Advertisment

Half of Indian women suffer from anemia!

இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி பெண்களுக்கு அனிமியா இருப்பதாக கூறுகின்றனர். மேலும் இதனால் அவர்கள் என்ன சிரமத்தை அனுபவிக்கிறார்கள் மற்றும் அதனை எப்படி சரி செய்வது என்பதை கட்டுரையில் காணலாம்!

author-image
Pava S Mano
New Update
Anemia

Image is used for representational purpose only

ஆம், இந்தியாவில் பாதி பெண்களுக்கு anemia இருப்பதாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர் NCBI. நம் உடலுக்கு ரத்த அணுக்களை எடுத்து செல்வதற்கான போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்படும் நிலைதான் இது. எதனால் இந்த நிலை ஏற்படுகிறது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம். அனிமியாவால் உடல் மிகவும் சோர்வடையும் மேலும் மற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

Advertisment

Absence of Total iron support:

ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் இரும்புச்சத்து தேவையான அளவு கிடைக்காமல் இருப்பது தான். ஹீமோகுளோபின் அளவை அதிகமாக சுரக்க வைப்பதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். அவை இல்லாத உணவுகளை சாப்பிடும் பொழுது அனிமியா ஏற்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் இரும்பு சத்து என்பது மிகவும் அவசியம் ஆகும். 

சரியான மருத்துவ வசதி மற்றும் போதிய அளவு தரம் இல்லாமல் இருப்பதால் கூட பெண்களுக்கு அனிமியா வருகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு மருத்துவ வசதிக்கான சூழல் குறைவாக இருப்பதால் அதனை கண்டறிவதற்கும் சரி செய்வதற்கும் சற்று சிரமமாகவே இருக்கிறது. மேலும் அனிமியாவை பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் கூட இது ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை. எனவே ஒவ்வொரு இடத்திலும் இதைப் பற்றிய விழிப்புணர்வு கூடங்கள் இருப்பது அவசியமாகும்.

Advertisment

இரும்புச்சத்து குறைவின்மை தான் அனிமியாவதற்கான காரணம். 50 சதவீத இந்தியா பெண்கள் அனிமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதவிடாயில் ஏற்படும் ரத்த சோகை கூட இதற்கான ஒரு காரணம்.

What happens to people with anemia?

அதிகப்படியான சோர்வின்மை தான் அனிமியாவின் வெளிப்பாடாக இருக்கும். இருப்பவர்களுக்கு மூச்சு விடுவது சற்று சிரமமாக இருக்கும். சிவப்பு அணுக்கள் தான் நம் உடம்பிற்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு செல்கிறது அது சரியாக வேலை செய்யாத பொழுது இது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிகப்படியான இருதயத் துடிப்பு ஏற்படுவதும் இருக்கும். பணிமையா இருப்பவர்களுக்கு சில சமயம் மறதி ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. தோல் சற்று வெளுத்து காணப்படும். இந்தியாவில் அதிகப்படியான இரும்புச்சத்து குறைபாட்டால் தான் இது அதிகமாக காணப்படுகிறது.

Advertisment

இரும்புச்சத்து தவிர வைட்டமின் பி 12 குறைபாட்டால் கூட அனிமியா ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். அதனின் காரணம் தெரிந்த பிறகு சரியான வைத்தியம் எடுத்துக் கொள்வது அவசியம்.

இதனை கட்டுப்படுத்த இரும்பு சத்து அதிகம் உள்ள உணவான மட்டன் மீன் பருப்பு வகைகள் கீரை வகைகள் சாப்பிடுவது அவசியமாகும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ஆரஞ்சு தக்காளி மற்றும் குடைமிளகாய் எடுத்துக் கொள்வதும் அவசியம். பி 12 வைட்டமின் அதிகரிப்பதற்காக பால் தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சப்ளிமெண்ட்ஸ் ஏதாவது எடுத்துக் கொள்ளலாமா என்று மறுத்தவர்களிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து இருந்தாலே எந்த ஒரு நோயையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/benefits-of-drinking-hot-water-1677785

https://tamil.shethepeople.tv/health/love-spicy-food-know-the-after-effects-1675208

https://tamil.shethepeople.tv/society/how-to-become-a-freelancer-1677943

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-set-boundaries-in-a-relation

ship-1564049

 

anemia
Advertisment