Advertisment

இந்திய கலைகளுக்கு உயிர் தருகிறார் ஜக்ஜ்யோத்

ஜக்ஜ்யோத் என்பவர் தனது இருபது வருட வேலையை விட்டு தொழில் முனைவராக மாறி இருக்கிறார். அவரின் தொழில் பற்றியும், தொழில் முனைவருக்கு தேவையான குறிப்புகளையும் இதில் பகிர்ந்து உள்ளார்.

author-image
Devayani
28 Dec 2022 | புதுப்பிக்கப்பட்டது 04 Mar 2023
இந்திய கலைகளுக்கு உயிர் தருகிறார் ஜக்ஜ்யோத்

Image of Jagjyot

தொழில் முனைவராக வேண்டும் என்பதற்காக தனது 12 வருட HR வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஜக்ஜ்யோத்(Jagjyot). மோஹித் அலுவாலியா உடன் சேர்ந்து 2019 ஆம் ஆண்டில் Raamaé என்ற வீட்டு மற்றும் வாழ்க்கை முறை பிரண்டை(brand) தொடங்கியுள்ளார். அவர்கள் வடிவமைப்பு முதல் தயாரிப்பு வரை அனைத்தையும் செய்கின்றனர். 

Advertisment

Raamaé என்பது பாலினீஸ்(Balinese) வார்த்தை. அது மக்கள் வாழ்க்கை முறையை குறிப்பது மட்டுமின்றி நெரிசலான அல்லது குழப்பமான உலகத்தில் மகிழ்ச்சியை கண்டுபிடிக்க உதவுகிறது என்று இரு பொருள்களை கொண்டுள்ளது.

pillow

"வடிவமைப்பு, நிறம், உணர்வு இதை அடிப்படையாக வைத்து நாங்கள் செய்யும் பொருட்கள், அன்றாட வாழ்வில் அமைதியையும், அழகையும் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம். ஒவ்வொரு பொருளும் ஒரு நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நாங்கள் அதை வடிவமைக்கிறோம்." என்று ஜக்ஜ்யோத் கூறுகிறார்.

Advertisment

மேலும் இது பற்றிய அவர் கூறும் போது "பொருட்களை வேகமாக செய்ய வேண்டும் என்பதற்காகவும், மலிவான விலையில் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தப்படும் பொருட்கள், நம் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. அது மட்டும் இன்றி அவை நிலையான ஒரு பொருளும் அல்ல. எனவே, அழிவில் இருக்கும் கலைகளை உயிருடன் வைத்திருப்பதில் ஆர்வமுள்ள கைவினை கலைஞர்களுக்கு எங்கள் பொருட்களில் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறோம்"

எது உங்களை வேலையை விட்டு வேறு பாதையை தேர்ந்தெடுக்க ஊக்குவித்தது?

"சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பாலிக்கு ஒரு பயணம் சென்றிருந்தேன். அதுவே என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. நான் அங்கே கடை தெருக்களுக்கு சென்ற பொழுது அங்கு அந்த நாட்டின் கலைகளால் உருவான கைவினை பொருட்கள் இருப்பதையும், அவற்றின் தரத்தையும் நான் கவனித்தேன். இந்தியாவில் தன் மண்ணில் கலைகள் பெரிய அளவில் மதிக்கப்படவில்லை என்றும் ஏன் அவை பிரபலமாக இல்லை என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது" என்று அவர் விளக்குகிறார்.

அது அவரை இந்திய கலைகளை ஆராய்ச்சி செய்யத் தூண்டியது. குறிப்பாக பிளாக் பெயிண்டிங் (block printing) பற்றி நிறைய தெரிந்து கொள்வதற்காகவும், அவற்றின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும், அந்த கலையை பற்றியும் முழுமையாக அறியவும், கைவினை கலைஞருடன் நேரத்தை செலவிட்டார். இன்று இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்ப இந்த கலையை மக்களுக்கு பிடித்தவாறு எப்படி வடிவமைப்பு செய்வது என்று தீவிரமான யோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு மக்களுக்கு பிடிப்பது போல வடிவமைக்க தொடங்கினர். வடிவங்கள், நிறங்கள் போன்ற முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்தினர். பின்பு அதுவே Raamaé என்ற தொழிலாக மாறியது. 

Advertisment

block printing

கைவினைப் பொருட்கள் செய்யும் செயல் முறையை பற்றி பேசும்பொழுது, "நாங்கள் எங்களின் ஒரு பொருளை செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகிறது என்பதை கணக்கெடுத்தோம். நாங்கள் வடிவமைக்க தொடங்கிய நாளிலிருந்து ஒரு முழுமையான பொருளை செய்து முடிப்பதற்கு 26 நாட்கள் எடுத்தது. அதுமட்டுமின்றி 12 கைவினை கலைஞர்கள் ஒன்றாக உழைத்தால் மட்டுமே ஒரு பொருளை முழுமையாக செய்து முடிக்க முடிந்தது. ஒரு பொருளை செய்து முடிப்பதற்கு தேவையான கைவினை கலைஞர்களும், அதற்கான செயல்முறைகளும் வியக்க வைக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

தொழில் முனைவர் என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. “நான் தொடர்ந்து பல முடிவுகளை எடுக்க வேண்டும், பல கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இந்த காலத்திற்கு ஏற்றது போல எது நல்லது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை வழங்க வேண்டும்” என்கிறார்.

Advertisment

தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில் வடிவமைப்பு, தயாரிப்பு, பிராண்டின், மார்க்கெட்டிங், ஆட்கள் சேர்ப்பது, வாடிக்கையாளரின் அனுபவம் என அனைத்தையும் தனி ஆளாக அவர் பார்த்துக் கொண்டார். இறுதியில் அந்தப் பொருள் முழுமை அடைந்த பிறகு, மக்களிடம் அதற்கான வரவேற்பு கிடைப்பதை பார்க்கும் பொழுது அவை கடின உழைப்பு தகுதியானது தான் என உணர வைக்கிறது என்று கூறுகிறார்.

quilt

தொழில் முனைவுக்கு தேவையான திறமைகள்:

தொழில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தொடர்பு கொள்ளுதல் மற்றும் நேர மேலாண்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். வேலைகளை பிரித்துக்கொண்டு எது முக்கியமான வேலை என்று தீர்மானிக்க வேண்டும். அது மட்டும் இன்றி ஒரு வேலையை தள்ளிப் போடாமல் இருக்க குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தொழில் பற்றி பேசும் பொழுது வீணான பேச்சுகளை தவிர்த்து ஒழுங்காக தேவையான உரையாடல்களை மட்டும் பேச வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார்.

"அதேபோல் தொழில் முனைவர்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களின் உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிக்கடி அவர்களை பாராட்டுவது, நேர்மறையான விஷயங்களை பேசுவதன் மூலம் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்."

தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கும் இளம் பெண்கள் அதை தொடங்குவதற்கு முன் பணத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணத்தைப் பற்றிய அறிவு, அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தை எப்படி சமாளிப்பது என்பதை புரிந்து கொள்ள உதவும். அதேபோல், டிஜிட்டல் மீடியா ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். "என்னால் என் வாழ்க்கையை கூகுள் டாக்குமெண்ட்ஸ் இல்லாமல் நினைத்து பார்க்க முடியாது. ஏனென்றால், ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை அதில் தான் நான் அனைத்தையும் பதிவிட்டு வைத்திருக்கிறேன்" என்று கூறி விடை பெற்றுக் கொள்கிறார்.

Advertisment
Advertisment