை பெண்கள் வீடுகளை நிர்வாகிப்பதில் சிறந்தவர் என்று நிரூபித்தனர். அதே போல் அவர்கள் நிறுவனத்தையும் சிறப்பாக கையாண்டு தொழிலை விரிவுபடுத்த வேண்டும். நிர்வாகிக்கும் திறமை அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும்.
பிறருக்கு வாய்ப்புகளும் வழங்க முடியும், குறிப்பாக பெண்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்க முடியும். இது குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் அனைவருக்கும் செழிப்பை கொண்டு வரும்.
பெண்கள் உயர் பதவிகளில் இருப்பது பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும். அது மட்டும் இன்றி வேலை இடங்களில் பாதுகாப்பை பற்றிய கவலை இல்லாமல் வேலை செய்ய முடியும்.
2. பெண்களால் சமூகத்தின் பார்வையை மாற்ற முடியும்:
பெண்கள் தனியாக சமைப்பது, துணி துவைப்பது மற்றும் மற்ற வீட்டு வேலைகளை செய்து கொண்டு, வீட்டில் இருப்பவர்களையும் கவனித்துக் கொள்கின்றனர். ஆனால், நாம் இந்த வேலை, சமையல், மற்றும் பிற வீட்டு வேலைகளில் பங்கு எடுத்துக் கொண்டோம் என்றால் அவர்கள் முன் வந்து அவர்களின் திறமைகளையும், நேரத்தையும் நல்ல விதமாக பயன்படுத்த உதவியாக இருக்கும். அது இந்த சமூகம் என்ன சொல்லும் என்ற பயத்திலிருந்து மாறி பெண்களை பாராட்ட ஒரு உதவியாக இருக்கும்.
இன்னும் பிற்போக்காக சிந்திப்பவர்கள் அதாவது பெண்களுக்கு தொழில் முனைவு ஏற்றதல்ல என்று நினைக்கும் மனப்பான்மையை மாற்றி பணரீதியாக அவர்கள் முன்னேறி, அவர்களின் தொழில்கள் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடும்.
அது மட்டும் இன்றி பெண்கள் தொழில் முனைவராக இருக்கும்போது பெண்களுக்கு தேவையான நிறைய விஷயங்களை அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்த முடியும். அது பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
3. பெண்களின் வாழ்வாதாரம் உயரும்:
பெண்கள் சுயமாக தொழில் தொடங்குவது அவர்களுக்கு நிதி உதவியை அளிக்கும். மேலும் ஒரு ஆய்வின் படி 80 சதவீத பெண்கள் நகர்புறம் மற்றும் கிராமப்புற இந்தியாவில் ஒரு சொந்த தொழில் தொடங்கிய பிறகு அவர்களின் வாழ்க்கை மாறியதாகவும், பொருளாதார உயர்ந்ததாகவும் கூறுகிறது.
பணம் சம்பாதிப்பது தன்னம்பிக்கை கொண்ட பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் குறையும். ஏனெனில், அவர்கள் இப்பொழுது ஒரு தொழிலுக்கு முதலாளியாக மாறிவிட்டனர்.
4. நம்பிக்கையை அதிகரிக்கும்:
ஒரு ஆய்வில் பெண்கள் மற்றும் ஆண்களின் செயல் திறன்களை மதிப்பிட்டனர். அப்பொழுது பெண்களும், ஆண்களும் சராசரியாக ஒரே மதிப்பெண்களை எடுத்து இருந்தாலும், பெண்கள் அவர்களை குறைவாகவே மதிப்பிட்டு கொள்கின்றனர் என்பதை கண்டறிந்தனர். பெண்கள் அவர்களின் திறன்களை குறைவாகவே மதிப்பிடுகின்றனர் என்பது உண்மை. இந்த சிந்தனையை நம் முதலில் மாற்றி அமைக்க வேண்டும்.
பெண்கள் அவர்களின் தன்னம்பிக்கை, அறிவு, உழைப்பு மூலம் அவர்கள் மும்பை விட நன்றாக செயல்பட முடியும். அவர்கள் மற்ற போற்றியாளர்களுடன் போட்டி போடும் திறனை வளர்த்துக் கொண்டு, பெரிய அளவில் முன்னேற முடியும்.
நாம் இப்பொழுது பெண் தொழில் முனைவோரின் வீட்டு வேலைகளில் பங்கு எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தற்பொழுது தொழில் செய்து கொண்டிருக்கும் பெண் தொழில் முனைவோர்களை பற்றி கூறி மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது இந்த சமூகத்தால் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்க உதவியாக இருக்கும்.
அடுத்து அவர்களின் திட்டங்களைக் கேட்டு அவர்களின் தொழிலை முன்னேற்றுவதற்கு சில உதவிகள் செய்ய வேண்டும். அதாவது தொழிலை பற்றி அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். டிஜிட்டல் மீடியாவை நன்றாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் மிகவும் முக்கியமாக தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளிவந்தது, அவர்களின் முழு முயற்சியையும், கவனத்தையும் தொழிலில் செலுத்த வேண்டும்