பெண்களுக்கு(feminist) காதல் உறவில் என்ன வேண்டும்?

பெண்ணியத்தை பின்பற்றும் பெண்கள் பெரும்பாலும் அதிகமாக ஆசைப்படுகிறார்கள் என்று இந்த சமூகம் கூறுகிறது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு வெறும் சாதாரண மனிதரின் உரிமை மட்டுமே. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Devayani
07 Mar 2023
பெண்களுக்கு(feminist) காதல் உறவில் என்ன வேண்டும்?

Image is used for representational purpose only

பலர் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுவர். பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்ற கருத்து இந்த சமூகத்தில் பரவலாக உள்ளது. சில நாட்கள் பெண்களுக்கு மலர்கள் பிடிக்கும், சில சமயம் பிடிக்காது. மேலும் உடம்பில் நடக்கும் பல்வேறு மாற்றங்களால் அவர்களுக்கு mood swings வரக்கூடும் என்பதால் ஆண்களுக்கு அவர்களை புரிந்து கொள்வது குழப்பம் நிலவுகிறது.

பல சமயம் ஆண்கள் பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அவர்களின் உரிமைக்காக போராடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள தவறிகின்றனர். பல ஆண்கள் ஒரு பெண்ணிற்காக ஆணாதிக்க சிந்தனையை விட வேண்டுமா என்ற எண்ணத்தோடு இருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணத்தோடு பெண்களை புரிந்து கொள்ள முடியாது. எனவே, பெண்ணியத்தை நேசிக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேரம், அவர்களுக்கான இடம் மற்றும் மதிப்பு:

தற்போது பெண்களுக்கு ஒரு ஆரோக்கியமான உறவு தேவைப்படுகிறது. அதில் ஆண், பெண் என இருவரும் வளர்ச்சி அடைய வேண்டும். இதை ஆண்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்த உறவிலிருந்து அவர்கள் விலகக்கூடும். எனவே, ஒரு பெண்ணிற்கான நேரத்தையும், அவளுக்கான இடத்தையும், மதிப்பையும் ஆண்கள் வழங்க வேண்டும். இது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆனால், ஆணாதிக்க சிந்தனை உடைய ஒரு ஆணிற்கு இது பெரிய விஷயங்களாக தோன்றக்கூடும்.

மரியாதை:

ஒரு பெண் எப்பொழுதும் அவளது வாழ்க்கை துணையிடமிருந்து மரியாதையை எதிர்பார்ப்பாள். நீங்கள் அவளையோ, அவள் வேலையையோ அல்லது அவள் குடும்பத்தையோ தாழ்த்தி பேசினால், மதிக்கவில்லை என்றால் அது அவர்களை மனதளவில் பாதிக்கும். நீங்கள் ஒரு பெண்ணின் வேலையை, அவள் குடும்பத்தை மதித்தால் ஒரு பெண்ணின் இயல்பான குணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். 

36 vayathiniley jyothika⁠⁠⁠⁠⁠⁠⁠

ஆதரவு:

காலம் காலமாக பெண்கள் தான் ஆண்களின் கனவுகளுக்காக ஆதரவளித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆண்களும் பெண்களின் கனவுகளை மதிக்க தொடங்கிவிட்டனர். நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையின் கனவுகளுக்கு ஆதரவு அளித்தால், அவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் அவர்களுக்கு உங்களை விட்டு பிரிய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது போல அவர்களும் எண்ணுவார்கள். எனவே, அதனை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

No என்றால் No:

ஒரு பெண் No என்று கூறினால் அதற்கு No என்றுதான் அர்த்தம். திரைப்படங்களில் மற்றும் மற்ற விஷயங்களில் ஒரு பெண் No என்று கூறினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதபடியே காட்சிப்படுத்தி இருப்பார்கள். இதனை பார்க்கும் மக்களும் பெண்கள் அதை தான் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. ஒரு பெண் No என்று சொன்னால் அதற்கு No என்ற ஒரே அர்த்தம் மட்டுமே உள்ளது.

மன ஆரோக்கியம்:

மனிதர்களுக்கு மன ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது உள்ள பெண்கள் இதனை பெரிய அளவில் மதிக்கின்றனர். பெண்களுக்கு ஆண்கள் அவர்களை சரியாக நடத்த வேண்டும். இல்லையெனில், அவர்களின் உரிமைக்காக போராட தயங்குவதில்லை. ஒரு உறவில் இருக்கும் பொழுது மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது:

முன்பிருந்த காலங்களில் ஆண்கள் வெளியே சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் பெண்கள் வீட்டு வேலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பெண்கள் வெளியே சென்று பணம் சம்பாதிப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இப்படி பெண்கள் சமூகம் ஆண்களின் பொறுப்பு என்றும் கூறும் விஷயத்தில் பங்கு கொள்ளும் பொழுது ஆண்கள் வீட்டு வேலையில் பங்கு கொள்வதில் எந்த தவறும், அசிங்கமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரை