Advertisment

மாதவிடாயின்(periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி பெண்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மாதவிடாய் சமையத்தில் சில அறிகுறிகளை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாதவிடாய் காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
foods to avoid during periods

Image is used for representational purpose only

பல பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது வலி மிகுந்த பிடிப்புகள், மனநிலை மாற்றங்கள், இரத்தப்போக்கு, வீக்கம் மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். சில வல்லுனர்கள் இந்த விளைவுகளை மாதவிடாய் சுழற்சியின் பொதுவான கூறுகளாக கருதுகின்றனர். மற்றவர்கள் இந்த அறிகுறிகள் பலவற்றை ஒரே நேரத்தில் அனுபவிப்பதை இனப்பெருக்க ஆரோக்கியம் மோசமடைவதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

Advertisment

ஆனால், அசௌகரியமான உணர்வுகள் மற்றும் bloating எப்போதும் உங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது அல்ல, மாறாக மாதவிடாய் நேரத்தில் நீங்கள் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளாலும் அவை ஏற்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாகவே நாம் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். இருப்பினும், மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவு பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. உப்பு நிறைந்த உணவு:

அதிக உப்பு உணவை உட்கொள்வது bloatingயை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில், இது தண்ணீரை தக்க வைக்கும். அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். Bloatingயை குறைக்க உங்கள் உணவில் உப்பு போடுவதை குறைத்துக் கொள்ளவும் அல்லது தவிர்த்து விடலாம்.

Advertisment

2. அதிக சக்கரை:

சக்கரை மிதமாக எடுத்துக்கொள்ள தக்கது. ஆனால், அதை அதிகமாக உட்கொள்வது ஆற்றல் அதிகரிப்பது போல தெரியும் ஆனால் அதன் பிறகு மந்த நிலைக்கு வழிவகுக்கும். இது உங்களை மோசமாக உணர வைக்கும். உங்கள் மாதவிடாயின் போது நீங்கள் அடிக்கடி மனநிலை மாற்றங்கள், மனசோர்வு அல்லது பதட்டத்தை அனுபவித்தால் சக்கரை இல்லாத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு நிலையான மனநிலையை பராமரிக்க உதவும்.

3. காபி:

Advertisment

காபி bloating மற்றும் நீர் தக்க வைப்பு உள்ளிட்ட எதிர்மறையான பக்க விளைவுகளை கொண்டுள்ளது. இது தலைவலியையும் மோசமாக்கும். இருப்பினும் நீங்கள் ஒரு நாளைக்கு சில கப் காபி குடிக்க பழகி இருந்தால் அதில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதை தவிர்க்கவும். ஏனெனில், திடிரென்று காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் அதனாலும் தலைவலி ஏற்படலாம். உங்கள் மாதவிடாயின் போது உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நீங்கள் காபி எடுத்துக் கொள்வதை குறைப்பது உதவக்கூடும்.

4. மது:

மது உங்கள் ஆரோக்கியத்தில் பல தீங்குகளை விளைவிக்கும். இது உங்கள் மாதவிடாய் அறிகுறிகளை மோசமாக்கலாம். ஆல்கஹால் நீர் இழப்பு உணர்வை ஏற்படுத்தும். இது தலைவலியை மோசமாகும் மற்றும் bloating ஆவதற்கு வழிவகுக்கும். கூடுதலாக இது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Advertisment

5. காரமான உணவுகள்:

வயிற்றை எரிச்சலூட்டும் காரமான உணவு சாப்பிட்ட பிறகு பலர் வயிற்றுப்போக்கு, வயிற்று கோளாறு மற்றும் சில சமயங்களில் குமட்டல் ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள். உங்கள் மாதவிடாய் காலத்தில் காரமான உணவுகளில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. அவற்றை உண்ணும் பழக்கம் இல்லை என்றால் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சில உணவுகள் உங்கள் மாதவிடாயின் போது உங்களை நன்றாக உணர உதவலாம் மற்றவை உங்கள் வலிகளை மோசமாகலாம். நீங்கள் உண்ணும் உணவுகளும், தவிர்க்கும் உணவுகளும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பலன்களையும், அறிகுறிகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். மாதவிடாய் வலி உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். இது மிகவும் கடுமையான உடல்நல பிரச்சனையை குறிக்கலாம்.

 

Read in English: Foods to avoid during periods!

periods unhealthy food women health
Advertisment