சலோமி மகிஜா அவர் தாய் ரஷ்மி மஹிஜா உடன் சேர்ந்து Foam Pantry என்ற பிரண்டை உருவாக்கியுள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் உழைக்கத் தொடங்கி தற்பொழுது அவர்கள் அதை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. வீட்டில் ஒரு அறையில் இருந்து தொடங்கிய தொழில் தற்போது சிறிய தொழிற்சாலையாக வளர்ந்துள்ளது. அவர்களின் எல்லா பொருள்களும் FDAவால் அங்கீகரிக்கப்பட்டது. தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாமல், தோல் மற்றும் முடிக்கு ஏற்றவாறு பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகளுடன் அவர்களின் பொருள்கள் உருவாக்கப்படுகிறது.
உருவான கதை:
"நாங்கள் ஷாம்பூ(shampoo) மற்றும் பாடி வாஷ்(Body wash) என்ற இரு பொருள்களுடன் தான் இதை ஆரம்பித்தோம். இன்று நிறைய வகையிலான சோப், பாடி லோஷன், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் மாஸ்க் முதல் ஹேர் கண்டிஷனர் வரை முடிக்கும், தோலுக்கும் ஏற்றவாறு பொருள்களை உருவாக்குகிறோம். நாங்கள் ஆரம்ப காலத்தில் ஆராய்ச்சிக்காக ஒரு DIY kit ஆரம்பித்து மக்களின் கருத்துக்களை ஆறு மாதங்களுக்கு பெற்றோம். அதன் பிறகு எங்களின் சிறந்த பொருட்களை காம்போ ஆஃபர்களில் தர தொடங்கியுள்ளோம்".
தொழிலின் வளர்ச்சி:
இந்த காலத்தில் உள்ள மார்க்கெட்டிங் டெக்னிக் மிகவும் உதவியாக இருக்கிறது என்று சலோமி கூறுகிறார். அவர்கள் இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங்கில்(Instagram Marketing) நிறைய கவனத்தை செலுத்துகின்றனர். அவர்களின் ஒரு reel வைரலானது. அதுவே அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அன்று முதல் அவர்களுக்கு நிறைய ஆர்டர்கள் வருகிறது மற்றும் விற்பனை அதிக அளவில் அதிகரித்துள்ளது.
"நாங்கள் பிறந்தநாள் பார்ட்டி, வளைகாப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் கேட்பது போல பொருட்களை செய்து தருகிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக செய்யும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் பட்ஜெட், நிகழ்ச்சிக்கு ஏற்ப தயார் செய்கிறோம். அதை இன்னும் தனித்துவமாகவும், சிறப்பாகவும் ஆக்க அதனுடன் சிறு குறிப்புகளையும் இணைக்கிறோம்" என்று கூறுகிறார்.
பிப்ரவரி 2022 எங்கள் இணையதளத்தை அறிமுகப்படுத்தினோம். இது எங்கள் பொருட்கள் இன்னும் நிறைய மக்களை சென்றடைய செய்யும் ஒரு முயற்சியாகும்.
சந்தித்த சவால்கள்:
இந்தப் பயணத்தில் பல சவால்களை எதிர் கொண்டு உள்ளனர். ஆர்டர்கள் டிலே(delay) ஆவது முதல் வாடிக்கையாளர் அதை வாங்கும் வரை, மூலப் பொருட்கள் மாறி வருவது முதல் போலியான பொருட்கள் அவர்களுக்கு வரும்வரை அனைத்தையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.
"ஆர்டர்கள் ட்ராக்(track) செய்வது சில சமயங்களில் சவாலாக இருக்கும். சில நேரம் கொரியர் சர்வீஸ்(courier service) சரியான நேரத்தில் பொருட்களை தராமல் இருக்கலாம். மக்கள் எங்களை நம்புவதால் நாங்கள் தினமும் கொரியர் சர்வீஸை அழைத்து பொருட்கள் சென்று விட்டதா என்பதை உறுதி செய்கிறோம். சரியான கொரியர் சர்வீஸை தேர்வு செய்வது கடினமாக தான் உள்ளது. நாங்கள் இன்னும் பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளோம்" என்று கூறுகிறார்.
அவர்களுடன் சேர்ந்து இன்னும் ஐந்து பேர் உழைக்கின்றனர். நாங்கள் அனைவரும் சேர்ந்து மூலப் பொருட்கள் முதல் தயாரிப்பு வரை, வாடிக்கையாளர் சந்தேகங்கள் முதல் பொருள் அவர்களுக்கு செல்லும் வரை, சமூக வலைத்தளங்கள் முதல் பொருட்களின் போட்டோகிராபி வரை, ஸ்பெஷல் ஆர்டர் மற்றும் பேக்கேஜிங் வரை அனைத்தையும் எங்கள் பொருள் மக்களை திருப்தி அடைய வேண்டும் என்பதை உறுதி செய்கிறோம்.
ஒரு புதிய பொருளை உருவாக்கும் முன் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆராய்ச்சி பேப்பர்கள், ஜர்னல்ஸ் மூலம் அவர்களின் அறிவுகளை வளர்த்துக் கொள்கின்றனர், அதற்காக Google Chrome நிறைய சார்ந்துள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள்:
உறுதியாக இருப்பது தொழில் முனைவோருக்கு தேவையான ஒன்று. "பல சமயங்களில் நீங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்று வருந்தலாம் மற்றும் உங்கள் தொழில் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லாதது போல தோன்றலாம். ஆனால் இதுபோன்ற சமயத்தில் தான் நீங்கள் நிறைய தைரியமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் யோசனையின் மேல் நம்பிக்கை கொண்டு இந்த தொழிலை தொடங்கியுள்ளீர்கள். அதனால் இந்த சிறிய தடைகள் உங்களை பின்வாங்க விடாதீர்கள்" என்று கூறுகிறார்.
புதிய விஷயங்களையும், விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை சுற்றியுள்ள மக்கள், வாடிக்கையாளர் மற்றும் உங்கள் குழுவினர் மூலமே நீங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
"நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் இருந்து ஆரம்பித்தோம். எனது தந்தை இந்த தொழிலுக்கு முதுகெலும்பாக இருந்துள்ளார் மற்றும் அவர்தான் இந்த முதலீட்டையும் செய்தார். இன்று நாங்கள் 40 முதல் 50 ஆயிரம் வரை மாதம் வருவாய் பெறுகிறோம் மற்றும் இன்னும் வளர புதிய யோசனைகளை சிந்தித்து வைத்துள்ளோம்" என்று கூறுகிறார்.
எதிர்கால திட்டங்கள்:
எல்லா வீட்டிலும் எங்கள் பொருட்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். மக்களும் நல்ல தரமான ஸ்கின் கேர்(skincare) மற்றும் ஹேர் கேர் (haircare) பொருட்களை வாங்க நினைக்கிறோம். Foam Pantry உள்ள பொருட்கள் அனைத்தும் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து தான் உருவாக்கப்படுகிறது. எல்லா பழங்களும், காய்கறிகளும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மக்களுக்கு இயற்கை எவ்வளவு அற்புதமானது என்பதை அறிய வைக்க முயல்கிறோம்.
புதிய தொழில் முனைவோருக்கு அறிவுரை:
"எல்லாரும் உங்கள் பொருட்களை வாங்க வேண்டும் மற்றும் எல்லாரும் உங்கள் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் என்று கூறிய அவர் அதனுடன் சேர்த்து அவரின் சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரும் அவர்களின் பொருளை வாங்கவில்லை. இருப்பினும் இது எங்கள் உறவை பாதிக்கவில்லை". ஆனால், அதற்கு மாறாக யார் என்றே தெரியாத நபர்கள் நல்ல வாடிக்கையாளராக மாறி உள்ளனர் மற்றும் அவர்களின் பெரிய ஆதரவாக இருந்து வருகின்றனர்.