Advertisment

இளம் பெண் புகைப்படக் கலைஞர் - ஈசான

author-image
Devayani
New Update
Aesana

மும்பையை சேர்ந்த ஈசான சிறு வயதிலிருந்து புகைப்படங்களை பார்த்து அதன் பின் உள்ள செயல்முறையை நினைத்து வியந்திருக்கிறார். புகைப்படங்களுக்கு பின்னால் உள்ள கதையையும், அதனை சேகரிக்கும் ஆசை வந்ததாலும் புகைப்படம் எடுப்பதை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள நினைத்தார். அவர் போட்டோகிராபி பற்றி படித்துவிட்டு களத்தில் இறங்கிய போது இந்தத் திரையில் நிறைய போட்டியாளர்கள் இருப்பதை புரிந்து கொண்டார். அதனைக் கண்டு பின் வாங்காமல் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள தொடர்ச்சியாக முயற்சிகள் எடுத்தார். 

Advertisment

தனது 24 வயதில் ஈசனாவின் போர்ட்போலியோ பல அனுபவங்களை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, தொலைக்காட்சியில் இருக்கும் நட்சத்திரங்கள், திரைப்படத்துறையில் மற்றும் மாடலிங் போன்ற துறைகளில் உள்ள பிரபலங்களுடன் வேலை செய்துள்ளார். தற்போது அவர் தனது திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டு, திரைப்படத்தில் போட்டோகிராபி செய்ய வேண்டும் என்பதை உறுதியாக கொண்டுள்ளார்.

எது உங்களை போட்டோகிராபராக மாற வைத்தது?

ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதையை சொல்கின்றது என்பது என்னை ஈர்த்தது. நான் புகைப்படங்களின் மூலம் நேரத்தை உரைய வைக்க தொடங்கினேன். அது பின்னால் உள்ள கதையும் எனக்கு பிடித்திருந்தது. நான் போட்டோகிராபி தான் தொழிலாக செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து எடுத்த முடிவு. சிறு வயதில் இருக்கும் போது எனது பொழுதுபோக்குக்காக இது ஆரம்பித்தது. வளர்ந்தது பிறகு இதை தொழிலாக மாற்றிக் கொள்ள நினைத்தேன். எனது பெற்றோர்களும், ஆசிரியர்களும் எனக்கு இதில் ஆதரவாக இருந்தனர்.

உங்களை வியக்க வைத்த போட்டோகிராபர்ஸ் யார்?

Rid Burman மற்றும் Errikos Andreou என்னை அவர்களின் புகைப்படங்களின் மூலம் வியக்க வைத்தனர். அவர்களின் புகைப்படத்தை பார்க்கும் போது அதில் உள்ள சமநிலை என்னை எப்பொழுதும் வியக்க வைக்க தவறுவதில்லை.

Advertisment

சுதந்திரமான ஒரு போட்டோகிராபராக இருப்பது எப்படி உள்ளது?

என் வாழ்க்கை மற்றும் அதை சுற்றி உள்ள முடிவுகளை சுதந்திரமாக தீர்மானிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில், மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அது மட்டும் இன்று பெண்களுக்கு சொல்ல நிறைய கதைகளும், அனுபவங்களும் இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக அவர்களுக்கு பிடித்ததை செய்வதற்கு ஒரு இடம் கிடைத்தால் போதும்.

photography⁠⁠⁠⁠⁠⁠⁠

உங்களின் இலக்குகளை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

கலை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அது சுதந்திரமான எண்ணத்தை கொண்டுள்ளது. கலையின் சிறந்த விஷயமே இதுதான். நான் ஒரு இலக்கை பெறுவதற்கு ஒரு செயல்முறை மட்டும் பயன்படுத்துவதில்லை. சில நேரம் இசை, சில நேரம் சமயங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வெளிச்சத்தை எப்படி வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆராய்ந்து எனது மனநிலைக்கு ஏற்றது போல விஷயங்களை மாற்றி அமைத்து எனக்கு தேவையான புகைப்படத்தை நான் எடுப்பேன். நான் இப்பொழுதும் என் திறமைகளை வளர்த்துக் கொள்ள நினைப்பதால், அது என்னை முன்னேற ஊக்குவிக்கிறது.

Advertisment

ஒரு இளம் பெண்ணாக இந்த துறையில் இருக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

எனது அனுபவம் திருத்தியாகவும், இந்தப் பயணம் முழுவதும் நான் கற்றுக் கொண்ட பாடங்களும் தான் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து இப்போது வரை அனைத்தையும் நானே செய்திருக்கிறேன் என்பது வியப்பாகவும், அதனை பாதுகாக்கவும் நினைக்கிறேன். நிறைய நாட்கள் கடினமாக இருந்தது. அந்த சவால்கள் என்னை மேலும் உயர செய்தது. மேலும் எனது பெற்றோரின் ஆதரவிற்கு நான் எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன் அதுதான் என்னை இதுவரை வரவே செய்தது.

நீங்கள் எப்போதாவது பாலின பாகுபாட்டை கடந்து வந்திருக்கிறீர்களா?

இந்தத் துறையை பாலின பாகுபாடு இருப்பது மறைக்க முடியாத ஒன்று. ஆனால் அது மாறி வருகிறது என்று நம்புகிறேன். மற்ற போட்டோகிராபர்கள் அனுபவங்களை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு இந்த அனுபவம் என்னை என் திறமைக்காக பலரும் வரவேற்றனர். அனைவரும் சமம் என்ற எண்ணம் மனதில் இருந்து தோன்ற வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் திறமைசாலிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும்.

வளர்ந்து வரும் போட்டோகிராபர்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

முதலில், நீங்கள் போட்டோகிராபியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் மற்றும் அதன் மேல் உள்ள நோக்கத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் ஒரு பயணத்தை முன்னெடுக்கிறீர்கள், அதனால் உங்களுடன் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்க பாருங்கள். ஒருவர் சென்று கொண்டே இருக்க வேண்டும் அந்த பயணத்தில் அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும். எல்லா தொழிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதனால் நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் கர்வம் கொள்ளாமல் இருப்பது சிறந்தது என்பதே என்ன ஆலோசனை.

interview women photographer
Advertisment