பண்டிகை என்றாலே குடும்பத்துடன் சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு. அதுவும் இந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி வரை நிறைய பண்டிகைகள் வரக்கூடும். பண்டிகையின் சந்தோஷத்தில் இருந்தாலும் பலர் பலகாரங்களை உண்டு உடல் எடை ஏறி விடுமோ என்று பயப்படுவதும் உண்டு.
பண்டிகையின் போது உடல் எடை ஏறுகிறதா என்பதை தெரிந்து கொள்ள பல ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது பலரும் அச்சப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி உள்ளது. எனவே, பண்டிகை காலத்தில் எடை அதிகரிக்காமல் இருக்க இந்த நான்கு விஷயங்களை பின்பற்றுங்கள்.
1. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனம் செலுத்துங்கள்:
பொதுவாக உணவு உண்ணும் போது நாம் போன் அல்லது டிவியின் மீது கவனம் செலுத்துவோமே தவிர சாப்பாட்டின் மேல் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு நாம் உண்ணும் போது போன் அல்லது டிவி மீது கவனம் இருந்தால் நாம் எவ்வளவு என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்னும் கணக்கு தெரியாமல் போய்விடும். எனவே, உண்ணும் பொழுது சாப்பாட்டின் தோற்றம், வாசனை, சுவை ஆகியவற்றை கவனித்து உண்ணுங்கள். உங்கள் சிந்தனையை வேறு எதிலும் சிதறவிடாமல் இருப்பது நீங்கள் உண்ணும் அளவை கட்டுப்படுத்தும்.
நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்கள் என்று அறிய உங்கள் மூளைக்கு 20 நிமிடம் வரை ஆகும். எனவே, நாம் சாப்பிடும் போது மெதுவாக சாப்பிடுவது மற்றும் கவனத்துடன் சாப்பிடுவது மூலம் அதிகமாக உணவை எடுத்துக் கொள்வதை தவிர்த்து போதுமான அளவு மட்டுமே சாப்பிட உதவியாக இருக்கும்.
பண்டிகை காலங்களில் நீங்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட அதிகமாக சாப்பிட்டால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இரண்டு, மூன்று முறை அதிகமாக சாப்பிடுவதால் நீங்கள் நீண்ட கால எடை அதிகரிப்பை பெற போவதில்லை. எனவே, அதைப்பற்றி கவலைப்படாமல் நீண்ட காலத்திற்கு உங்கள் எடையை சரியான அளவில் வைத்திருக்க உதவும் உணவு பழக்கங்களில் கவனம் செலுத்துங்கள்.
2. அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்:
பதப்படுத்தப்பட்ட உணவுகளும், பானங்களும் இந்த வகையில் சேரும். இவை ஐந்திற்கும் மேற்பட்ட பொருள்களை கொண்டிருக்கும், அவற்றின் சில பொருட்களின் பெயர்களை உச்சரிக்க கூட கடினமாக இருக்கும். இந்த பதப்படுத்தப்பட்ட பொருட்களில் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் மற்றும் அதிக புரத உணவு என்று குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளும் இதில் அடங்கும்.
20 இளைஞர்களுக்கு, இரண்டு வாரத்திற்கு பதப்படுத்த உணவு பொருட்களையும் மற்றும் அதே ஊட்டச்சத்தை உள்ள பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்களையும் தந்து ஒரு ஆய்வை நடத்தினர். அந்த ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுபவர்கள் ஏறக்குறைய 0.9 கிலோ எடை அதிகரித்ததாகவும் மற்றும் அதே அளவு கேலரிகளை உள்ள பதப்படுத்தப்படாத உணவை உண்டவர்கள் 0.9 கிலோ எடை குறைந்ததாகவும் அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகமாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள் எடையை அதிகரிக்க செய்யும் என்பதற்கான மற்றொரு ஆதாரம், அதில் நாளமில்லா சுரபி ரசாயனங்களை வெளிப்படுத்துவது. இந்த ரசாயனங்கள் எடை அதிகரிப்புடன் தொடர்புடையவை. உணவு பேக்கேஜிங்கில் ஒரு வகையான நாளமில்லா சுரபியை பாதிக்கும் ரசாயனங்கள் இருக்கின்றது. எனவே, அதிகமாக பதப்படுத்தப்பட்ட பொருட்களை உண்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். எனவே, வீட்டில் சமைத்து உண்ணுங்கள் அல்லது குறைவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுங்கள்.
3. ஒரே இடத்தில் இல்லாமல் உடல் அசைவுகளை அதிகப்படுத்துங்கள்:
நீங்கள் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி உங்களுக்கு பயனுள்ளதாக இல்லை என்றாலும் எடை அதிகரிப்பை தடுக்க உதவியாக இருக்கும். எனவே, தினம் தோறும் பத்தாயிரம் அடிகள் நடப்பதை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் வீட்டிற்குள்ளே இருக்காமல் குடும்பத்தினர்களுடன் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வது அல்லது வீட்டிற்கு வெளியே நடப்பது இது போன்ற விஷயங்கள் உங்களின் மனநலத்தை மேம்படுத்த கூடும்.
4. நீங்கள் குடிப்பவராக இருந்தால் அளவாக குடியுங்கள்:
அளவாக குடிப்பது உடல் எடையை அதிகரிக்க கூடும் என்று எந்த ஆராய்ச்சியும் காட்டவில்லை. ஆண்களும், பெண்களும் இருவருமே அளவாக குடிக்க வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீருடன் மதுபானங்களை மாற்றி குடிப்பதன் மூலம் நீங்கள் குடிக்கும் அளவை குறைக்கலாம். மேலும் தண்ணீருடன் குடிப்பதால் அது நீர் இழப்பை தடுக்க கூடும்.
இந்த பண்டிகை காலங்களில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமே தவிர எடை கூடுமோ என்ற பயத்துடனும், பதட்டத்துடனும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுவே, மன அழுத்தத்தை அதிகப்படுத்தி, அதிகமாக உண்ண ஒரு காரணமாக மாறிவிடும். எனவே, உணவு பழக்கங்களுடன் ஒரு நேர்மறையான உறவை கொள்ளுங்கள். என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து கொண்டு, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.