Face glowவுக்கு உதவும் உணவுகள்!!

உங்கள் சருமம் உங்களிடம் உள்ள மிகப்பெரிய உறுப்பு, எனவே நீங்கள் அதை கவனித்துக் கொள்ள வேண்டும். பளபளப்பான தோல் பொதுவாக ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியின் அடையாளமாகக் காணப்படுகிறது.

author-image
Nandhini
New Update
face glow.jpg

Image is used for representation purposes only.

மந்தமான அல்லது வறண்ட சருமம், மறுபுறம், உங்கள் சிறந்ததை விட குறைவாக உணரலாம். இந்த கட்டுரையில் முக பொலிவுக்கு உதவும் உணவுகள் பற்றி கூறியுள்ளோம்.

Advertisment

"இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்."

தினமும் முகத்துக்கு cream போடுவதில் செலுத்தும் கவனத்தை, தினமும் vegetables சாப்பிடுவதில் செலுத்த வேண்டும். வெயிலில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி, தேன் அல்லது எலும்பிச்சை சாற்றுடன் பால் கலந்து முகத்தில் தடவிக்கொண்டு, 10 நிமிடத்துக்குப் பின் முகம் கழுவலாம். கருமை நீங்கும்.

சருமத்துக்கான உணவுகள்: foods for face glow

சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் என்றால் தயிர், பாதாம், வால்நட், சோயா, பட்டாணி, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். Vegan உணவு முறை என்றால் தேங்காய்ப் பால், சோயா பால்; அசைவம் சாப்பிடுபவர்களாக இருப்பின் முட்டை, முட்டையின் கரு, மீன் வகைகள், கடல் மீன்களை எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம் எந்த வகை உணவு எடுத்துக்கொள்வோரும், பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும்.

Advertisment

காய்கள் மற்றும் பழங்களில்தான் அதிக அளவு உடல் மற்றும் சருமத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. தொடர்ந்து ஜூஸ் குடித்து வருவதால் ஓரிரு மாதங்களில் முகப்பொலிவை பெறலாம்.வாழைப்பழத்துடன், வால்நட் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து milk shake போல் செய்து வாரத்தில் மூன்று நாள்கள் குடித்து வர... சருமத்துக்குப் பொலிவும், கேசத்துக்கு ஊட்டமும் கிடைக்கும். கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், வாரத்தில் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர, haemoglobin அதிகரிக்கும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உடல் நலனுக்கு மட்டுமல்ல...சரும ஆரோக்கியத்துக்கும்தான்!

Suggested Reading :  https://tamil.shethepeople.tv/health/are-glutathione-injections-a-fad-2023062

Suggested Reading : https://tamil.shethepeople.tv/society/breastfeeding-positions-2023042

Advertisment


Suggested Reading : https://tamil.shethepeople.tv/health/how-to-prevent-gential-warts-2021821

Suggested Reading : https://tamil.shethepeople.tv/health/types-of-genital-warts-2021790

foods for face glow