கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண் தோழர் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் இருக்கும் சவால்களை கடந்து முன்னேறி வருகின்றனர். பல வழிகளில் தொழில் முனைவு என்பது பெண்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. அவற்றுள் சில இங்கு பார்ப்போம்.
1. பொழுதுபோக்கை தொழிலாக மாற்ற முடியும்:
அவர்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள ஒரு செயலை வெறும் பொழுதுபோக்காக மட்டும் செய்யாமல் அந்த திறமையை லாபமாக மாற்ற தொழில் முனைவு உதவுகிறது. காலம் காலமாக பெண்களின் திறமை அவர்களின் வீட்டிற்குள்ளே முடிந்து விடுகிறது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி அந்த திறமையை வைத்து அவர்களும் பணம் சம்பாதிக்க முடிகிறது. இந்த வருமானம் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவியாக இருக்கிறது. இது பெண்களை சிறு தொழில் முதல் பெரிய தொழில்களை செய்யவும் ஊக்குவிக்கிறது.
2. சமூகத்தில் சமத்துவத்தை பரப்ப உதவுகிறது:
சமத்துவத்தை நோக்கி செல்வதற்கு பல ஆண்டு காலமாக சமூகத்தில் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. சுய தொழில் தொடங்குவது மூலம் சமூகத்தில் பெண்களுக்கு நிறைய மாற்றம் ஏற்படக்கூடும்.
இருப்பினும், எண்களைப் பற்றி பேசும்போது நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எகனாமிக் டைம்ஸ் கூறுகிறது, “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் படி, இந்தியாவில் 14% வணிக நிறுவனங்கள் மட்டுமே பெண் தொழில்முனைவோரால் நடத்தப்படுகின்றன. பெண்களால் நடத்தப்படும் இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சிறிய அளவிலானவை என்றும் அவற்றில் 79% சுயநிதி நிறுவனங்கள்" என்றும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் நிச்சயமாக அதிகரிக்கும்.
3. முன்மாதிரிகள்:
பெண்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்படுவது முன்னேற்றம் தேவைப்படும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க முடியும். சமூக நெறிமுறைகளை எதிர்த்துப் போராடுவதன் மூலமும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார மண்டலங்களைச் சீரமைப்பதன் மூலமும் தொழில்முனைவு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு பெண் தொடங்கும் தொழில் வெற்றியடைந்தால் அது பல பெண்கள் தொழில் தொடங்குவதற்கு உதாரணமாக இருக்க முடியும்.
4. புதிய சாத்தியக்கூறுகளைக் கற்கும் கலை:
ஒருவரின் வாழ்க்கைப் பாதையை முடிவு செய்வதும், அதை நிர்வகிப்பதும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தொழில் முனைவு உதவியாக இருக்கும். இது அவர்கள் பணியிடத்தில் தலைசிறந்த தலைவர்களாக வளர உதவும். பல புதுமையான விஷயங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அறிவைப் பெறுதல், நிர்வாகிக்கும் திறமை ஆகியவை அவர்கள் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாகும். புதிது புதிதாக மனிதர்களை சந்திக்கும் போது அவர்களிடமிருந்தும், அவர்கள் அனுபவத்தில் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
5. கஷ்டங்களும் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளும்:
வெற்றி சாதாரணமாக கிடைப்பதில்லை. ஒரு வெற்றியை காண்பதற்கு முன் பல தோல்விகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த தோல்விகள் பெண்களுக்கு தடைகளை சரி செய்யவும், அவர்களின் போராட்டங்களில் இருந்து அவர்களை வலிமையாகவும், தொடர்ந்து முன்னேறுவதற்கான விடாமுயற்சி ஆற்றலையும் வழங்குகிறது. பெண்கள் மன அளவில் வலிமையானவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். இது அவர்களை உறுதியாக நிலைநிறுத்தத் தூண்டுகிறது. தொழில் முனைவு ஒருவரின் சொந்த விதிமுறைகளின்படி வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கிறது.
தற்போது பெண்கள் அதிக அளவில் சாதனை படைத்து வருகின்றனர். இந்த சமூகம் அளித்த பாலின பாகுபாடுகளை தரைமட்டமாகி அவர்கள் புதிய தொழில் தொடங்குவது மூலம் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.
எனவே, பெண்களே உங்கள் ஆர்வத்தையும், நோக்கத்தையும் ஏதோ ஒரு செயல் நிறைவேற்றும் என்று நீங்கள் நம்பினால் அதனை உடனடியாக செய்ய தொடங்குங்கள்.