போனி கபூரின் துணிவு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவனான அஜித்குமார் நடித்துள்ளார். இந்த ஆக்சன்-ஹிஸ்ட(heist) திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கியிருக்கிறார் மற்றும் அதனை போனி கபூர் தயாரித்துள்ளார்.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு அஜித்குமார் நடித்த திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாக போகிறது. அவரது முந்தைய படமான வலிமை பிப்ரவரி 2022இல் வெளியானது. இதுவும் ஹச் வினோத் இயக்கியது மற்றும் போனி கபூர் தயாரித்தது. துணிவு படத்தின் டிரெய்லர் புத்தாண்டு தினத்தன்று Zee Studio South அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதை படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அது 50 மில்லியன் பார்வையாளர்களையும், 1.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
விஜய்யின் வாரிசு படமும், துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதால், இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். 2011ம் ஆண்டு வெளியான அஜித்குமாரின் மங்காத்தா படத்தைப் போலவே இப்படம் இருப்பதாக சில நடுநிலை கருத்துக்களை தெரிவிக்கின்றனர் மற்றும் சிலர் இப்படம் விஜையின் முந்தைய படமான பீஸ்ட் உடன் இதை ஒப்பிடுகின்றனர்.
டிரெய்லர்:
துணிவு டிரெய்லர் துப்பாக்கியுடன் தொடங்குகிறது. மேலும், அஜித் குமார் இதில் அவரது குழுவுடன் சேர்ந்து ஒரு வங்கியை கைப்பற்றுகிறார். எனவே, அஜித்குமார் இதில் ஒரு நேர்மறையான கதாநாயகனாக இல்லாமல், எதிர்மறையான பக்கத்தை கொண்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஒரு அதிரடி காட்சியில் முகமூடி அணிந்து துப்பாக்கிகளால் சுடுவது மூலம் அஜித் குமார் அறிமுகம் ஆகிறார்.
டிரெய்லரில் இறக்கமற்ற கொள்ளைக்காரனாக அஜித்குமார் காட்டப்படுகிறார். இதில் அவர் எதிர்மறையான வேடங்களில் நடிப்பதில் சிறந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படத்தில் சண்டையிடும் காட்சிகள் நிறைய இருப்பதாக தெரிகிறது. இந்த நிகழ்வுகளுக்கான காரணங்களும், ரகசியங்களும் படத்தில் வெளியாகும்.
துணிவு கதை மற்றும் நடிகர்கள்:
கதை:
டிரெய்லரை பார்க்கும்போது அஜித் எதிர்மறையான ஹீரோவாக நடிப்பது போல் தெரிகிறது. மஞ்சு வாரியர் இதில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், ஆக்ஷன் காட்சிகளில் மற்றும் அஜித் நடத்தும் இந்த கொள்ளை காட்சிகளில் அவர் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. மேலும், இந்த குற்றத்தில் அஜித்துக்கு அவர் துணையாக இருப்பது போல ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. ஒரு கொள்ளைக்காரன் மற்றும் அவனது குழுவினர் ஒரு வங்கியை கைப்பற்றி, அனைவரையும் பணயக்கைதிகளாக வைத்திருப்பது பற்றிய கதையே இந்த திரைப்படம்.
பணயக்கைதிகளை விடுவிக்கும் வேண்டுமெனில் அரசு சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லரின் மூலம் நம்மால் இதையே புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இதில் உள்ள திருப்பங்கள் மற்றும் எதற்காக வங்கியை கைப்பற்றுகிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கக்கூடும்.
நடிகர்கள்:
அஜித் குமார் கதாநாயகனாக இதில் நடித்துள்ளார். மேலும், அவருக்கு கதாபாத்திரத்தில் கெட்ட விஷயங்களும் இருப்பதாக காட்சியளிக்கிறது. மஞ்சு வாரியரும் இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, ஜான் கொக்கேன், சுந்தர், வீரா, பிரேம் குமார், பகவதி ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் வளர்ந்து வரும் கலைஞர்களான சிபி சந்திரன், அமீர், பாவணி ரெட்டி மற்றும் யூடியூபில் மூலம் பல ரசிகர்களை கொண்டுள்ள ஜிபி முத்துவும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரைப்படம் வெளியாகும் நாள்:
இத்திரைப்படம் ஜனவரி 11, 2023 அன்று பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் வெளியாக உள்ளது. மேலும் விஜய்யின் வாரிசு படமும் அதே நாளில் வெளியாவதால் மக்களின் எதிர்பார்ப்பும், உற்சாகமும் அதிகரித்துள்ளது. பலமுறை அஜித் மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. ஆனால், பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதுபோன்று இவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதனால் திரையரங்குகளை சமமாக பிரித்து இரு திரைப்படங்களையும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Suggested Reading: வாரிசு படத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது