சுதந்திரம் என்பது அடைதல் அல்ல அது ஒரு பயணம். மக்கள் அனைவரும் ஒன்று சேராவிடில் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திருக்காது என்று புகழ் பெற்ற எழுத்தாளர் சித்ரா பானர்ஜி கூறுகிறார். இவர் சமீப காலத்தில் ‘சுதந்திரம்’ என்ற பெயரைக் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் பங்களாவில்(Bangla) தொடங்கி இந்திய சுதந்திர காலகட்டத்தை குறிக்கிறது (1946-47). இந்த புத்தகம் தீபா, ஜமினி, பிரியா என்ற மூன்று சகோதரிகள் அவர்களில் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளால் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை பற்றிய கதை. ஏன் இந்த புத்தகம் படிக்கத் தூண்டுகிறது என்றால், இந்த கதாபாத்திரம் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களாக உள்ளது.
இந்த புத்தகத்தை எழுத காரணம் என்ன?
"நான் 'தி லாஸ்ட் குயின்' (The Last Queen) புத்தகத்தை எழுதும் பொழுதிலிருந்து இந்த புத்தகத்தை எழுதுவதை பற்றி நினைத்திருக்கிறேன். இந்த புத்தகம் 1800-ல் ஆங்கிலேயர்கள் அதிகாரம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தை குறிப்பிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடமிருந்து இடங்களை கைப்பற்ற அவர்களால் முடிந்த வரை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்தனர். இந்த புத்தகத்தை எழுதும்போது இந்தியாவின் அந்த நிலைமையை நினைத்து நான் வருந்தினேன். எனவே, நான் அதில் முழுமையாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதையும், இந்தியா சுதந்திரம் அடைவதையும் எழுதினேன்."
பானர்ஜி 20 புத்தகங்களை படைத்தவர். ரவீந்திரநாத் தாகூரின் இந்திய சுதந்திரப் போராட்ட எழுத்துக்கள் அவரை கவர்ந்தது. குறிப்பாக Ghore Baire அவரை மிகவும் கவர்ந்தது. அதில் பிமலாவின் கண்ணோட்டத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை தாகூர் அழகாக எழுதியிருப்பார். இந்த மூன்று கதாபாத்திரங்கள் எழுதும் பொழுது அவர் தாகூரின் எழுத்துக்களை நினைத்து எழுதியதாக கூறியிருக்கிறார். எனவே, இந்த புத்தகத்தில் தாகூரின் சாயலை நம்மால் பார்க்க முடியும். அதேபோல் சரத் சந்திர சட்டோபாத்யாய் அவர்களின் எழுத்துக்களில் சமூகம் பெண்களை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை எழுதி இருப்பார்.
இந்தப் புத்தகத்தின் பெயர் இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் வாங்கிய கதை மற்றும் இந்த மூன்று சகோதரிகள் அவர்களின் கஷ்டங்களில் இருந்து கற்றுக்கொண்ட சுதந்திரம். அவர்களின் வாழ்க்கை பாடங்களின் மூலம் சுதந்திரம் என்பது சரியான விஷயத்தை செய்வது என்பதை தெரிந்து கொள்கின்றனர். சுதந்திரம் என்பது தனிப்பட்ட மனிதரின் தேவையல்ல, அது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஒன்று என்பதை இந்த புத்தகம் மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.
சுதந்திரம் என்பது பானர்ஜி வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கிறது. அவர் கூறுகிறார், “நாம் வயதாகி முதிர்ச்சியடையும் போது நம் அனைவருக்கும் சுதந்திரம் மாறுபடுகிறது. நான் இளம் வயதில் இருந்தபோது, சுதந்திரம் என்பது என் பெற்றோர் என்னைச் சுற்றி அவர்கள் அமைத்த விதிகளிலிருந்து விடுபடுவது. பின்னர், நான் வளர்ந்து சொந்தமாக வாழத் தொடங்கியபோது, என் சொந்தக் காலில் நிற்பது மற்றும் என் மீது நம்பிக்கை வைப்பது. முன்னெப்போதையும் விட இப்போது சுதந்திரம் என்பது ஒரு உள் உணர்வாக மாறிவிட்டது. இந்த சுதந்திரம், கெட்ட பழக்கங்கள் மற்றும் எதிர்மறையான சிந்தனைகளிலிருந்து சுதந்திரம் மற்றும் சுயநலம் மற்றும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களைச் செய்யும் எனது போக்கிலிருந்து விடுபடுவது. எனவே, இப்போது நான் சுதந்திரத்தை உள்ளார்ந்த பண்பாக நினைக்கிறேன்”